பாத்தி அமைக்கும் முறை

 பயிர்தொழிலில் இரு வகையாக பாத்தி அமைப்பர். நில மட்டத்திற்கு அமைக்கும் பாத்தியை குழிப் பாத்தி என்றும், நில மட்டத்திலிருந்து சற்று மேடாக அமைப்பதை பார் அல்லது மேட்டுப்பாத்தி என்பர்.


நீர் மற்றும் மழை குறைவாக இருக்கும் இடங்களில் முக்கியமாக கீரை சாகுபடிக்கு குழி பாத்தி சதுர அல்லது செவ்வக வடிவில் அமைப்பதுண்டு.


மழை பொழிவு அதிகம் உள்ள இடங்களிலும், நீரை மிச்சப்படுத்துவதற்கும் செடி வளர்ச்சியை செம்மை படுத்துவதற்காக அமைக்கப்படுவது மேட்டுப்பாத்தியாகும்.


பாசனம் செய்ய வசதியாக இருக்க மேட்டுப்பாத்தியின் அகலத்தை சுருக்கி நீளவாக்கில் அமைத்து அதை ஒட்டி பாசனத்திற்கு கால்வாயும் அமைப்பர். இதை ஆங்கிலத்தில் bund and pit method எனக் கூறுவதுண்டு.


மேட்டுப்பாத்தி அமைப்பில் நீரை 50% ற்கு மேல் மிச்சப்படுத்தலாம். அது மட்டுமல்ல செடியின் வளர்ச்சியும் அபரிமிதமாக இருக்கும். செடியின் வளர்ச்சி வேரின் வளர்ச்சியை சார்ந்து இருக்கும். வேர் படர்ந்து விரிவடைந்தால் செடியின் வளர்ச்சி அதற்கேற்றார் போல் அமையும். அந்த வகையில் இந்த மேட்டுப்பாத்தி, குழி முறையானது வேர் வளர்ச்சியை தூண்டும் ஓர் அமைப்பாக அமைகிறது.


நீரானது சாய்மானம் அல்லது குழி/பள்ளத்தை நோக்கி ஓடும். அதே போல் வேரும் பள்ளத்தில் நீர் இருக்கும்/ கிடைக்கும் என்பதால் முதலில் பள்ளத்தை நோக்கி விரிவடையும். வேர் விரிவடைவதற்கும், செடி வளர்ச்சிக்கும் இந்த பார் குழி முறைதான் காரணம்.


மலைச்சரிவுகளில் மரங்கள் ஓங்கி வளர்வது இந்த காரணத்தினால் தான்.