Showing posts with label brinjal. Show all posts
Showing posts with label brinjal. Show all posts

கத்திரிக்காய் மருத்துவ பயன்கள் Health Benefits of Brinjal

 இயற்கைவாழ்வியல்முறை

🍆🍆🍆🍆🍆🍆

கத்திரிக்காய் மருத்துவபயன்கள்:

 

நமது பாரம்பரியம் மிக்க உணவுகளில் சங்ககாலம் தொட்டு  புகழ்பெற்ற காய்கறி வகைகளில் ஒன்றான கத்திரிக்காய், சைவப் பிரியர்களுக்கு மிகவும் அருமையான சுவையுள்ள உணவாகும். பிஞ்சுக் கத்திரிக்காயை நல்லெண்ணெயுடன் சேர்த்து செய்யும் சமையலானது ஆஹா! மிகவும் அற்புதமாக இருக்கும். கத்தரிக்காயில் அதிக நீர்ச்சத்து, இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து, கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், விட்டமின்கள் A, C, B2, மற்றும் B2 போன்ற சத்து வகைகள் காணப்படுகின்றன.


 கத்திரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...🌿🙏


கத்திரிக்காய் நச்சுக்களை வெளியேற்றி, ரத்தத்தை சுத்தம் செய்கிறது.


🍆🍆🍆🍆🍆🍆

புற்றுநோய் மற்றும் ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து சமைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது.


🍆🍆🍆🍆🍆🍆

கத்திரிக்காயில் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் இருப்பதால், நம் உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் மற்றும் சிறுநீரகக் கற்களை கரைத்து, உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.


🍆🍆🍆🍆🍆🍆

கத்திரிக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்து உள்ளது. இதில் உள்ள நீர் சத்து சருமத்தினை மென்மையாக வைத்து கொள்வதற்க்கும், நரம்புகளுக்கு வலுவூட்டவும் உதவுகிறது. மேலும் சளி, இருமலை குறைக்க கூடிய மருந்தாக இந்த கத்திரிக்காய் உள்ளது.மேலும் உடலில் அதிகமாக சேரும் இரும்பு சத்தினை சமப்படுத்தவும் இது உதவுகிறது.


 🍆🍆🍆🍆🍆🍆

கீல்வாதம்,பித்தம், தொண்டைக்கட்டு, உடல் பருமன், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், சளி, மலசிக்கல், கரகரப்பான குரல், வாத நோய் போன்ற நோய்களை குணப்படுத்தும் மருந்தாக இந்த கத்திரிக்காய் உள்ளது.மேலும் பசியின்மையை குணப்படுத்தவும், உடல் வலு குறைவதை தடுக்கிறது.


கத்திரிக்காயில் உள்ள போட்டோ நியூட்ரியண்ட்ஸ் நினைவாற்றலை அதிகரிக்க செய்கிறது. பிஞ்சு கத்திரிகாயை சாப்பிடுவதன் மூலம் உடல் பருமனை குறைக்க முடியும். மேலும் மூளை செல்களை வலுப்படுத்தவும் பாதுகாக்கவும் இது உதவுகிறது.


🍆🍆🍆🍆🍆🍆

இதில் வைட்டமின் பி சத்து உள்ளதால் இதய நோய்கள் வராமல் தடுக்கும் மேலும் இரத்த அழுதத்தினை கட்டுப்படுத்தி மன அமைதியை தரக்கூடிய மருந்தாக இந்த கத்திரிக்காய் உள்ளது.


🌷🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும் ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்.


உடலில் உள்ள எல்லா உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய

இயற்கை வாழ்வியல்முறை சார்ந்த  

ஆலோசனைகள் வழங்கபடும்.


ருதம்பரா யோகா மையம்

செல்: 86108 23072