ஆப்பிரிக்கன் ஜியான்ட் ஸ்னைல் Achatina fulica மற்றும் செம்பகம் Centropus sinensis உருவாக்கிய புது உணவுச் சங்கிலி

 நம்மில் அனேகம்பேர் சென்னையின் அந்த கால வயல்வெளிகளில் தான் வீடு கட்டி குடியேறியுள்ளோம்.


களி நிறைந்த இப்பகுதிகள் நெல், பனை வளர்ச்சிக்கு உகந்ததாக இருந்திருக்கிறது !!


இந்த களியில் ஆப்பிரிக்கன் ஜியான்ட் ஸ்னைல் (Giant African Snail - Achatina fulica) என்கிற இந்த நத்தை செழித்து வளர்கின்றன  



4, 5 வருடங்கள் ஆயுள் கொண்ட இவ வருடத்திற்கு 2500 முட்டைகள் இடுபவனாம். சுமார் 500 வகைகள் நம் பயிர்களை கபளீகரம் செய்ய வல்லவை.


இதற்கு எதிரிகளே கிட்டத்தட்ட இல்லை.

10 வருடங்கள் முன் நான் கஜியாபாத், அரசு அலுவலகத்திலிருந்து இதற்கான  ஒரு ஒட்டுண்ணி வண்டு கொண்டு வந்து விட்டும் பார்த்தேன். ஹூ ஹும்


சமீபத்தில் இங்கு வந்திறங்கியுள்ள பெங்கால், அஸ்ஸாம் தொழிலாளிகள் இதை சமைத்து உண்பதாக இன்னொரு குழு நண்பர் சொல்லியிருந்தார்


இன்னிலையில் கடந்த வாரமாக கவனித்ததில் இந்த நத்தைகளை 


செம்போத்து (Greater coucal or Crow pheasant, Scientific name: Centropus sinensis ) என்கிற குயில் ரகப் பறவை எடுத்க்சென்று உண்ணுகிரதை கவனிக்க முடிந்தது .

..

இதுவும் ஒரு உணவுச்சங்கிலியின் அங்கம் என்பதறிய மகிழ்ச்்சி 


போட்டோ விடியோ