திப்பிலி (Piper Longum) மிளகிற்க்கு அண்ணன் இதன் இலைகளோ வெற்றிலைக்கு தம்பி

 


பழங்காலமாக நம் சமையல் அறையில் இருந்தது திப்பலி  மிளகாய் வந்தவுடன் நம்மிடம் இருந்து வெளியேறிவிட்டது தற்செயலா திட்டமிடபட்டதா என தெரியவில்லை மிளகாய் திப்பிலி இரண்டிலுமே காரம் இருக்கிறது ஆனால் திப்பிலியில் மட்டுமே காரமும் கூடவே சாதாரண சளி முதல் ஆண்மையை அதிகரிப்பு வரை என ஏகபட்ட மருத்துவ குணம் இருக்கிறது


நம் காலசூழ்நிலையில் சாதாரணமாக வளரகூடிய கொடிதாவரம் இது..வீட்டிலும் மொட்டமாடியிலும் வளர்க்கலாம் எங்கள் வீட்டில் பல ஆண்டுகளாக திப்பிலி செடி வளர்க்கிறோம்..பழங்குடி மற்றும் கிராம மக்கள் அசைவ உணவிற்க்கு பின் திப்பிலி செடியின் இலையை மென்று சாப்பிடுவார்கள்,.இதன் இலை ஜீரண ஆற்றலை அதிகரிக்கும் அதனால்தான் வெற்றிலையின் தம்பி என்று முதல்வரியில் சொல்லியிருந்தென்


சளி,காசநோய், காய்ச்சல், கபம், கோழைச்சளி,   இருமல்,வாய்வுத் தொல்லை, வயிற்றுப் பொருமல், வறட்டு இருமல், இளைப்பு, களைப்பு,  வெள்ளைப் படுதல், போன்ற பிரச்சனைக்கு உணவிலும் சேர்த்துகொள்ளலாம் அல்லது பவுடர் செய்து மிளகு தூள் போல பயன்படுத்தலாம் ஆனால் மிளகைவிட காரம் அதிகம்,,திப்பிலி தூளை நெய் அல்லது நாட்டு சர்க்கரையுடன் சாப்பிட்டால் "அந்த

விசயத்தில் பலம் அதிகமாகும்


திப்பிலி பொடியை இரண்டு ஸ்பூன் எடுத்து வெற்றிலைசாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சளி காய்ச்சல் இருமல் குணமாகும்

திப்பிலி பொடியுடன் சமஅளவு குப்பை மேனி இலையை நிழலில் உலர்த்தி  பொடி செய்து சேர்த்து சாப்பிட்டால் மூலம் பெளத்திர குணமாகும்

திப்பிலி 5 பங்கு தேற்றான் விதை  3 பங்கு இவை பொடி செய்து அரிசி கழுவிய  நீரில் காலை மாலை என இருவேளை மூன்று நாட்கள் சாப்பிட்டால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிகரித்து போகும் ரத்தபோக்கு  பிரச்சனை சரியாகும்.


திப்பிலியை தூக்கி வைத்து கொண்டாடலாம். வீட்டில் வளர்க்க தொடங்குகள்

7 ம் நாளுக்கான உணவு 7th day food

 அனைவருக்கும் வணக்கம் 🙏

7 ம் நாளுக்கான உணவு

காலை


அரை முடி தேங்காய், வாழைப்பழம், பேரீச்சை 2, வெல்லம் ஒரு துண்டு


மதியம்


அவல் புட்டு


சிவப்பு அவலை, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும், அதில் மூழ்கும் அளவு நீர் ஊற்றி 2 நிமிடம் ஆனதும் , நீரை வடிண்துவிடவும், வடித்த அவலில் கால் பங்கு தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் ஒரு சிட்டிகை, வெல்லம் 1 ஸ்பூன் கலந்து சாப்பிடவும் ..


மாலை


எலுமிச்சை ஜூஸ் ( வெல்லம் போட்டது)


இரவு 


பழங்கள்




தேங்காயின் பயன்கள்




* உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பை நிலை நிறுத்த உதவும்

* அடிக்டி ஏற்படும் சளி இருமலை விரட்டியடிக்கும்

* உடைத்து அரைமணிநேரத்திற்குள் சாப்பிடுவது சிறந்தது

* கெட்ட கொழுப்பை அகற்றும்

* இரத்தம் சுத்தமாகும்

* உச்சிமுதல் பாதம் வரை உள்ள உருப்புகளை புதுப்பிக்கும்

* பழங்காலத்தில் இறக்கும் தருவாயில் உள்ள நபர்களை தேங்காய்பால் கொடுத்து வாழ்நாளை நீட்டிப்பு செய்தார்கள்...

6 ம் நாளுக்கான உணவு 6th day food

 அனைவருக்கும் வணக்கம் 🙏


காலை


வெண்பூசணி ஜூஸ், தோல் விதையோடு அரைத்து வெள்ளை துணியில் வடிகட்டி குடிக்கவும்....


11 மணிக்கு


Detox water


கேரட் 1, பீட்ரூட் 1, எலுமிச்சை 1, சோம்பு 1 1/2 ஸ்பூன்....ஊறவைத்து குடிக்கவும்


மதியம்


வெண்பூசணி அவல் சாதம்


துருவிய வெண்பூசணி ஒரு கப் ( பிழிந்து சாறு எடுத்துடுங்க), வெள்ளை அவல் ஒரு கப், இயற்கை மோர் சிறிது....ஒரு சிட்டிகை உப்பு, மிளகு தூள் ஒரு சிட்டிகை, வறுத்த வேர்கடலை, மாதுளை கொஞ்சம் சேர்த்து, மல்லிஇலை கொஞ்சம் சேர்த்து சாப்பிடவும்....


மாலை


அத்திப்பழம் 2, பேரீச்சை 4 , ஊறவைச்சு அரைச்சு குடிக்கவும்


இரவு


பழங்கள்


* வெண்பூசணி குடல் புண் ஆற்றும்

* எரிச்சல் கொடுக்கும் புண்கள் சரியாகும்

* வெயிலினால் ஏற்படும் புண்கள் சரியாகும்

* உடல் குளிர்ச்சியாகும்

* வேர்கடலை களைப்பு நீக்கும்

* detox water, கழிவை நீக்கி சக்தி கொடுக்கும்

* அத்திபேரீச்சை பலம் கொடுக்கும்

ஒரே ஒரு உயிரினத்தை தான் நம்மிடம் இருந்து பிரித்தார்கள் - மொத்த தற்சார்பும் (self-dependence) Close.


படித்ததில் பிடித்த,யோசிக்க வைத்த பதிவு


1. சந்தையில் காய்கறிகளை விற்ற காசில் பாதி டெம்போ வாடகைக்கே சரியா போகுது தம்பி. 


மாட்டுவண்டி எங்க தாத்தா ???


மாடு இல்லையே பா..!! 


2. நிலத்தை ஒருமுறை உழுது போட டிராக்டருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 1000 தர வேண்டியிருக்கு மாப்ளே.


ஏர் வைத்து உழுது பார்க்கலாம் ல மாமா ?


மாடு இல்லையே பா..!! 


3. DAP (Di ammonium phosphate), Urea, Phosphorous னு ஆயிரக்கணக்கில் செலவு ஆகிறது. 


மாட்டு எரு, பஞ்சகவ்யம், அமிர்தகரைசல்னு பயன்படுத்தலாமே ?


மாடு இல்லையே பா..!! 


4. நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு எரிவாயு செலவே மாதம் ரூ.700 ஆகிறது.


மாட்டு சாணத்தை வைத்து இயங்கும் Gobar gas plant  என்ன ஆயிற்று ? 


மாடு இல்லையே பா..!! 


5. நஞ்சு னு தெரிந்தும் ஏதேதோ ரசாயனங்களை வீட்டிற்குள் தெளிக்கிறீர்களே - 


மாட்டு சாணம் பயன்படுத்தலாமே ??


மாடு இல்லையே பா..!! 


*********


உழவெனும் வாழ்வியலில் மாட்டின் பங்கினை உணர்ந்த ஆங்கிலேயர்கள், "மாடுகளை" ஒழிக்காமல் வருடம் முழுவதும் உழவு செய்யத்தக்க பருவ சூழல்களை கொண்ட இந்நிலப்பரப்பில் உழவை வைத்து வணிகம் செய்ய இயலாது என்று  திட்டமிட்டு 19ம் நூற்றாண்டிலேயே இந்நிலப்பரப்பு முழுவதும் பசுவதை கூடங்கள் (cow slaughter houses) அமைத்து (சுதந்திரத்துக்கு பிறகும் இருந்தன, இன்றளவும் இருக்கின்றன; மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா 2வது இடம் as per 2019 data) -  பின்னர் அதற்கான மாட்டிறைச்சி சந்தையும் சமகாலத்தில் மேற்கத்திய நாடுகளில் உருவாக்கப்பட்டன.  


விவசாய புரட்சியில் மாட்டின் மீதான நமது தேவைகளை குறைக்க உரம், டிராக்டர் என அனைத்திற்கும் இந்த ஒன்றிய அரசால் மானியம் வழங்கப்பட்டது. மாடு என்னும் உயிரினம் பின்னர் பால் உற்பத்திக்காக மட்டுமே பயன்படுத்த பட்டது. அதுவும் கிடாரி (பெண்) கன்றுகள் மட்டுமே வளர்க்கப்பட்டது. காளை கன்றுகள் எல்லாம் அடி மாட்டிற்குத்தான். இனப் பெருக்கத்திற்கு எதை பயன்படுத்துவோம் என்ற சிந்தனை இன்றி காளைகளை விற்றதால் இன்று சினை ஊசியை வைத்து பெரும் லாபம் ஈட்ட காத்திருக்கிறது வணிக கும்பல்.. 


சினை ஊசி ஏன் போடனும் - இயற்கையாகவே இனப்பெருக்கம் செய்யலாமே ?


காளை மாடு இல்லையே பா..!! 


*********

ஒரே ஒரு உயிரினத்தை தான் நம்மிடம் இருந்து பிரித்தார்கள் - மொத்த தற்சார்பும் Close.


அனைவரும்  சிந்திக்கவே இந்த பதிவு....  விழிப்போம் உயர்வோம்....👍🏼

5 ம் நாளுக்கான உணவு 5th day healthy natural foods

 அனைவருக்கும் வணக்கம் 🙏


காலை


வேர்கடலை,  ... இரவு ஊறவைச்சுடுங்க....காலையில் அரைத்து அதோடு வாழைப்பழம ஒன்று, வெல்லம் சேர்த்து குடிக்கவும்


11 மணிக்கு 


Detox water


கொத்தமல்லி ஒரு கைப்பிடி, துளசி 10, புதினா 10...3 மணிநேரம் ஊறவைத்து குடிக்கவும்


மதியம்


அவல் அலசியது + மாங்காய் துருவல், வறுத்த வேர்கடலை பொடித்தது, ஒரு சிட்டிகை உப்பு, மிளகுதூள் கலந்து உண்ணவும்


மாலை


இரண்டு துண்டு வெண்பூசணி 


இரவு  7 மணிக்குள்


இரண்டு துண்டு வாழைக்காய் (raw) ...


பழங்கள்....




மதியம்

4 ம் நாளுக்கான உணவு 4th day natural healthy food

 அனைவருக்கும் வணக்கம் 🙏


காலை


வெண்பூசணி ஜூஸ்


வெண்பூசணி யை நன்றாக அலசிட்டு தோல் விதை உட்பட அனைத்தையும் அரைச்சு வடிகட்டி குடிக்கவும்....


எரிச்சலுடன் கூடிய தோல் வியாதி தீரும்


Detox water 11 am


புதினா 25 இலைகள், எலுமிச்சை 1, வெள்ளரிக்காய் 1( நறுக்கி போடவும்)


மதியம்


தேங்காய் பால் + அவல் கலவை


மாலை


கேரட் துருவல் , பொடித்த வேர்கடைலை, தேங்காய் துருவல், அனைத்தும் சம அளவு ....தேவைக்கு வெல்லம் சேர்த்து உருண்டைபிடிக்கவும்


இரவு 


பழங்கள்


* செவ்வாய்கிழமை பெண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கவும்


 *எண்ணெய் தேய்த்து குளிப்பவர்களுங்கு இந்த இயற்கை உணவு வேண்டாம் , சமைத்த உணவு சாப்பிடவும்..

3 ம் நாளுக்கான உணவு 3rd day healthy natural foods

அனைவருக்கும் வணக்கம் 🙏


3 ம் நாளுக்கான உணவு....


காலை


கொத்தவரங்காய் ஜூஸ்


கொத்தவரங்காய் 4, தேங்காய் சில் 1, மிளகு, சீரகம், ஒரு சிட்டிகை உப்பு...அரைத்து வடிகட்டி குடிக்கவும்


11 மணிக்கு


Detox water


கேரட் 1 ( நறுக்கியது ),  புதினா 25 இலைகள், சோம்பு 1 ஸ்பூன்....3 மணிநேரம் 1/1/2 லிட்டர் தண்ணீரில் ஊறவைத்து குடிக்கவும்


மதியம்


நவரத்னா அவல் கலவை


வெள்ளை அவல், அலசி மூழ்கும் அளவு தேங்காய்ப்பால் ஊற்றி சிறிது நேரம் ஆனதும், மாதுளை, உலர் பழங்கள், விதைகள், கலந்து உண்ணவும்


மாலை


வாழைப்பழ பேடா


வாழைப்பழத்தை வட்ட வட்டமாக நறுக்கி அதன்மேல் தேங்காய் துருவல், வெல்லம் தூவி சாப்பிடவும்


இரவு 


பழங்கள்


கொத்தவரங்காய்

*கொத்தவரங்காய் நரம்பு பலப்படும்

* சிரங்கு, வேர்கூரு குணமாகும்

* கட்டிகள், கொப்பளங்கள் சரியாகும்

* பூச்சிக்கடியால் வரும் அலர்ஜி சரியாகும்

* நரம்பில் ரத்த ஓட்டத்தை அதிகபடுத்தும்

* சூட்டினால் வரும் கொப்பளங்கள், கட்டிகள் குணமாகும்

இயற்கை வழி வீட்டு தோட்ட பயிற்சி - 9☘️🍀🌿🌱🪴🎋🍃🌾 Home gardening aadi pattam thedi vithai

 இயற்கை வழி வீட்டு தோட்ட பயிற்சி - 9☘️🍀🌿🌱🪴🎋🍃🌾



Topic: ஆடிப்பட்டம் தேடி விதை - கிழங்கு நடவு முறை


* கிழங்கு வகைகளை வீட்டு தோட்டத்தில் எவ்வாறு நடவு செய்து அதிக மகசூல் எடுப்பது. 

* அதலைகாய், பழுபாகல் வீட்டு தோட்டத்தில் நடவு முறை.  செய்ய கூடியவை செய்ய கூடாதவை எவை.


Mr. Balaraman Maneri

Mrs.V.Priya Rajnarayanan 


பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள்

Mrs. Ajitha Veerapandian

Mrs. Akila Kunalan


ஒவ்வொரு வாரமும் நடைபெறும். அனைவரும் பங்கேற்று வீட்டுக்கு ஒரு விவசாயி ஆகலாம்



https://youtu.be/bMtLZfTHzPc


2 ம் நாள் இயற்கை உணவு 2nd day natural food list and tips

அனைவருக்கும் வணக்கம் 🙏

கத்தரிக்காய் ஜூஸ்


கத்தரிக்காய் 1 ( சிறிது )...மிக்ஸியில் அரைச்சு வடிகட்டி குடிக்கவும் (ஒரு நபருக்கு )...


கருப்பு நிற தோல்  நோய் தீரும், மங்கு, கண் கருவளையம், நாள்பட்ட பருக்கள்.....


மதியம் 


தக்காளி அவல் சாதம்....


தேங்காய் பாலில் ஊறவைத்த அவல் ஒரு கப், அதில் பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி, சுவைக்கு ஒரு சிட்டிகை உப்பு, சீரகத்தூள், மிளகுதூள் ஒரு சிட்டிகை, பொடியா நறுக்கிய கறிவேப்பிலை, மல்லி இலை.....


மாலை (5 மணிக்குள்)


Detox water...


கேரட் 1, கறிவேப்பிலை ஒரு கைப்பிடி, எலுமிச்சை 1....

👆 3 மணிநேரம் 1 1/2 லிட்டர் நீர் ஊற்றி ஊறவைத்து...அடுத்த ஒரு மணிநேரத்தில் குடிச்சு முடிக்கனும்....


இரவு


கொய்யாபழம்



* கத்தரிக்காய் தோல் நோய்க்கான, அதுவும் கருமைநிற தோல் நோய்க்கான மருந்து, தொடர்ந்து குடிக்க மறையும்....


* தேங்காய் பால் நரம்புகளுக்கு பலம் கொடுக்கும்


Detox water....இது ஒரு வகை கழிவு நீக்கம்....சோரியாசிஸ் நோய் குணமாகும், ஜீரணசக்தி கூடும், நெஞ்செரிச்சல் சரியாகும்.....

இரண்டு நாள் இயற்கைவாழ்வியல் பயணம் Two days natural way of life

அனைவருக்கும் வணக்கம் 🙏

*அதிகாலை அலாரம் இல்லாமல் கண்விழிப்பு
* 3 டம்ளர் தண்ணீர் குடிப்பது
* தடாசணம்
* காலைகடன்
* மூலிகை பல்பொடி வைத்து பல் விலக்குதல்
* பித்த நீர் கழிவு நீக்கம்
* கண் கழுவுதல்
* தலைக்குளியல்
* உடல் பயிற்சிகள்
* பஞ்சபூத சக்தி வணக்கம்
* சூரியனை வணங்குதல்
* உமிழ்நீரோடு உணவை மென்று முழுங்குதல்
* கண்பயிற்சிகள்
* இரவு தூங்கும்முன் பயிற்சி

( இவைகள் தினமும் தொடரவும் 👆 )

மேலும் ....

* வாரம் இருமுறை எண்ணெய் குளியல்
* மாதம் ஒரு முறை இரைப்பை சுத்தம்
* வாரம் 3 முறை மூக்கு கழுவுதல்
* மாதம் ஒரு முறை நீர்தாரா
* 3 மாதத்திற்கு ஒரு முறை குடல் சுத்தம்
* 6 மாதத்திற்கு ஒரு முறை மண் குளியல்
* வாரம் ஒரு முறை 16 மணிநேர விரதம்

இந்த பயிற்சிகள் எல்லாம் உங்களுக்கு சொல்லியாச்சு தொடர்ந்து செய்ங்க, தொடர்ந்து செய்யும் போது நீங்க ஒரு பயிற்சியாளராக ஆகமுடியும்,

 நாம் உணர்ந்து செய்யும்போதுதான் மற்றவர்களுக்கு சொல்லமுடியும், 

மருந்தில்லா, செலவில்லா எளிமையான மருத்துவ முறை இது, கழிவுகளின் தேக்கம் தான் நோய், அவைகளை வெளியேற்ற இவ்வளவு வழி நம் முன்னோர் சொல்லிவைச்சிருக்காங்க, அதை தொடர்ந்து செய்வோம் பலன்பெறுவோம்....நம்மோடு 100 பேர் நின்றாலும் நாம் ஆரோக்கியமாக இருந்தால் தனித்து தெரிவோம், ஒரு ஒளிவட்டம் நம்மைசுற்றி இருக்கும்...நம்ம குழு நண்பர்களிடம் அதை நிறையவே பார்க்கிறேன்.....நன்றி....

வாழை இலை குளியல் ( தோல் கழிவு நீக்கம் ) அடுத்தமாதம் ஒரு நாள் செய்முறை விளக்கங்களுடன் சொல்கிறேன்,

மிளகு கற்பம் Pepper formula

 மிளகு கற்பம்.      

மிளகு கற்பம் எடுத்துக்கொள்ள தகுதியானவர்கள் பேதி மருந்து எடுத்து உடல் சுத்தம் செய்து இருக்க வேண்டும். இரண்டு நாள் இடைவெளிக்கு பின் காலை 5.30 எழுந்து பல்துலக்கிய பின் 300 to 400 ml வெண்ணீர் வாய் வைத்து சப்பி குடிக்க வேண்டும். பின் காலை கடன்களை முடித்தபின் வெண்ணீர் குடித்த மணியில் இருந்து 45 நிமிடம் கழித்து முதல் நாள்  ஒரு மிளகு, சிறிது மலைதேன் அல்லது கலப்படம் இல்லாத பனை வெல்லம் சிறிது சேர்த்து மென்று உண்ண வேண்டும்.

ஒவ்வொரு நாளும் ஒரு  மிளகு கூட்டி உண்ணவேண்டும்.  24 வது நாள் 24 மிளகு 25வது நாள் 24 மிளகு உண்ணவேண்டும். பின் ஒரு ஒரு மிளகாக குறைத்து 48 வது நாள் ஒரு மிளகுடன் கற்பம் முடிக்கவேண்டும். மிளகு கற்பம் எடுத்துக்கொள்ளும் காலத்தில் புலால் உணவு உண்ண கூடாது. மேலும் ஊறுகாய், பொறித்த உணவுகள் , அவரைக்காய், கொத்தவரங்காய், கத்தரிக்காய் அளவு குறைத்து உண்ண வேண்டும். 

மோர் தேவையான அளவு குடிக்க வேண்டும். உடல் சூடு அதிகமாக உணர்பவர்கள் இளநீர், மாதுளை, தேவையான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.கீரை உணவு அதிகம் சாப்படவேண்டும.வல்லாரை கீரை எடுத்துகொள்வது பலனை கூட்டி தரும்.  தாய்மார்கள் ஓய்வு நாட்களிலும் மிளகு கற்பம் எடுத்துக்கொள்ளலாம். 

ஆண்கள் மது, புகை பான்பராக் பழக்கம் உள்ளவர்கள் அந்த பழக்கத்தை நிறுத்திய பின் அருகம்புல் சாறு ஒரு மண்டலம் எடுத்துக்கொள்ள வேண்டும். இதோடு மூன்று நாட்கள் கீழ்காய் நெல்லி சாறு, வில்வ சாறு , மணத்தக்காளி சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்புதான் மிளகு கற்பம் எடுத்துக்கொள்ள தகுதியானவர்கள் ஆவார்கள். இந்த முறையில் மிளகு கற்பம் எடுத்துக்கொள்பவரகள் முழு பலரையும் பெறலாம்.

மிளகு கற்பம்

திரு. தங்கபாண்டியன் ஐயாவின் பதிவு....

அனைவரும் இதை செய்யவேண்டும் என வேண்டி கேட்டுக்கொள்கிறேன், எளிமையான இன்றைய தேவைக்கு ஏற்ற மருந்து 👆

இயற்கை உணவுகள் healthy natural foods

 நாளை காலை உணவு


எலுமிச்சை 1/2 பழம், இஞ்சி 1/4 இன்ச், அரைச்சு வடிகட்டி தேன் அல்லது வெல்லம் கலந்து குடிக்கவும்


வாழைக்காய் பசும்பொரியல்


வாழைக்காய் தோல் நீக்கியது 1/4, சம அளவு தேங்காய் துருவல், ஒரு மணிநேரம் ஊறவைத்த பாசிபருப்பு ( தோல் நீக்கியது), மிளகுதூள், சீரகதூள் ஒரு சிட்டிகை, உப்பு ஒரு சிட்டிகை, கலந்து மல்லி இலை தூவி, எலுமிச்சை சில துளிகள் கலந்து 10 நிமிடம் ஆனதும் சாப்பிடவும்.....


மதியம்


அவல் உணவு


அவல் 100 கிராம் எடுத்து அலசி, சம அளவு தேங்காய் துருவல்,  வெல்லம், தோல் நீக்கிய வேர்கடலை சேர்த்து ....சாப்பிடவும்


மாலை


பேரீச்சை 2, அத்திப்பழம் 2, திராட்சை 10 ஒருமணிநேரம் ஊறவைத்து அரைத்து குடிக்கவும் ( ஒரு நபருக்கு )....


இரவு 7 மணிக்குள்


பழங்கள் ஒரே வகை பழம் ( பப்பாளி, மாதுளை, சப்போட்டா, மாம்பழம்) இப்படி ஏதாவது ஒன்று


முக்கிய குறிப்புகள்


* இயற்கை உணவு உண்ணும் போது,  தண்ணி நிறைய குடிங்க, உணவு சாப்பிடும்போது அல்ல, மற்ற நேரங்களில், தாகம் எடுக்காவிட்டாலும் குடிக்கனும்


* உணவு அளவு குறைவா இருக்கறமாதிரி தோனும், ஆனால் போதுமானது, 


* வாழைக்காய் சாப்பிட்டு அரைமணிநேரமாவது மற்ற உணவுக்கு இடைவெளி வேண்டும்...


* பசித்தால் பழங்கள் சாப்பிடுங்க, விதையுள்ள கறுப்பு திராட்சை சிறப்பு

வாழைக்காய் அப்படியே சாப்பிட்டால் வாய்வு ஏற்பட வாய்ப்பு இருக்குங்களா? Raw banana healthy vegetables

 வாய்வு ஏற்பட வாய்ப்பு  இல்லை, சாப்பிடலாம்..

பச்சையாக வாழைகாய் சாப்பிடுவதற்கு பிஞ்சு காயை எடுத்துக்கொள்ள வேண்டும், கிடைக்காத சமயம் விளைந்த காயை பயன்படுத்துங்கள். 

சிறு துண்டுகளாக வெட்டிய காயை நல்ல தேனில் ஊரவைத்து  , நல்ல பனை வல்லத்தில் பாகு காய்சி ஊரவைத்த வைத்து , மிளகு சீரகம் பொடி தூவி எலுமிச்சை சாறு சிறு துளிகள்  விட்டு  இதில் ஏதாவது ஒரு முறையை பின்பற்றி சாப்பிட்டு வரலாம். 

அல்லது தோலுடன்  வாழைக்காய்  , தோலுடன் எலுமிச்சை,  சிறு துண்டு இஞ்சி , 10 மிளகு சேர்த்து அரைத்து சாறு பிழிந்து பருகலாம். சிறு காய்கறிகள் இருந்தால் இரண்டு நபர்கள் , பெரிய காய் மூன்று நபர்கள் வாரம் இரண்டு நாட்கள் சாப்பிட்டு வரலாம். 

அதிலும் நாட்டு காய் கிடைத்தால் பலன் அதிகம்.கிடைக்காத பட்சத்தில் மற்றவற்றை பயன்படுத்தலாம். இப்பொழுதெல்லாம் வாழைக்கு ஊசி, மாத்திரை ,இரசாயன உரங்கள் , மருந்து தெளித்தல் போன்றவை அதிகமாக பயன்படுத்துவதால்  கல் உப்பு , மஞ்சள் தண்ணீர் கலவையில் நன்கு ஊரவைத்த கழுவி பயன்படுத்த வேண்டும்.