நஞ்சில்லா விருந்து Food without Poison

 நஞ்சில்லா விருந்து


இன்று எங்கள் திருமண நாளையோட்டி என்ன விருந்து செய்யலாம் என்று தோட்டத்திற்கு சென்றால்


கத்திரிக்காய், அவரைக்காய், நாட்டு தக்காளி கிடைத்தது!


தினமும் இதையே தான் குழம்பு வைக்கின்றோம் மாற்றி யோசிப்போம் என்று முடிவெடுத்தேன்!!


வெளிநாட்டு காய்கறியான கேரட் , பீன்ஸ், கோஸ்  போட்டு தான் சைவ பிரியாணி வைத்து உண்டு இருக்கின்றோம்!!


சரி வித்தியாசமாக நமது நாட்டு காய்கறிகள் பிரயாணி வைத்தால் எப்படி இருக்கும் என்று எனக்கு எண்ணம்!!


உடனே வேட்டிய  கட்டிகிட்டு கத்திரக்காய், அவரைக்காய் ,தக்காளி பறிச்சிட்டு சமையல்கட்டுக்கு போனேன்!!


அங்க நம்ம அறல் கழனியில் விளைந்த சின்ன வெங்காயம் , பச்சை மிளகாய் பல்ல காட்டிகிட்டு இருக்க!!


எல்லாரையும் பிடிச்சு ஒட்ட வெட்டினேன்!!


 நடுவுல ஆற்காடு கிச்சலி பச்சரசி ஒரு பாத்திரத்தில போட்டு தண்ணீர் ஊற்றி மேல எண்ணெய் கொஞ்சம் தெளித்து, அதிலேயே சோம்பு , இலவங்கம் போட்டு வெற வெறன்னு மிலிட்டிரி ஆபிஸர் மாதிரி வெடிச்சு வச்சிட்டேன்!!!


அந்த பக்கம் நம்ம அறல் மரச்செக்கு நல்லெண்ணெய் 100 மில்லி வானல்ல போட்டு கத்தரி, அவரை மட்டும் தனி தனியா எண்ணெய்ல சூடா குளிப்பாட்டி பொறிய வச்சு எடுத்து வச்சிட்டேன்!!


அதில் மீந்த நல்லெண்ணெய்ல இன்னும் கொஞ்சம் அறல் நல்லெண்ணெய் சேர்த்து சோம்பு , இலவங்கம், பட்டை சேர்த்து வதக்கி, சின்ன வெங்காயம் , நாட்டு தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, உப்பு இப்படி சகல சொந்தக்காரங்களையும் கொட்டி வதக்கி!!


கடைசியா நம்ம அறல் கழனியில  விளைந்த நாட்டு மிளகாய்ல எடுத்த மிளகா பொடி போட்டு! கூட கரம் மசாலா கொஞ்சம் போட்டு! கலந்து அப்போ  வதக்கிய கத்தரி, அவரை இதுல கொட்டி கிளரி !!


கடைசியா கிச்சலி சாதத்தையும், இந்த குழம்பையும் வானல்ல சைனீஸ் style இல்லாம, இந்தியன் முறையில்லாம நம்ம முறையில  வதக்கி மேல தோட்டத்து கறிவேப்பிலை தூவி!!


தட்டுல போட்டு நாட்டு மாட்டு நெய் விட்டு திருமண நாள் பரிசா மனைவிக்கு கொடுத்தேன் பாருங்க!!!


அந்த பிரியாணி சுவை இருக்கே!!!😋


நம்ம அமிழ்தினி முதல் முறையா  பிரியாணிய அவ்ளோ சாப்பிட்டு இருக்கா!!.. அப்பா ன்னு கூப்பிட்டு நல்லா இருக்குனு சைகை காமிச்சா பாருங்க!!!😍😍


வீட்டு தோட்டத்த இன்னும் செம்மை படுத்தனும்


நம்ம கிராமத்துல தாங்க காய்கறி வாங்காம குடும்பத்த ஓட்ட முடியும்!!


(குறிப்பு : மசாலா பொருட்கள் அனைத்தும் நஞ்சில்லாமல் விளைந்தவையே)


-உழவர் வ.சதிஸ்.,

அறல் கழனி,

கோட்டப்பூண்டி,

செஞ்சி,

8940462759