Showing posts with label seed harvest. Show all posts
Showing posts with label seed harvest. Show all posts

விதை சேமிப்பு Seed collection and preservation

 விதை சேமிப்பு...

நாம எல்லாரும் நிறைய செடி வளர்ப்போம், ஆனா அதிலிருந்து விதை எப்படி எடுக்கனு தெரியாமல் இருப்போம், அல்லது தோனாது, ஆனா இன்றைய கால சூழ்நிலைக்கு விதைகள் சேகரிப்பு மிக அவசியம், ஒவ்வொரு முறையும், விலைக்கு வாங்குவது அவசியமில்லாத ஒன்று, ஒரு செடி வளர்த்தால் அதில் காய்கள் பறிச்சு சிறிது நாள் ஆனதும் விதை எடுத்து வைப்பது அவசியம், இதில் பழங்களாக இருந்தால் நன்கு பழுக்கவைத்து விதை பிரித்து நிழலில் உலர வைத்து அதில் சாம்பல் கலந்து வைத்தால் மறுவருடம் நமக்கு பயன்படும், பூச்சிகள் விழாமல் விதையை பாதுகாக்க அமாவாசை இரவு நிலவொளியில் வைத்து பகலில் அதிக வெயில் இல்லாமல் சூரிய ஒளியில் வைப்பது நல்லது, உதாரணமா வெள்ளரி விதை சேகரிக்கும் போது நீரில் மூழ்கும் விதைகளே தேரிந்தெடுத்துவைக்கவேண்டும், மிதக்கும் விதைகள் முளைக்காது, ஒரு சில விதைகள் முற்றியவுடன் காய்கள் வெடித்து சிதறிவிடும், உதாரணமா வெண்டைக்காய், கனகாம்பரம், சங்குப்பூ, அதன் காலமறிந்து சரியான நேரத்தில் எடுத்து சேமிக்கவேண்டும், கிராமங்களில் எளிதா விதையை தேர்வு செய்து சேமிச்சிருவாங்க, ஒரு மூட்டை மொச்சைகாய்கள், தட்டைப்பயிர்கள் கொட்டிக்கிடந்தாலும், விதைக்கு என்று அழகா தேர்ந்தெடுத்து வைச்சிடுவாங்க, ஆனால் இன்று விதைக்கும் நேரத்தில் வியாபாரிகள் விற்பனைக்கு வருவதால் மிக எளிதா வாங்கிடலாம் னு நினைச்சி எடுத்துவைக்க தவறிடறாங்க, இதனால் ஏற்படும் விளைவு என்வென்றால் அந்த விதைகள் நன்றாக வளரும், உதாரணமா அந்தவியாபாரியிடம் பாசிபயறு வாங்கறாங்கனு வைச்சிக்கலாம், அதை ஆடி மாதம் விதைப்பாங்க, செடி நல்ல செழிப்பா வளரும் காய் நிறைய வரும் னு எதிர்பார்ப்பாங்க ஆனா வருவதில்லை, ஏமாற்றம்தான், இந்த முறை உரம் நம்மபோடல அதனால் காய் வரலனு , மறு வருடம் நிலத்திற்கு உரம் என்று சொல்லும் மருந்துகளை கொட்டி வாழ்நாள் முழுவதும் மண்ணின் வளம் கெடுக்கும் பல பெயர்களில் வரும் உரங்களை விலைக்கு வாங்கி கொட்டுவாங்க...ஆனா இங்கே பிரச்சனை விதை..... நாம நம்ம நிலங்களில் தேர்ந்தெடுத்துபகிர்ந்துகொண்ட விதைகள் 2 வருடம் உயிர்ப்பு தன்மையோடு இருக்கும், அதிலும் சிறுதானியங்கள் 12 வருடங்கள் உயிர்ப்புத்தன்மையோடு இருக்கும், 

உறங்கும் உயிர்தன்மையுள்ள விதைகளை, மண்ணிலிட்டு நீர் தெளித்து எழச்செய்வோம்,  ஒரு கையளவு உணவில் உயிர்த்தன்மையையும் ஆரோக்கியத்தையும் காண்போம்.....நன்றி 🤝🙏