வணக்கம்
மண் வளப்படுத்தும் முறை என் அனுபவம் புரிதல் by Mrs. Ajitha Veerapandian ......
துள்ளித்திரியும் வயதில் எங்கள் கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஆடு மாடு கோழி நாய் பூனை இப்படி ஏதாவது ஒரு உயிர், ஏன் குருவி கூடுகள் கூட அதிகம் இருக்கும், மனிதன் மட்டுமன்றி எல்லா உயிரனங்களும் இணைந்து வாழும், ஒரு சங்கிலி தொடர்பு இருக்கும்.....
காலையில் சாணி கலந்த தண்ணீர்தான் வாசல் தெளிப்பாங்க, இதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை, தண்ணி தெளிச்சிட்டு பெருக்கி கூடையில் அள்ளுவாங்க, ( இதில் எல்லா வீட்டு குப்பைகளும் அடங்கும் ) அப்படியே ஒரு வீட்டு ஒரு எருகிடங்கு இருக்கும் கொஞ்சம் ஊரைவிட்டு தள்ளி அதில்தான் குப்பைகள் சேகரிக்கப்படும், காலையில் ஒரு 6 மணிக்கெல்லாம் அள்ளிட்டு நண்பர்களுடன் சேர்ந்து போவோம், அந்த காலை நேரத்தில் பட்டாம்பூச்சிகள் அதிகம் பறக்கும், தும்பைசெடியில் அதிகம் நிற்கும் அந்த குப்பை கூடையை வைச்சே பட்டாம்பூச்சி பிடிப்போம் விடுவோம் இது காலைநேர விளையாட்டு, அந்த எரு கிடங்கில் செழிபான தக்காளி செடி, கேந்திப்பூ செடி கிடைக்கும் எடுத்துவந்து வீட்டில் நடுவோம், வெள்ளரி, மிதுக்கங்காய், மஞ்சள் பூசணி எரு கிடங்கு மூடும் அளவு பரவி இருக்கும்....காய்களும் மிக செழிப்பா வளரும்....வருடம் ஒருமுறை இந்த எருகிடங்கில் உள்ள எரு மட்டும்தான் எங்கள் நிலங்களில் உரம், பூச்சிவிரட்டிகள் எல்லாம்....
அதே தான் நம் மாடிதோட்டத்திற்கும்....குப்பைகள் மட்டும் வைத்தே மண்வளப்படுத்தலாம், வீட்டில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி கழிவுகள் வைத்தே வளமான மண் தயார் செய்யலாம், ஒரு பழைய டப்பா, அல்லது சாக்கு கூட போதும் அதில் முதலில் கொஞ்சம் மண் போடுங்க, அப்பறம் காய்கறி கழிவுகள் போடுங்க, அதன்மேல் மண், காய்கறி கழிவு மண் இப்படி போட்டுட்டே வரவேண்டும் நிறைந்ததும் அப்படி ஒரு மாதம் மூடி வைச்சிடுங்க, அதேமாதிரி அடுத்த சாக்கில் போடலாம், அடுத்த ஆடிமாதம் விதைக்கும் போது இந்த மண்ணை எடுத்து நாம பயன்படுத்தலாம், இடம் நிறைய இருந்தால் எரு குழி மாதிரி செய்து பயன்படுத்தலாம்......
இதுமாதிரி செய்யும்போது அதிக செலவு இருக்காது, மண்ணும் வளமானதாக மாறிடும்,
உங்கள் மண் புரிதல் தயாரிப்புகளையும் பதிவு செய்ங்க...