வாய்வு ஏற்பட வாய்ப்பு இல்லை, சாப்பிடலாம்..
பச்சையாக வாழைகாய் சாப்பிடுவதற்கு பிஞ்சு காயை எடுத்துக்கொள்ள வேண்டும், கிடைக்காத சமயம் விளைந்த காயை பயன்படுத்துங்கள்.
சிறு துண்டுகளாக வெட்டிய காயை நல்ல தேனில் ஊரவைத்து , நல்ல பனை வல்லத்தில் பாகு காய்சி ஊரவைத்த வைத்து , மிளகு சீரகம் பொடி தூவி எலுமிச்சை சாறு சிறு துளிகள் விட்டு இதில் ஏதாவது ஒரு முறையை பின்பற்றி சாப்பிட்டு வரலாம்.
அல்லது தோலுடன் வாழைக்காய் , தோலுடன் எலுமிச்சை, சிறு துண்டு இஞ்சி , 10 மிளகு சேர்த்து அரைத்து சாறு பிழிந்து பருகலாம். சிறு காய்கறிகள் இருந்தால் இரண்டு நபர்கள் , பெரிய காய் மூன்று நபர்கள் வாரம் இரண்டு நாட்கள் சாப்பிட்டு வரலாம்.
அதிலும் நாட்டு காய் கிடைத்தால் பலன் அதிகம்.கிடைக்காத பட்சத்தில் மற்றவற்றை பயன்படுத்தலாம். இப்பொழுதெல்லாம் வாழைக்கு ஊசி, மாத்திரை ,இரசாயன உரங்கள் , மருந்து தெளித்தல் போன்றவை அதிகமாக பயன்படுத்துவதால் கல் உப்பு , மஞ்சள் தண்ணீர் கலவையில் நன்கு ஊரவைத்த கழுவி பயன்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment