பதநீர் - பயன்கள் Juice of toddy palm | palm juice natural

 பதநீர் - பயன்கள்


இந்த பதநீர் ஒரு சைவ பானம் அதுமட்டும் அல்ல நமது தேசிய பானம் என்றும் கூறலாம். இது கலப்படமில்லாமல் அருந்தினால் இதன் சிறப்பே தனி. நம் நாட்டில் பெரிய அளவில் இதை உற்பத்தி செய்து மருத்துவத்திற்கு பயன்படுத்தினால் இதன் செயல்பாடுகள் அளப்பரியது பல்வேறு நோய்களை நீக்கவல்லது. இந்த பதநீரிலும், பனை வெல்லத்திலும் எல்லாவித ஊட்ட சத்தும் உள்ளது என கண்டு அறிந்திருக்கிறார்கள். கோடை காலத்தில் தாகம் தணிக்க அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. இதை பருகினால் உடலுக்கு நல்ல குளிர்ச்சியை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது. கோடையில் ஏற்படும் நீர் கடுப்பை நீக்க பதநீர் அருந்தலாம்.


தொழு நோயை நீக்கும் பதநீர்

நாளும் ஒரே பனை மரத்தில் இருந்து பதநீர் இறக்கி காலை ,மாலை அருந்தி பனைஓலைப்பாயில் படுத்து பனைவிசிரியியை பயன்படுத்தி பனைஓலையில் உணவு உண்டு பனைஓலை குடுசையில் 96 நாள்கள் தாங்கி இருந்தால் தொழு நோய் நீங்கும் என ஒருமருத்துவ குறிப்பு உண்டு.


மாதவிடாய் தடை

மாதவிடாய் தடைபட்டு அதனால் கருப்பை சார்ந்த வலி, வாய்வு, காட்டி முதலியவற்றினால் பெண்கள் அவதிப்படுவார்கள் அது மட்டும் அல்லாமல் இந்த காலத்தில் மார்பகம் விம்மி பருத்து ஒருவிதமான சன்னி நோய்போல உண்டாகும் இந்த நோய்களுக்கு பனை குருத்தின் உள்பகுதியை உட்கொண்டால் மாதவிடாய் சிக்கலின்றி வெளியேறி நோயை நீக்கும்.


இரத்த கடுப்பு

வெந்தயத்தை 50 கிராம் எடுத்து லேசாக வறுத்து பொடித்து காலை,மாலை இருவேளை 50 மிலி அளவு சூடாக்கிய பதநீரில் கலக்கி அருந்திவர இரத்த கடுப்பு .மூல சூடு தணியும். அதேபோல மஞ்சளை பொடித்து அரை தேக்கரண்டி 50 மிலி காலையில் இறக்கிய பதநீரில் கலக்கி உட்கொள்ள வயிற்று புண் தொண்டைப்புண் ,வெப்ப கழிச்சல் , சீத கழிச்சல் நீங்கும்.


பதநீர்

இந்த பதநீரை இறக்க தமிழ் நாட்டில் தடை உள்ளது காரணம் வேலைவாய்ப்பில்லாத தமிழர்கள் வேலை பெற்றுவிடுவார்கள் என்பதாக இருக்குமோ ? அதுமட்டும் அல்லாமல் இந்த பதநீர் இறக்குவதால் மற்ற மயக்கப் பொருட்கள் (அரசு விற்கும் சாராயம்) விற்பனை குறையும்தானே ?அதனால் முதலாளித்துவம் பயனடையாது தானே ? வருகிற புதிய அரசாகிலும் இந்த பதநீர் இறக்க மக்களுக்கு வாய்பளித்து பனைபொருட்களை சந்தை படுத்த நடவடிக்கை எடுக்கலாம்.


ஒருகுவளை ( 250 மிலி ) பதநீரில் உள்ள சத்துகள்

சக்கரை 28 .8 கிராம்

காரம் 7 .௨ கிராம்

சுண்ணாம்பு சத்து 35 .4 மி.கிராம்

இரும்பு சத்து 5 .5 மி.கிராம் 

பாசுபரசு 32 .4 மி.கிராம்

தயமின் 82 .3 மி.கிராம்,    

ரிபோபிலவின் 44 .5 மி.கிராம்

அசுகர்பிக் அமிலம் 12 .2 மி.கிராம்,      

நிகோடினிக் அமிலம் 674 .1 மி.கிராம்

புரதம் 49 .7 மி.கிராம்,   

கலோரிகள் 113 .3 மி.கிராம்

இதில் நார் சத்து மிகுந்திருப்பதால் பெண்களின் பேரு காலத்திற்குப்பின் உண்டாகும் மலச்சிக்கலை நீக்குகிறது. இதயத்தை வலுப்படுத்துகிறது . இதில் உள்ள சுண்ணாம்பு சத்து எலும்புகளை வலுபடுத்துகிறது.


இதில் இயல்பாகவே அனைத்து சத்துக்களும் நிரம்பி இருப்பதால் பாலுணர்வை கூட்டுகிறது என்கிற மருத்துவக்குறிப்புகளும் காண கிடைக்கிறது சித்த மருத்துவம் என்பது வரட்டுத்தனமான கோட்பாடுகளை கொண்டிருக்கவில்லை இதில் முறையான அறிவியல் ஆய்வுகள் கொட்டிகிடப்பதால் நம் மக்கள் விழித்தெழுந்து நம் சித்த மருத்துவத்தை மீட்டு பயன்படுத்திட வேண்டும்.