செவ்வாய்க்கிழமை ஒரு நாள் பழ சாறு Task | One day Liquid food task for healthy life

 செவ்வாய்க்கிழமை ஒரு நாள் பழ சாறு Task கிற்கான தேவையான பொருட்கள் பதிவு.....


எலுமிச்சை 2

தேங்காய் 1/2 முடி

கற்றாழை 2 துண்டு

இஞ்சி 

தேன்

நாட்டுசர்க்கரை 50 கிராம்

ஊறவைத்த  வேர்கடலை 2 ஸ்பூன்

வாழைப்பழம் 2

ஜாதிக்காய் 1 

பீட்ரூட்  1/4 ஸ்பூன் (துருவியது)

சாத்துக்குடி 2

பாதாம்பிசின் 1 ஸ்பூன்

கல் உப்பு

வெள்ளரிக்காய் 1

மிளகு

அத்தி பழம்  2

திராட்சை 10 

சப்போட்டா 2


வணக்கம்


செவ்வாய்க்கிழமை ஒரு நாள் Task கிற்கான உணவு பதிவு....👇


காலை 6 to 8


எலுமிச்சை 1/4 பங்கு பழத்தில் சாறு எடுத்து, அதோடு ஒரு இன்ச் இஞ்சியில் கால் பங்கு அளவு எடுத்து துருவி பிழிந்து வடிகட்டி நீரும் தேனும் கலந்து புளிப்பில்லாமல் குடிக்கவும்...ஒரு வாய் மெதுவா மிழுங்கியதும் அடுத்து குடித்து வாய்முழுவதும் பட்டு போகுமாறு குடிக்கவும்....குறைந்தது 5 நிமிடம் குடிக்கவும் ஒரு டம்ளர் சாறை.... ( தேவைபட்டால் 10 மணிக்குள் இரண்டுமுறை எலுமிச்சை சாறு குடிக்கலாம் )


காலை 11 மணிக்கு 


கற்றாழை ஜூஸ்


ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, இஞ்சி சாறு சில துளிகள், நாட்டுச்சர்க்கரை ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து, அதோடு இரண்டு துண்டு கற்றாழை எடுத்து உரலில் இடிச்சு சேர்த்து குடிக்கவும்....( மிக்ஸியில் அரைக்ககூடாது )....



மதியம் 1 மணிக்கு


வேர்கடலை ஸ்மூத்தி


ஊறவைத்த வேர்கடலை 2 ஸ்பூன் ( உரலில் இடிச்சு பொடிக்கனும் அல்லது மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும் ), வாழைப்பழம் 2 , ஜாதிக்காய் பொடி ஒரு சிட்டிகை, ஏலம்பொடி ஒரு சிட்டிகை, தேன் சில துளிகள் கலந்து குடிக்கவும்....இதில் 1/4 ஸ்பூன் பீட்ரூட் துருவல் சாறை கைகளால் பிழிந்து விடவும்....


மாலை 3 மணிக்கு


சாத்துக்குடி ஜூஸ்


இரண்டு சாத்துக்குடி சாறு எடுத்து ஒரு கல் உப்பு, ஊறவைத்த பாதாம்பிசின் ஒரு ஸ்பூன் (பொடிச்சு ஊறவைச்சா ஒரே மாதிரி சீராக இருக்கும் ), கலந்து குடிக்கவும்....


மாலை 4 மணிக்கு


வெள்ளரிக்காய் ஜூஸ்


தோல் நீக்கிய வெள்ளரிகாய் ஒரு 50 கிராம், மிளகு, ஒரு கல் உப்பு போட்டு அரைத்து நீர் கலந்து துணியில் வடிகட்டி குடிக்கவும்....


மாலை 6 மணிக்கு 


அத்திப்பழ ஜூஸ்


ஒரு மணிநேரம் ஊறவைத்த அத்திப்பழம் 2, ஒரு மணிநேரம் ஊறவைத்த திராட்சை 10....அரைத்து வெள்ளரி விதை 1 ஸ்பூன் அல்லது பூசணி விதை கலந்து குடிக்கவும்.....


இரவு 7.30 மணிக்கு ( தேவைபட்டால் ஜூஸ் குடிக்கலாம் இல்லேனா விட்டுடலாம்) 👇



சப்போட்டா ஜூஸ்


ஒரு சில் தேங்காய் பால் எடுத்து, அதில் தோல் நீக்கிய சப்போட்டா பழங்களை கலந்து குடிக்கவும், தேவைபட்டால் நாட்டுசர்க்கரை அரை ஸ்பூன் கலக்கவும்....


முக்கிய குறிப்புகள்


* பதிவிட்ட உணவு பதிவுகள் நேரத்திற்கேற்றவாறு, உடல் நிலைக்கு மாறுபாடு இல்லாமல் பதிவிடபட்டுள்ளது, மாற்றி மாற்றி குடிக்கவேண்டாம், மாற்றி குடிக்க நினைச்சா முழு நாளையும் உங்கள் செளகரியத்திற்கு மாற்றிக்கலாம், இதில் உள்ள உணவுகள் வேண்டாம்....


* ஒரு ஜூஸ் குடித்து அடுத்த ஜூஸ்க்கு நேரம் வரும்போது பசிக்கவில்லை என்றால் விட்டுவிடலாம், குடிச்சுதான் ஆகனும்னு கட்டாயாமில்லை....அதேமாதிரி ஒரு நேரத்திற்கு ஒரு டம்ளர்தான் குடிக்கனும்னு இல்லை, வயிறு நிறையும்படி குடிக்கலாம்...


* கற்றாழை ஜூஸ் குடிக்கும் முன்பும், பின்பும் ஒரு மணிநேர இடைவெளி அவசியம் தேவை


* நாளை எண்ணெய் தேய்த்து குளிப்பவர்கள் இந்த உணவு Task எடுக்க வேண்டாம் ....


* காலை ஜூஸ் ஆரம்பமாகும் முன் 5 நிமிடம் உடல் உறுப்புகளுக்கு ஒவ்வொன்றாய் நன்றி  சொல்லிவிட்டு ஆரம்பிக்கவும்


* நாளை முழு நாள் சமைத்த உணவு நீங்க உண்ணப்போவதில்லை, அதனால் வழக்கமா நீங்கள் உண்ணும் காலை உணவை ( சமைத்த உணவு ) நீங்களே செய்து, இட்லியோ தோசையோ எதுவாயிருந்தாலும் ஒரு டப்பாவில் போட்டு யாருக்காவது கொடுங்க.....( இந்த செயல் உங்கள் பசியை போக்கும் )....மனநிறைவு கொடுக்கும் ( விரும்பினா செய்ங்க, கட்டாயமில்லை )......


* காலை மாலை இரண்டு முறை குளிக்கவும் ( தலைமுதல் கால்வரை நனையும்படி )....


* மாலை 5 மணிக்கு கைதட்டும் பயிற்சி 10 நிமிடம், நாள் முழுதும் உணவு மாற்றமானதால் இந்த பயிற்ச்சி ஒரு புத்துணர்வு கொடுக்கும், உங்களை நீங்களே பாராட்டும்படியாகவும் இருக்கும்.....


மேற்கண்ட பதிவுகள் அனைத்தும் நம் நன்மைக்கேயன்றி வேறொன்றுமில்லை....சிறந்த உணவு தேர்வு, ஆரோக்கியத்தை நோக்கிய பயணத்தை எளிதாக்கும்....


* பாராட்டுகள், வாழ்த்துக்கள் கமெண்டில் பதிவது சிறந்த செயல்....


* கலந்துரையாடல், விவாதங்கள்,  சந்தேகங்கள் கேட்பது, ஆலோசனை கூறுவது,  கமெண்டில் செயவது சிறப்பு.....


* இடைவெளிகளில் பசித்தால் திராட்சை (fresh ) சாப்பிடலாம், அவல் ஒரு ஸ்பூன் அப்படியே வாயில் போட்டு சுவைக்கலாம் 5 நிமிடம், வறுத்த வேர்கடலை அல்லது கடலை மிட்டாய் சாப்பிடலாம், தண்ணீர் குடிக்கலாம், 


நன்றி 🙏