மிளகு கற்பம்.
மிளகு கற்பம் எடுத்துக்கொள்ள தகுதியானவர்கள் பேதி மருந்து எடுத்து உடல் சுத்தம் செய்து இருக்க வேண்டும். இரண்டு நாள் இடைவெளிக்கு பின் காலை 5.30 எழுந்து பல்துலக்கிய பின் 300 to 400 ml வெண்ணீர் வாய் வைத்து சப்பி குடிக்க வேண்டும். பின் காலை கடன்களை முடித்தபின் வெண்ணீர் குடித்த மணியில் இருந்து 45 நிமிடம் கழித்து முதல் நாள் ஒரு மிளகு, சிறிது மலைதேன் அல்லது கலப்படம் இல்லாத பனை வெல்லம் சிறிது சேர்த்து மென்று உண்ண வேண்டும்.
ஒவ்வொரு நாளும் ஒரு மிளகு கூட்டி உண்ணவேண்டும். 24 வது நாள் 24 மிளகு 25வது நாள் 24 மிளகு உண்ணவேண்டும். பின் ஒரு ஒரு மிளகாக குறைத்து 48 வது நாள் ஒரு மிளகுடன் கற்பம் முடிக்கவேண்டும். மிளகு கற்பம் எடுத்துக்கொள்ளும் காலத்தில் புலால் உணவு உண்ண கூடாது. மேலும் ஊறுகாய், பொறித்த உணவுகள் , அவரைக்காய், கொத்தவரங்காய், கத்தரிக்காய் அளவு குறைத்து உண்ண வேண்டும்.
மோர் தேவையான அளவு குடிக்க வேண்டும். உடல் சூடு அதிகமாக உணர்பவர்கள் இளநீர், மாதுளை, தேவையான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.கீரை உணவு அதிகம் சாப்படவேண்டும.வல்லாரை கீரை எடுத்துகொள்வது பலனை கூட்டி தரும். தாய்மார்கள் ஓய்வு நாட்களிலும் மிளகு கற்பம் எடுத்துக்கொள்ளலாம்.
ஆண்கள் மது, புகை பான்பராக் பழக்கம் உள்ளவர்கள் அந்த பழக்கத்தை நிறுத்திய பின் அருகம்புல் சாறு ஒரு மண்டலம் எடுத்துக்கொள்ள வேண்டும். இதோடு மூன்று நாட்கள் கீழ்காய் நெல்லி சாறு, வில்வ சாறு , மணத்தக்காளி சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்புதான் மிளகு கற்பம் எடுத்துக்கொள்ள தகுதியானவர்கள் ஆவார்கள். இந்த முறையில் மிளகு கற்பம் எடுத்துக்கொள்பவரகள் முழு பலரையும் பெறலாம்.
மிளகு கற்பம்
திரு. தங்கபாண்டியன் ஐயாவின் பதிவு....
அனைவரும் இதை செய்யவேண்டும் என வேண்டி கேட்டுக்கொள்கிறேன், எளிமையான இன்றைய தேவைக்கு ஏற்ற மருந்து 👆
No comments:
Post a Comment