வளம் கொடுக்கும் குப்பைக்கழிவுகள் Black Gold | How to make organic manure

 வளம் கொடுக்கும் குப்பைக்கழிவுகள்.....


நம் வீட்டு சமையலறை கழிவுகளை இரு வகையில் தோட்டத்திற்கு உரமாக்கலாம் ......


1 .  காயவைத்து உபயோகிப்பது

2. மட்கவைத்து ( ஈரகழிவுகள் ) உபயோகிப்பது


காயவைத்து உபயோகிப்பது....


நாம் காய்கறி நறுக்கும் போது கிடைக்கும் தோல், கீரை தண்டுகள், இப்படி நிறைய கிடைக்கும்..இதை அப்படியே சேர்த்துவைச்சா இடம் நிறைய தேவைப்படும், தோல் தண்டுகள் இப்படி கிடைப்பதை பொடியா நறுக்கி ஒரு பையில் போட்டு ஏதாவது வெயில் படும் இடத்தில் வைச்சிட்டு உங்களுக்கு தோனும் போது கிண்டிவிட்டா போதும் இப்ப அடிக்கிற வெயிலுக்கு சறுகா காய்ஞ்சிடும்....

இதை மாடிதோட்டம் வைக்கும்போது தொட்டிக்கு அடியில் இந்த காய்ந்த காய்கறி கழிவுகள் போட்டு அதன்மேல் மண் போட்டு செடி வைக்கலாம், காலபோக்கில் அந்த காய்ந்த காய்கறி கழிவுகள் மட்கி மண்ணோடு கலந்துடும்....இரண்பாவது இப்பொதுள்ள வெயிலுக்கு மூடாக்காகவும் உபயோகிக்கலாம்.....


ஈரக்கழிவுகள்


அதாவது அழுகிப்போன பழம், கீரைகள், வடிகட்டிய கசடுகள் இப்படிபட்ட கழிவுகளை ஒரு 10 லிட்டர் தண்ணீர் கேன் குழாயுடன் இருந்தாலும் நல்லது இல்லேனாலும் பரவாயில்லை, அதில் இந்த ஈரகழிவுகளை போட்டுட்டு வரலாம், கொஞ்சம் வாடை எடுக்கும் நேரத்தில் அதன் மேல் மண்போடவும் இப்படியே காய்கறி கழிவு ...மண் இப்படி மாறி மாறி போடுங்க, நிறைந்ததும் அப்படியே மூடிவிடலாம், அதில் கசடுகள் நீராகும் சிறிதுநாளில் அதை குழாயில் வடித்து ஒரு பங்கு கசடுநீருக்கு 10 மடங்கு தண்ணீர் சேர்த்து செடிகளுக்கு மண்ணில் கொடுத்தால் வேற எந்த உரமும் அவசியமில்லை இதுவே போதும், ஒரு செடிக்கு உபயோகித்து பார்த்து அதன் தன்மை எப்படி இருக்கிறது என்று பார்த்து அடுத்து உபயோகபடுத்துங்க, துளசி போன்ற  செடிகளுக்கு குறைந்தளவு கொடுக்கனும் இல்லேனா செடி துவண்டு போயிடும்....ஒன்று அல்லது இரண்டுமாதத்தில் நீங்க போட்ட மண்ணோடு ஈரகுப்பைகள் கலந்து அனைத்தும் மண்ணாகிடும், உங்களுக்கு மிக எளிமையா சத்துக்கள் நிறைந்த மண் கிடைச்சிடும்.....

         

      உலர் குப்பைகள்

முழுவளம் நிறைந்த மண்ணாய் ஈரகுப்பை கழிவுகள்

நம் வீட்டுக்குப்பைகளும் நமக்கு நலமும் வளமும் கொடுக்கும், நன்றி 🤝🙏👍💐