Showing posts with label Healthy drinks. Show all posts
Showing posts with label Healthy drinks. Show all posts

3 ம் நாளுக்கான உணவு 3rd day healthy natural foods

அனைவருக்கும் வணக்கம் 🙏


3 ம் நாளுக்கான உணவு....


காலை


கொத்தவரங்காய் ஜூஸ்


கொத்தவரங்காய் 4, தேங்காய் சில் 1, மிளகு, சீரகம், ஒரு சிட்டிகை உப்பு...அரைத்து வடிகட்டி குடிக்கவும்


11 மணிக்கு


Detox water


கேரட் 1 ( நறுக்கியது ),  புதினா 25 இலைகள், சோம்பு 1 ஸ்பூன்....3 மணிநேரம் 1/1/2 லிட்டர் தண்ணீரில் ஊறவைத்து குடிக்கவும்


மதியம்


நவரத்னா அவல் கலவை


வெள்ளை அவல், அலசி மூழ்கும் அளவு தேங்காய்ப்பால் ஊற்றி சிறிது நேரம் ஆனதும், மாதுளை, உலர் பழங்கள், விதைகள், கலந்து உண்ணவும்


மாலை


வாழைப்பழ பேடா


வாழைப்பழத்தை வட்ட வட்டமாக நறுக்கி அதன்மேல் தேங்காய் துருவல், வெல்லம் தூவி சாப்பிடவும்


இரவு 


பழங்கள்


கொத்தவரங்காய்

*கொத்தவரங்காய் நரம்பு பலப்படும்

* சிரங்கு, வேர்கூரு குணமாகும்

* கட்டிகள், கொப்பளங்கள் சரியாகும்

* பூச்சிக்கடியால் வரும் அலர்ஜி சரியாகும்

* நரம்பில் ரத்த ஓட்டத்தை அதிகபடுத்தும்

* சூட்டினால் வரும் கொப்பளங்கள், கட்டிகள் குணமாகும்

உணவே மருந்து சில நோய்களும் அதன் தீர்வுகளும் Natural remedy for some diseases

நல்ல நெஞ்சு சளிக்கு 

இரவு தூங்கும் முன் ஒரு நபருக்கு ஒரு வெற்றிலை கால் ஸ்பூன் சிரகம் கால் ஸ்பூன் மிளகு . செய்முறை: வெற்றிலையை பிச்சி போட்டு சிரகம் மிளகு நுனுக்கி 500ml தண்ணீர் சேர்த்து சிறிய தீயில் 150 ml குறைய வைத்து பனகல் கண்டு சேர்த்து சாப்பிடனும் 12 நாள். குறிப்பு: பால் சாப்பிடும் பலக்கம் உள்ளவர்பால் சாப்பிட்ட பின் வெற்றிலை கசாயம் சாப்பிடவும்.

உடல் சோர்வு (வெயில் காலத்தில்)... 

ஒரு கப் தண்ணீரில் அரை எலுமிச்சை பழம் புளிந்து உப்பு மற்றும் சர்க்கரை சம அளவில் கலந்து குடித்தால் உடல் தெளிர்ச்சி அடையும்... Dehydrated bodyக்கு இது சிறந்த உடனடி தீர்வு... அதன் பிறகு உணவு எடுத்து கொள்ளலாம்...

பெண்களுக்கு மார்பக புற்று நோய் வராமல் இருக்கவும் வந்தபுற்று நோய் குணமாக மகிழம் பூ சிறந்த மருந்து சித்தர் கோயில் சித்தர்கள் கல்வெட்டில் எழுதியது

அல்சர்

    அல்சர் உள்ளவர்கள் முதலில் வயிற்றில் ஒரு வெள்ளை துணியை போட்டு அதன்மேல்களிமண் பரப்பி12 நாள் செய்ய அல்சர் குறையும். மனதை தெளிவாக வைத்துக்க வேண்டும்.

இரவில் மூன்று நான்கு முறை யூரியன் வெளியேரினால் தூக்கம் தடைபடும் அதற்க்கு அத்தி இலைகசாயம் சிறந்த மருந்து

கொழுப்பு குறைய/வெள்ளை படுதல் குணமடைய:

காலை வெறும் வயிற்றில் 100 கி வெண்பூசணி சாறு (தோல் விதையுடம் அரைக்கவும்). சுவைக்காக: உப்பு + மிளகு + சீரகம்

இதயம் பலகினம்

     வெள்ளை தாமரை பூ வாங்கி நிலவில் காயவைத்து. காலை 5 இதழ் பூவை 200ml தண்ணீர் சிறுதீயில் வைத்து 100 ml வந்ததும். வெறும் வயிற்றில் கூடிக்க இதயம் பலம் பேறும்

காலில் ஆணி...


பச்சரிசி இலை அ தண்டை கிள்ள பால் வரும்.. அந்த பாலை தொடர்ந்து புண் உள்ள இடத்தில் தேய்து வர குணமாகும். 


தொடர் வறட்டு இருமல்...


ஒருவருக்கு இரண்டு ஆடாதொடை இலை வீதம் எடுத்து கசாயம் வைத்து குடிக்க வேண்டும்.. மற்றும்

தேனில் மிளகுத்தூள் கலந்து சாப்பிட வேண்டும்.


சூடான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

 தலையில் நீர் கோத்தல்

   இரவு தூங்கும் முன்வெற்றிலைக்கு போடும் சுண்ணாம்பூ எடுத்து மஞ்சள்தூள் சேர்த்து பத்து போடவும். உச்சி தலைநெற்றி காது பின்புறம் தடவவும். நல்ல தூக்கம் வரும் காலை மிகவும் நல்லா போகும். இது அகத்தியர் மருந்து.


தோல்நோய் 

வரும் முன் காப்பது

.இரத்த சுத்தம்

1.தோல் துவாரம் அடைக்கும் fatty acid சோப் நீக்கி குளியல் பொடி. சூரிய குளியல் or வியர்வை சிந்த உழைப்பு. 

2. கழிவு நீக்குதல்

 கடுக்காய் or திரிபலா or விளக்கெண்ணெய் உட்கொள்ளுதல். 

3. Fatty acid தயாரிக்கும்

கடை சாப்பாடு தவிர்த்தல். 

இதை கடைபிடிக்காவிட்டால் தோல் நோய் வரும். வந்தபின் இதனை பின்பற்றி கழிவு நீக்கி 

வெளி மருந்தாக குப்பைமேனி கல் உப்பு விராலி மஞ்சல் எலுமிச்சை சாறு சேர்த்து இடித்து அதனை பூசி குளித்தல். 

உணவாக மாதுளை or திராட்சை சாற்றுடன் தேன் கலந்து குடித்து வர இரத்த சுத்தி ஏற்பட்டு தோல் வியாதி நீங்கும்.

அல்சர் தீர்வு Ulcer

அல்சர் தீர்வு 

உணவை தேர்ந்தெடுத்தது சாப்பிடாததுதான் அல்சருக்கு முக்கிய காரணம் என்றாலும் மன அழுத்தம், மன பதட்டம், உரிய இடைவெளியில் உணவு உட்கொள்ளாதது, சுயமாக வலி நிவாரண மாத்திரைகளை அடிக்கடி எடுத்துகொள்வது, ஆரோக்கிய குறைபாடால் அதிகளவு எடுக்கும் ஸ்டீராய்டு மாத்திரைகள், அமிலம் கலந்த காரம் அதிகமான உணவை எடுத்துகொள்வது போன்றவை எல்லாம் அல்சருக்கு காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இந்த அல்சர் நோயை போக்க  மண தக்காளி கீரையுடன் (1/2) பாதி அளவு நாட்டு தக்காளி🍅 விதை பகுதி நீக்கி விட்டு பனங்கற்கண்டு சேர்த்து 3 நாள் காலை உணவுக்கு முன் ஜூஸ் போட்டு குடிக்கவும்....

6 days morning breakfast Task ( இயற்கை உணவுகள் )....... திங்கள் முதல் சனிக்கிழமை வரை.....

 வணக்கம்

6 days morning breakfast Task ( இயற்கை உணவுகள் ).......வருகின்ற திங்கள் முதல் சனிக்கிழமை வரை.....


இந்த Task செய்பவர்களுக்கு கிடைக்கும் பரிசுகள்.....


* முகம் பொலிவுபெறும்

* உடல் சூடு குறையும்

* முடி உதிர்வது கட்டுப்படும்

* கண்கள் பளிச்சிடும்

* என்றும் இளமை

* செய்யும் அனைத்து செயல்களிலும் விழிப்புணர்வு

* தோல் பளபளப்பாகி அழகு பெறும்

* பெண்களின் கர்பப்பை குளிரும், சூடு குறைவதால் கரு உருவாவது எளிதாகும்

* பற்கள் பலம்பெறும்

* எலும்புகள் வலுப்பெறும்

* நரம்பு மண்டலம் பலம் பெற்று உறுதியாகும்

* சுவாசம் சீராகும், எண்ணம் தெளிவாகும்

* குடல் புண், வாய்புண் தீரும்

* குடல் சுத்தமாகும், அதனால் இரத்தம் சுத்தமாகி  ....சகல நோய்களும் தீரும்.....


விரும்புபவர்கள் கலந்துகொள்ளலாம் , கட்டாயாமில்லை, .....


ஆனால் செய்தவர்களின் அனுபவபதிவு அவசியம் தேவை....750 நண்பர்களில் ஒருவர் அனுபவபதிவு செய்தாலும் மகிழ்வேன், இந்த அனுபவ பதிவு மற்றவர்களுக்கு நல்ல உணவுகளை நோக்கி செல்லவும் நோயின்றி வாழவும் வழிசெய்யும்....நன்றி 🙏


 சனிக்கிழமை தேவையான பொருட்கள் பதிவு வரும் 💐🤝

வணக்கம்


6 days breakfast Task தேவையான உணவு பொருட்கள்


* திங்கட்கிழமை தேவையான பொருட்கள்

மாதுளை 1 கிலோ, விதையுள்ள கருப்பு திராட்சை 1 கிலோ, தர்பூசணி


* செவ்வாய்கிழமை தேவையான பொருட்கள்

கோவைக்காய் 50 கிராம், கொத்தவரங்காய் 50 கிராம், மஞ்சள் பூசணி 50 கிராம், புடலங்காய் 50 கிராம், வாழைக்காய் 50 கிராம், தேங்காய் துருவல் ஒரு கப்


* புதன்கிழமை

பாசிபயறு 100 கிராம்

சுண்டல் 50 கிராம்

முழு உளைந்து 50 கிராம்

வேர்கடலை 25 கிராம் முளைகட்டவும்


* வியாழன்

உலர் திராட்சை 10 , பேரீச்சை 4, முந்திரி 10, பாதாம் 10, வால்நட் 2, பிஸ்தா5, வெள்ளரிவிதை ஒரு ஸ்பூன், பூசணிவிதை ஒரு ஸ்பூன், எள் ஒரு ஸ்பூன், வறுத்த வேர்கடலை, சூரியகாந்திவிதை, தேங்காய் 1 சில்.


வெள்ளிக்கிழமை

கம்பு 50 கிராம், கேழ்வரகு 50 கிராம், முளைகட்டவும்


சனிக்கிழமை

வேப்பிலை, வெண்பூசணி 1/4 கிலோ


*எலுமிச்சை 1

*மிளகு தூள்

*தேங்காய் 1

* பொடித்த கல்உப்பு

* ஏலக்காய் தூள்

வைத்தியரிடம் கேட்கும் முதல் கேள்வி ஐயா உடல் சூட்டை தணிக்கும் மூலிகை எது? Herb for body heat problem

 🌿🙏ஆத்மவணக்கம் இயற்கையின் தோழமைகளுக்கு



* 🌱🌿🍁🌾☘️🌵🌳 இயற்கை உணவுகள், மூலிகைகள், நோய்நீக்கும் யோகா, முத்திரைகள்

ஆரோக்கியமான வாழ்வுதரும் தாவரங்கள் (மூலிகைகள்) அரும்பொக்கிஷங்கள். நம்முடைய இல்லங்களில் உள்ள அஞ்சறைப்பெட்டி

அற்புத உணவு பொருட்கள்

 நம் செந்தமிழை போன்றே தொன்மையானது


பற்பல தீராநோய்களை நீக்கும் அரிய தொன்தமிழர் வாழ்வியல் நுட்பங்கள் அறிந்து கொள்வோம் ! அவனியெங்கும் அறியச்செய்வோம்.!...

🌿☘️🌵🌱🍀🌴🌳🎋🌾🍁

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


மணலை கயிராக்கும்

யானை வணங்கி எனும் ஆனைநெருஞ்சில்🌿🌿


ஒரு  வைத்தியரை யார் ஒருவர் சந்திக்க நேர்ந்தாலும் அந்த வைத்தியரிடம் கேட்கும் முதல் கேள்வி ஐயா உடல் சூட்டை தணிக்கும் மூலிகை எது? 

அதற்கான பதிவு இதோ உங்களுக்காக.!


இந்த செடியை பயன்படுத்தும் முறை, அதாவது இந்த மூலிகை செடியின் நுனி பகுதியில் இருந்து வேர் வரை மருந்தாகும். இதில் நன்கு சுத்தமான இலைகளை பறித்து தூசி இல்லாமல் துடைத்துவிட்டு இலையின் பின்புறம் ஏதாவது பூச்சிகளின் அடுக்கு முட்டைகள் உள்ளதா என்று பார்த்துவிட்டு பிறகு நாலும் மூன்றுமாக இலைகளை கில்லி தண்ணீரில் போட்டு ஒரு  ஸ்பூனால் நன்கு கலக்கவும்.


பிறகு ஒரு பத்து அல்லது இருபது நிமிடங்கள் அசையாமல் அப்படியே வைத்து விடவும்; பிறகு அந்த நீரை வடிகட்டி பார்த்தால் விளக்கெண்ணெய் போன்று வழுவழுப்பாக இருக்கும், அதை அப்படியே ஒரு நபருக்கு 200 மில்லி அளவு வரை சாப்பிடலாம் ‌.  கற்கண்டு பொடி கலந்தும் சாப்பிடலாம். காலை ஒரு வேளை மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். தொடர்ந்து பத்து நாட்கள் சாப்பிடவேண்டும். பிறகு தேவைபட்டால் ஒரு வாரம் கழித்து மீண்டும் சாப்பிடலாம்


இதனால் கிடைக்கும் நன்மைகள்🌿🙏🌼☀️🌸👍🌸🌼🙏🌿


1, சிறுநீர் தாராளமாக இறங்கும்


2, நீர்க்கடுப்பு உடனே குணமாகும்


3, வெள்ளை படுதல் பூரண குணமாகும்


4, கனவில் செமன்  வெளியாவது நிற்கும் (தவறாக நினைக்க வேண்டாம்)


5, தசைகள்சிதைவு இது முக்கியமாக கவணிக்க வேண்டும். தாது உடைச்சல் என்ற ஒரு மிகப்பெரிய பிரச்சினையை குணமாக்கும். 


6,  நீர்க்கோவை என்ற கால் வீக்கத்தில் உள்ள நீர் இறங்கும் வீக்கம் வாடும்


7, வெட்டை சூடு அது சம்பந்தமான பிடிப்பு குணமாகும்.


8, முறையாக சாப்பிட்டால் இது உடலில் உள்ள வெண்ணிற புள்ளிகளை குணமாக்கும்


9, இரத்தம் சுத்தமாகும், அதன் காரணமாக சூடு குறைந்து இரத்த கொதிப்பு அடங்கும்.


மேலும்,


இந்த இலைகளை ஒரு நெல்லிக்காய் அளவு பச்சையாக அரைத்து அந்த விழுதை தயிரில் கலந்து சாப்பிடலாம்.


இன்னும் பல மருத்துவ குணங்களைக் கொண்டது இந்த மூலிகை.


இதற்கு யானை வனங்கி என்ற பெயரும் உண்டு. இதன் காரணம், யானைகளின் கால் பாதம் மணல் மூட்டை போன்றது. அதனால் யானைகளின் கால்களில் இதன் முட்கள் குத்தினால் ஆபத்து. அதனால் இந்த செடி இருக்கும் பகுதியில் யானைகள் செல்லாது


🍁ருதம்பராயோகா கோவை.

செவ்வாய்க்கிழமை ஒரு நாள் பழ சாறு Task | One day Liquid food task for healthy life

 செவ்வாய்க்கிழமை ஒரு நாள் பழ சாறு Task கிற்கான தேவையான பொருட்கள் பதிவு.....


எலுமிச்சை 2

தேங்காய் 1/2 முடி

கற்றாழை 2 துண்டு

இஞ்சி 

தேன்

நாட்டுசர்க்கரை 50 கிராம்

ஊறவைத்த  வேர்கடலை 2 ஸ்பூன்

வாழைப்பழம் 2

ஜாதிக்காய் 1 

பீட்ரூட்  1/4 ஸ்பூன் (துருவியது)

சாத்துக்குடி 2

பாதாம்பிசின் 1 ஸ்பூன்

கல் உப்பு

வெள்ளரிக்காய் 1

மிளகு

அத்தி பழம்  2

திராட்சை 10 

சப்போட்டா 2


வணக்கம்


செவ்வாய்க்கிழமை ஒரு நாள் Task கிற்கான உணவு பதிவு....👇


காலை 6 to 8


எலுமிச்சை 1/4 பங்கு பழத்தில் சாறு எடுத்து, அதோடு ஒரு இன்ச் இஞ்சியில் கால் பங்கு அளவு எடுத்து துருவி பிழிந்து வடிகட்டி நீரும் தேனும் கலந்து புளிப்பில்லாமல் குடிக்கவும்...ஒரு வாய் மெதுவா மிழுங்கியதும் அடுத்து குடித்து வாய்முழுவதும் பட்டு போகுமாறு குடிக்கவும்....குறைந்தது 5 நிமிடம் குடிக்கவும் ஒரு டம்ளர் சாறை.... ( தேவைபட்டால் 10 மணிக்குள் இரண்டுமுறை எலுமிச்சை சாறு குடிக்கலாம் )


காலை 11 மணிக்கு 


கற்றாழை ஜூஸ்


ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, இஞ்சி சாறு சில துளிகள், நாட்டுச்சர்க்கரை ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து, அதோடு இரண்டு துண்டு கற்றாழை எடுத்து உரலில் இடிச்சு சேர்த்து குடிக்கவும்....( மிக்ஸியில் அரைக்ககூடாது )....



மதியம் 1 மணிக்கு


வேர்கடலை ஸ்மூத்தி


ஊறவைத்த வேர்கடலை 2 ஸ்பூன் ( உரலில் இடிச்சு பொடிக்கனும் அல்லது மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும் ), வாழைப்பழம் 2 , ஜாதிக்காய் பொடி ஒரு சிட்டிகை, ஏலம்பொடி ஒரு சிட்டிகை, தேன் சில துளிகள் கலந்து குடிக்கவும்....இதில் 1/4 ஸ்பூன் பீட்ரூட் துருவல் சாறை கைகளால் பிழிந்து விடவும்....


மாலை 3 மணிக்கு


சாத்துக்குடி ஜூஸ்


இரண்டு சாத்துக்குடி சாறு எடுத்து ஒரு கல் உப்பு, ஊறவைத்த பாதாம்பிசின் ஒரு ஸ்பூன் (பொடிச்சு ஊறவைச்சா ஒரே மாதிரி சீராக இருக்கும் ), கலந்து குடிக்கவும்....


மாலை 4 மணிக்கு


வெள்ளரிக்காய் ஜூஸ்


தோல் நீக்கிய வெள்ளரிகாய் ஒரு 50 கிராம், மிளகு, ஒரு கல் உப்பு போட்டு அரைத்து நீர் கலந்து துணியில் வடிகட்டி குடிக்கவும்....


மாலை 6 மணிக்கு 


அத்திப்பழ ஜூஸ்


ஒரு மணிநேரம் ஊறவைத்த அத்திப்பழம் 2, ஒரு மணிநேரம் ஊறவைத்த திராட்சை 10....அரைத்து வெள்ளரி விதை 1 ஸ்பூன் அல்லது பூசணி விதை கலந்து குடிக்கவும்.....


இரவு 7.30 மணிக்கு ( தேவைபட்டால் ஜூஸ் குடிக்கலாம் இல்லேனா விட்டுடலாம்) 👇



சப்போட்டா ஜூஸ்


ஒரு சில் தேங்காய் பால் எடுத்து, அதில் தோல் நீக்கிய சப்போட்டா பழங்களை கலந்து குடிக்கவும், தேவைபட்டால் நாட்டுசர்க்கரை அரை ஸ்பூன் கலக்கவும்....


முக்கிய குறிப்புகள்


* பதிவிட்ட உணவு பதிவுகள் நேரத்திற்கேற்றவாறு, உடல் நிலைக்கு மாறுபாடு இல்லாமல் பதிவிடபட்டுள்ளது, மாற்றி மாற்றி குடிக்கவேண்டாம், மாற்றி குடிக்க நினைச்சா முழு நாளையும் உங்கள் செளகரியத்திற்கு மாற்றிக்கலாம், இதில் உள்ள உணவுகள் வேண்டாம்....


* ஒரு ஜூஸ் குடித்து அடுத்த ஜூஸ்க்கு நேரம் வரும்போது பசிக்கவில்லை என்றால் விட்டுவிடலாம், குடிச்சுதான் ஆகனும்னு கட்டாயாமில்லை....அதேமாதிரி ஒரு நேரத்திற்கு ஒரு டம்ளர்தான் குடிக்கனும்னு இல்லை, வயிறு நிறையும்படி குடிக்கலாம்...


* கற்றாழை ஜூஸ் குடிக்கும் முன்பும், பின்பும் ஒரு மணிநேர இடைவெளி அவசியம் தேவை


* நாளை எண்ணெய் தேய்த்து குளிப்பவர்கள் இந்த உணவு Task எடுக்க வேண்டாம் ....


* காலை ஜூஸ் ஆரம்பமாகும் முன் 5 நிமிடம் உடல் உறுப்புகளுக்கு ஒவ்வொன்றாய் நன்றி  சொல்லிவிட்டு ஆரம்பிக்கவும்


* நாளை முழு நாள் சமைத்த உணவு நீங்க உண்ணப்போவதில்லை, அதனால் வழக்கமா நீங்கள் உண்ணும் காலை உணவை ( சமைத்த உணவு ) நீங்களே செய்து, இட்லியோ தோசையோ எதுவாயிருந்தாலும் ஒரு டப்பாவில் போட்டு யாருக்காவது கொடுங்க.....( இந்த செயல் உங்கள் பசியை போக்கும் )....மனநிறைவு கொடுக்கும் ( விரும்பினா செய்ங்க, கட்டாயமில்லை )......


* காலை மாலை இரண்டு முறை குளிக்கவும் ( தலைமுதல் கால்வரை நனையும்படி )....


* மாலை 5 மணிக்கு கைதட்டும் பயிற்சி 10 நிமிடம், நாள் முழுதும் உணவு மாற்றமானதால் இந்த பயிற்ச்சி ஒரு புத்துணர்வு கொடுக்கும், உங்களை நீங்களே பாராட்டும்படியாகவும் இருக்கும்.....


மேற்கண்ட பதிவுகள் அனைத்தும் நம் நன்மைக்கேயன்றி வேறொன்றுமில்லை....சிறந்த உணவு தேர்வு, ஆரோக்கியத்தை நோக்கிய பயணத்தை எளிதாக்கும்....


* பாராட்டுகள், வாழ்த்துக்கள் கமெண்டில் பதிவது சிறந்த செயல்....


* கலந்துரையாடல், விவாதங்கள்,  சந்தேகங்கள் கேட்பது, ஆலோசனை கூறுவது,  கமெண்டில் செயவது சிறப்பு.....


* இடைவெளிகளில் பசித்தால் திராட்சை (fresh ) சாப்பிடலாம், அவல் ஒரு ஸ்பூன் அப்படியே வாயில் போட்டு சுவைக்கலாம் 5 நிமிடம், வறுத்த வேர்கடலை அல்லது கடலை மிட்டாய் சாப்பிடலாம், தண்ணீர் குடிக்கலாம், 


நன்றி 🙏