மண் வளம் Soil health வளமான மண் சத்தான காய்கறி ஆரோக்யமான வாழ்க்கை

 வணக்கம்

வளமான மண் சத்தான காய்கறி ஆரோக்யமான வாழ்க்கை

மண் வளம் பற்றி என்னோட புரிதலை இங்கே பகிர்கிறேன், (Mrs. Ajeetha Veerapandian) நீங்களும் மண்பற்றிய உங்கள் அனுபவங்களை பதிவிடலாம்........

நிலம்...மண்

விவசாயம், மாடிதோட்டம் வாழ்நாள் முழுவதும் செய்தாலும் தினம் ஒரு அனுபவம்...

மாடிதோட்டத்திற்கோ, விவசாயத்திற்கோ மண் வளம் மிக முக்கியம், ஒரு ஊரின் மண்வளத்தை வைத்துதான் இங்கே இந்த பயிர் விதைக்கலாம் னு கண்டுபிடிச்சிருவாங்க பெரியவங்க, நாமலும் மிக எளிமையா கண்டுபிடிக்கலாம், அதாவது மண்ணில் ஈரம், காற்று ஊடுருவும் தன்மை, மணம், இவையெல்லாம் சேர்ந்த பொலபொலப்பு தன்மை இருக்கவேண்டும்.....


உதாரணமா எங்க ஊரை சொல்கிறேன், ( விருதுநகர் ).....எங்கள் கிராமத்தில் ( அயன்ரெட்டியாபட்டி ) , மழை நீரில் மட்டுமே விவசாயம் அதாவது மானாவாரி நிலம் ( மழைபெய்தால் விவசாயம் ).....அப்படியிருந்தாலும் அந்த மண்ணில் நீர் பிடிப்பு தன்மை அதிகம் அதனால் நுண்ணுயிர்கள் அதிகம் வாழ்கிறது மண் மேலே பொலபொலப்புத்தன்மையோடு இருந்தாலும் வேர்பரவி அதன்பிடிப்புத்தன்மையும் பலமாகவும், அதிக வளர்ச்சியும் இருக்கு, ஆவணி புரட்டாசிதான் மழை....ஐப்பசி கார்த்திகை பனி, இந்த காலநிலை போதுமானதாக உள்ளது, இதற்கு மண்வளம் ஒரு காரணம், ஈரப்பதம் அதிகம் தன்னுள் வைத்துக்கொள்கிறது.....ஒரு குறிப்பிட்ட தூரம் 300 முதல் 500 கிலோமீட்டர், அதற்கு அடுத்து வேறுவகையான மண், ஈரப்பதம் மாறுபடும் பயிர் வளர்ச்சியும் ஏன் பயிடும் பயிர் வகைகளுமே மாற்றம் காணலாம்.....


இதே தான் மாடிதோட்டத்திற்கு மண் தேர்ந்தெடுப்பது, அதாவது உதாரணத்திற்கு ஒரு பிடி மண் கையில் பிடிச்சு பார்த்தால் சேரனும், உதிர்த்தாலும் உதிரவேண்டும், ஒரு சில இடங்களில் மண் கிடைக்கும் நகர்புறங்களில் மண் கிடைப்பது அரிது, வீட்டுக்கு வெளியே அள்ளிக்கலாம்னு சொல்வோம் ஆனா அந்த மண்ணை நாம வளப்படுத்த அதிக நேரம் எடுக்கும், புழுதி அதிகமா நாம மண் தேர்ந்தெடுத்தா களிமண் மணல் சாணம் இலைதழைகள் செம்மண் எல்லாம் சேர்த்து செடிவளரும் பக்குவத்திற்கு கொண்டுவரலாம், களிமண் அதிகம் உள்ள பகுதிகளில் மணல் கொஞ்சம் சேர்த்துப்பாக்கலாம், இப்படி ஒவ்வொரு பகுதிகளுக்கும் ஒரு மண்வகை இருக்கும், ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொரு விதை செழிப்பா வளரும் இதற்கு மண் ஒரு காரணம், எனக்கு மிளகா நல்லா விளையுது கத்தரிக்கா வரவே இல்லை என்றால் மண்தான் காரணம், நம்ம மண்ணுக்கு என்ன நல்லா விளையுதோ அதை விளைவிச்சு எடுப்பது சிறப்பு......பக்கத்துவீட்ல விளையும் பொருளை பண்டமாற்றுமுறையில் பகிர்ந்துகொள்ளலாம், மாடித்தோட்டம் என்றாலும் சரி, விவசாயத்திலும் சரி.....பணப்புழக்கத்தில் இருந்து வெளியேவர சிறு முயற்ச்சி எடுக்கலாம்......

எப்படி மண்ணில் இறுக்கம் குறைந்து வேர்கள் மண்ணில் பரவி விளைச்சல் அதிகமாகுதோ, அதேபோல் நாமும் எட்டுத்திக்கும் விவசாய விழிப்புணர்வை கொண்டுவந்து, நம் நாட்டின் வளங்களை பாதுகாத்து நாமும் நலம்பெறுவோம், விவசாயிகளையும் வாழவைப்போம்,.....

நகரவாசிகள் வீட்டின் அடிப்படை காய்கறி  தேவைகளை பூர்த்தி செய்ய மாடிதோட்டம் ஆரம்பிக்கலாம் நலமோடு வாழலாம்..