Showing posts with label natural food task. Show all posts
Showing posts with label natural food task. Show all posts

திப்பிலி (Piper Longum) மிளகிற்க்கு அண்ணன் இதன் இலைகளோ வெற்றிலைக்கு தம்பி

 


பழங்காலமாக நம் சமையல் அறையில் இருந்தது திப்பலி  மிளகாய் வந்தவுடன் நம்மிடம் இருந்து வெளியேறிவிட்டது தற்செயலா திட்டமிடபட்டதா என தெரியவில்லை மிளகாய் திப்பிலி இரண்டிலுமே காரம் இருக்கிறது ஆனால் திப்பிலியில் மட்டுமே காரமும் கூடவே சாதாரண சளி முதல் ஆண்மையை அதிகரிப்பு வரை என ஏகபட்ட மருத்துவ குணம் இருக்கிறது


நம் காலசூழ்நிலையில் சாதாரணமாக வளரகூடிய கொடிதாவரம் இது..வீட்டிலும் மொட்டமாடியிலும் வளர்க்கலாம் எங்கள் வீட்டில் பல ஆண்டுகளாக திப்பிலி செடி வளர்க்கிறோம்..பழங்குடி மற்றும் கிராம மக்கள் அசைவ உணவிற்க்கு பின் திப்பிலி செடியின் இலையை மென்று சாப்பிடுவார்கள்,.இதன் இலை ஜீரண ஆற்றலை அதிகரிக்கும் அதனால்தான் வெற்றிலையின் தம்பி என்று முதல்வரியில் சொல்லியிருந்தென்


சளி,காசநோய், காய்ச்சல், கபம், கோழைச்சளி,   இருமல்,வாய்வுத் தொல்லை, வயிற்றுப் பொருமல், வறட்டு இருமல், இளைப்பு, களைப்பு,  வெள்ளைப் படுதல், போன்ற பிரச்சனைக்கு உணவிலும் சேர்த்துகொள்ளலாம் அல்லது பவுடர் செய்து மிளகு தூள் போல பயன்படுத்தலாம் ஆனால் மிளகைவிட காரம் அதிகம்,,திப்பிலி தூளை நெய் அல்லது நாட்டு சர்க்கரையுடன் சாப்பிட்டால் "அந்த

விசயத்தில் பலம் அதிகமாகும்


திப்பிலி பொடியை இரண்டு ஸ்பூன் எடுத்து வெற்றிலைசாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சளி காய்ச்சல் இருமல் குணமாகும்

திப்பிலி பொடியுடன் சமஅளவு குப்பை மேனி இலையை நிழலில் உலர்த்தி  பொடி செய்து சேர்த்து சாப்பிட்டால் மூலம் பெளத்திர குணமாகும்

திப்பிலி 5 பங்கு தேற்றான் விதை  3 பங்கு இவை பொடி செய்து அரிசி கழுவிய  நீரில் காலை மாலை என இருவேளை மூன்று நாட்கள் சாப்பிட்டால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிகரித்து போகும் ரத்தபோக்கு  பிரச்சனை சரியாகும்.


திப்பிலியை தூக்கி வைத்து கொண்டாடலாம். வீட்டில் வளர்க்க தொடங்குகள்

7 ம் நாளுக்கான உணவு 7th day food

 அனைவருக்கும் வணக்கம் 🙏

7 ம் நாளுக்கான உணவு

காலை


அரை முடி தேங்காய், வாழைப்பழம், பேரீச்சை 2, வெல்லம் ஒரு துண்டு


மதியம்


அவல் புட்டு


சிவப்பு அவலை, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும், அதில் மூழ்கும் அளவு நீர் ஊற்றி 2 நிமிடம் ஆனதும் , நீரை வடிண்துவிடவும், வடித்த அவலில் கால் பங்கு தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் ஒரு சிட்டிகை, வெல்லம் 1 ஸ்பூன் கலந்து சாப்பிடவும் ..


மாலை


எலுமிச்சை ஜூஸ் ( வெல்லம் போட்டது)


இரவு 


பழங்கள்




தேங்காயின் பயன்கள்




* உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பை நிலை நிறுத்த உதவும்

* அடிக்டி ஏற்படும் சளி இருமலை விரட்டியடிக்கும்

* உடைத்து அரைமணிநேரத்திற்குள் சாப்பிடுவது சிறந்தது

* கெட்ட கொழுப்பை அகற்றும்

* இரத்தம் சுத்தமாகும்

* உச்சிமுதல் பாதம் வரை உள்ள உருப்புகளை புதுப்பிக்கும்

* பழங்காலத்தில் இறக்கும் தருவாயில் உள்ள நபர்களை தேங்காய்பால் கொடுத்து வாழ்நாளை நீட்டிப்பு செய்தார்கள்...

6 ம் நாளுக்கான உணவு 6th day food

 அனைவருக்கும் வணக்கம் 🙏


காலை


வெண்பூசணி ஜூஸ், தோல் விதையோடு அரைத்து வெள்ளை துணியில் வடிகட்டி குடிக்கவும்....


11 மணிக்கு


Detox water


கேரட் 1, பீட்ரூட் 1, எலுமிச்சை 1, சோம்பு 1 1/2 ஸ்பூன்....ஊறவைத்து குடிக்கவும்


மதியம்


வெண்பூசணி அவல் சாதம்


துருவிய வெண்பூசணி ஒரு கப் ( பிழிந்து சாறு எடுத்துடுங்க), வெள்ளை அவல் ஒரு கப், இயற்கை மோர் சிறிது....ஒரு சிட்டிகை உப்பு, மிளகு தூள் ஒரு சிட்டிகை, வறுத்த வேர்கடலை, மாதுளை கொஞ்சம் சேர்த்து, மல்லிஇலை கொஞ்சம் சேர்த்து சாப்பிடவும்....


மாலை


அத்திப்பழம் 2, பேரீச்சை 4 , ஊறவைச்சு அரைச்சு குடிக்கவும்


இரவு


பழங்கள்


* வெண்பூசணி குடல் புண் ஆற்றும்

* எரிச்சல் கொடுக்கும் புண்கள் சரியாகும்

* வெயிலினால் ஏற்படும் புண்கள் சரியாகும்

* உடல் குளிர்ச்சியாகும்

* வேர்கடலை களைப்பு நீக்கும்

* detox water, கழிவை நீக்கி சக்தி கொடுக்கும்

* அத்திபேரீச்சை பலம் கொடுக்கும்

5 ம் நாளுக்கான உணவு 5th day healthy natural foods

 அனைவருக்கும் வணக்கம் 🙏


காலை


வேர்கடலை,  ... இரவு ஊறவைச்சுடுங்க....காலையில் அரைத்து அதோடு வாழைப்பழம ஒன்று, வெல்லம் சேர்த்து குடிக்கவும்


11 மணிக்கு 


Detox water


கொத்தமல்லி ஒரு கைப்பிடி, துளசி 10, புதினா 10...3 மணிநேரம் ஊறவைத்து குடிக்கவும்


மதியம்


அவல் அலசியது + மாங்காய் துருவல், வறுத்த வேர்கடலை பொடித்தது, ஒரு சிட்டிகை உப்பு, மிளகுதூள் கலந்து உண்ணவும்


மாலை


இரண்டு துண்டு வெண்பூசணி 


இரவு  7 மணிக்குள்


இரண்டு துண்டு வாழைக்காய் (raw) ...


பழங்கள்....




மதியம்

இயற்கை உணவுகள் healthy natural foods

 நாளை காலை உணவு


எலுமிச்சை 1/2 பழம், இஞ்சி 1/4 இன்ச், அரைச்சு வடிகட்டி தேன் அல்லது வெல்லம் கலந்து குடிக்கவும்


வாழைக்காய் பசும்பொரியல்


வாழைக்காய் தோல் நீக்கியது 1/4, சம அளவு தேங்காய் துருவல், ஒரு மணிநேரம் ஊறவைத்த பாசிபருப்பு ( தோல் நீக்கியது), மிளகுதூள், சீரகதூள் ஒரு சிட்டிகை, உப்பு ஒரு சிட்டிகை, கலந்து மல்லி இலை தூவி, எலுமிச்சை சில துளிகள் கலந்து 10 நிமிடம் ஆனதும் சாப்பிடவும்.....


மதியம்


அவல் உணவு


அவல் 100 கிராம் எடுத்து அலசி, சம அளவு தேங்காய் துருவல்,  வெல்லம், தோல் நீக்கிய வேர்கடலை சேர்த்து ....சாப்பிடவும்


மாலை


பேரீச்சை 2, அத்திப்பழம் 2, திராட்சை 10 ஒருமணிநேரம் ஊறவைத்து அரைத்து குடிக்கவும் ( ஒரு நபருக்கு )....


இரவு 7 மணிக்குள்


பழங்கள் ஒரே வகை பழம் ( பப்பாளி, மாதுளை, சப்போட்டா, மாம்பழம்) இப்படி ஏதாவது ஒன்று


முக்கிய குறிப்புகள்


* இயற்கை உணவு உண்ணும் போது,  தண்ணி நிறைய குடிங்க, உணவு சாப்பிடும்போது அல்ல, மற்ற நேரங்களில், தாகம் எடுக்காவிட்டாலும் குடிக்கனும்


* உணவு அளவு குறைவா இருக்கறமாதிரி தோனும், ஆனால் போதுமானது, 


* வாழைக்காய் சாப்பிட்டு அரைமணிநேரமாவது மற்ற உணவுக்கு இடைவெளி வேண்டும்...


* பசித்தால் பழங்கள் சாப்பிடுங்க, விதையுள்ள கறுப்பு திராட்சை சிறப்பு

6 days morning breakfast Task ( இயற்கை உணவுகள் )....... திங்கள் முதல் சனிக்கிழமை வரை.....

 வணக்கம்

6 days morning breakfast Task ( இயற்கை உணவுகள் ).......வருகின்ற திங்கள் முதல் சனிக்கிழமை வரை.....


இந்த Task செய்பவர்களுக்கு கிடைக்கும் பரிசுகள்.....


* முகம் பொலிவுபெறும்

* உடல் சூடு குறையும்

* முடி உதிர்வது கட்டுப்படும்

* கண்கள் பளிச்சிடும்

* என்றும் இளமை

* செய்யும் அனைத்து செயல்களிலும் விழிப்புணர்வு

* தோல் பளபளப்பாகி அழகு பெறும்

* பெண்களின் கர்பப்பை குளிரும், சூடு குறைவதால் கரு உருவாவது எளிதாகும்

* பற்கள் பலம்பெறும்

* எலும்புகள் வலுப்பெறும்

* நரம்பு மண்டலம் பலம் பெற்று உறுதியாகும்

* சுவாசம் சீராகும், எண்ணம் தெளிவாகும்

* குடல் புண், வாய்புண் தீரும்

* குடல் சுத்தமாகும், அதனால் இரத்தம் சுத்தமாகி  ....சகல நோய்களும் தீரும்.....


விரும்புபவர்கள் கலந்துகொள்ளலாம் , கட்டாயாமில்லை, .....


ஆனால் செய்தவர்களின் அனுபவபதிவு அவசியம் தேவை....750 நண்பர்களில் ஒருவர் அனுபவபதிவு செய்தாலும் மகிழ்வேன், இந்த அனுபவ பதிவு மற்றவர்களுக்கு நல்ல உணவுகளை நோக்கி செல்லவும் நோயின்றி வாழவும் வழிசெய்யும்....நன்றி 🙏


 சனிக்கிழமை தேவையான பொருட்கள் பதிவு வரும் 💐🤝

வணக்கம்


6 days breakfast Task தேவையான உணவு பொருட்கள்


* திங்கட்கிழமை தேவையான பொருட்கள்

மாதுளை 1 கிலோ, விதையுள்ள கருப்பு திராட்சை 1 கிலோ, தர்பூசணி


* செவ்வாய்கிழமை தேவையான பொருட்கள்

கோவைக்காய் 50 கிராம், கொத்தவரங்காய் 50 கிராம், மஞ்சள் பூசணி 50 கிராம், புடலங்காய் 50 கிராம், வாழைக்காய் 50 கிராம், தேங்காய் துருவல் ஒரு கப்


* புதன்கிழமை

பாசிபயறு 100 கிராம்

சுண்டல் 50 கிராம்

முழு உளைந்து 50 கிராம்

வேர்கடலை 25 கிராம் முளைகட்டவும்


* வியாழன்

உலர் திராட்சை 10 , பேரீச்சை 4, முந்திரி 10, பாதாம் 10, வால்நட் 2, பிஸ்தா5, வெள்ளரிவிதை ஒரு ஸ்பூன், பூசணிவிதை ஒரு ஸ்பூன், எள் ஒரு ஸ்பூன், வறுத்த வேர்கடலை, சூரியகாந்திவிதை, தேங்காய் 1 சில்.


வெள்ளிக்கிழமை

கம்பு 50 கிராம், கேழ்வரகு 50 கிராம், முளைகட்டவும்


சனிக்கிழமை

வேப்பிலை, வெண்பூசணி 1/4 கிலோ


*எலுமிச்சை 1

*மிளகு தூள்

*தேங்காய் 1

* பொடித்த கல்உப்பு

* ஏலக்காய் தூள்