Showing posts with label siththar. Show all posts
Showing posts with label siththar. Show all posts

வைத்தியரிடம் கேட்கும் முதல் கேள்வி ஐயா உடல் சூட்டை தணிக்கும் மூலிகை எது? Herb for body heat problem

 🌿🙏ஆத்மவணக்கம் இயற்கையின் தோழமைகளுக்கு



* 🌱🌿🍁🌾☘️🌵🌳 இயற்கை உணவுகள், மூலிகைகள், நோய்நீக்கும் யோகா, முத்திரைகள்

ஆரோக்கியமான வாழ்வுதரும் தாவரங்கள் (மூலிகைகள்) அரும்பொக்கிஷங்கள். நம்முடைய இல்லங்களில் உள்ள அஞ்சறைப்பெட்டி

அற்புத உணவு பொருட்கள்

 நம் செந்தமிழை போன்றே தொன்மையானது


பற்பல தீராநோய்களை நீக்கும் அரிய தொன்தமிழர் வாழ்வியல் நுட்பங்கள் அறிந்து கொள்வோம் ! அவனியெங்கும் அறியச்செய்வோம்.!...

🌿☘️🌵🌱🍀🌴🌳🎋🌾🍁

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


மணலை கயிராக்கும்

யானை வணங்கி எனும் ஆனைநெருஞ்சில்🌿🌿


ஒரு  வைத்தியரை யார் ஒருவர் சந்திக்க நேர்ந்தாலும் அந்த வைத்தியரிடம் கேட்கும் முதல் கேள்வி ஐயா உடல் சூட்டை தணிக்கும் மூலிகை எது? 

அதற்கான பதிவு இதோ உங்களுக்காக.!


இந்த செடியை பயன்படுத்தும் முறை, அதாவது இந்த மூலிகை செடியின் நுனி பகுதியில் இருந்து வேர் வரை மருந்தாகும். இதில் நன்கு சுத்தமான இலைகளை பறித்து தூசி இல்லாமல் துடைத்துவிட்டு இலையின் பின்புறம் ஏதாவது பூச்சிகளின் அடுக்கு முட்டைகள் உள்ளதா என்று பார்த்துவிட்டு பிறகு நாலும் மூன்றுமாக இலைகளை கில்லி தண்ணீரில் போட்டு ஒரு  ஸ்பூனால் நன்கு கலக்கவும்.


பிறகு ஒரு பத்து அல்லது இருபது நிமிடங்கள் அசையாமல் அப்படியே வைத்து விடவும்; பிறகு அந்த நீரை வடிகட்டி பார்த்தால் விளக்கெண்ணெய் போன்று வழுவழுப்பாக இருக்கும், அதை அப்படியே ஒரு நபருக்கு 200 மில்லி அளவு வரை சாப்பிடலாம் ‌.  கற்கண்டு பொடி கலந்தும் சாப்பிடலாம். காலை ஒரு வேளை மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். தொடர்ந்து பத்து நாட்கள் சாப்பிடவேண்டும். பிறகு தேவைபட்டால் ஒரு வாரம் கழித்து மீண்டும் சாப்பிடலாம்


இதனால் கிடைக்கும் நன்மைகள்🌿🙏🌼☀️🌸👍🌸🌼🙏🌿


1, சிறுநீர் தாராளமாக இறங்கும்


2, நீர்க்கடுப்பு உடனே குணமாகும்


3, வெள்ளை படுதல் பூரண குணமாகும்


4, கனவில் செமன்  வெளியாவது நிற்கும் (தவறாக நினைக்க வேண்டாம்)


5, தசைகள்சிதைவு இது முக்கியமாக கவணிக்க வேண்டும். தாது உடைச்சல் என்ற ஒரு மிகப்பெரிய பிரச்சினையை குணமாக்கும். 


6,  நீர்க்கோவை என்ற கால் வீக்கத்தில் உள்ள நீர் இறங்கும் வீக்கம் வாடும்


7, வெட்டை சூடு அது சம்பந்தமான பிடிப்பு குணமாகும்.


8, முறையாக சாப்பிட்டால் இது உடலில் உள்ள வெண்ணிற புள்ளிகளை குணமாக்கும்


9, இரத்தம் சுத்தமாகும், அதன் காரணமாக சூடு குறைந்து இரத்த கொதிப்பு அடங்கும்.


மேலும்,


இந்த இலைகளை ஒரு நெல்லிக்காய் அளவு பச்சையாக அரைத்து அந்த விழுதை தயிரில் கலந்து சாப்பிடலாம்.


இன்னும் பல மருத்துவ குணங்களைக் கொண்டது இந்த மூலிகை.


இதற்கு யானை வனங்கி என்ற பெயரும் உண்டு. இதன் காரணம், யானைகளின் கால் பாதம் மணல் மூட்டை போன்றது. அதனால் யானைகளின் கால்களில் இதன் முட்கள் குத்தினால் ஆபத்து. அதனால் இந்த செடி இருக்கும் பகுதியில் யானைகள் செல்லாது


🍁ருதம்பராயோகா கோவை.