Showing posts with label chedi valarppu. Show all posts
Showing posts with label chedi valarppu. Show all posts

நம் பண்டைய விவசாயப் பழமொழிகள் Farming proverbs

 🌝 புற்று கண்டு கிணறு வெட்டு

🌝 வெள்ளமே ஆனாலும் பள்ளத்தே பயிர் செய் 

🌝 காணி தேடினும் கரிசல் மண் தேடு

🌝 களர் கெட பிரண்டையைப் புதை 

🌝 கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி 

🌝 நன்னிலம் கொழுஞ்சி 

🌝நடுநிலம் கரந்தை 

🌝கடை நிலம் எருக்கு

🌝 களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை 🌝நம்பி வாழ்ந்தவனும் இல்லை

🌝 புஞ்சைக்கு நாலு உழவு நஞ்சைக்கு ஏழு உழவு 

🌝 குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை

🌝 ஆடு பயிர் காட்டும் ஆவாரை கதிர் கட்டும் 

🌝 கூளம் பரப்பி கோமியம் சேர்

🌝 ஆற்று வண்டல் தேற்றும் பயிரை 

🌝 காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும் 🌝

🌝மார்கழி மழை மண்ணுக்கு உதவாது 

🌝 தை மழை நெய் மழை

🌝 கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை 

🌝 பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு

🌝 ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி 

பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள்

வைத்த தனம் 

🌝 கலக்க விதைத்தால் களஞ்சியம் நிறையும். 🌝 அடர விதைத்தால் போர் உயரும்

நம் மூத்த முன்னோர் சொல்மிக்க மந்திரமில்லை.

அன்புடன்

உங்கள் விவசாய நண்பன்

சீகைகாய் செடி வீட்டில் விதையிட்டு வளர்ந்துவிட்டது... ஆனால் 4 மாதம் ஆகியும், சிறியதாகவே உள்ளது. செடி பராமரிப்பு பற்றி கூறவும்? வெயிலில் வைக்க வேண்டுமா? நிலத்திலேயே வந்துவிட்டது.

 Ans 1: 

பயிர் தொழில், விவசாயம் என்று வரும் பொழுது அது சிறந்து விளங்க அடிப்படையில் ஆதாரமாக இருப்பது மண் வளம் தான்.


வளம் இல்லாத மண்ணில் செடிகள் செழிப்பாக வளராது.


செடி வளர்ச்சிக்கு சூரிய ஒளி மிக அவசியம். தாவரத்தைப் பொருத்து சூரிய ஒளி தேவை முன்னும் பின்னும் இருக்கும்.


பொதுவாக பயிர் செய்வதானாலும் சரி செடி நடுவதாக இருந்தாலும் சரி மண்ணை வளப்படுத்திய பின் தான் செய்வார்கள். அப்படி வளப்படுத்தாத நிலையில் நீங்கள் செடிக்கு மேலுரம் கொடுத்திருந்தால் செடி வளர்ச்சி பெற்றிருக்கும். 


காய்ந்த இலைகளை கொண்டு செடியை சுற்றி மூடாக்கிட்டு மாதமிருமுறை ஜீவாமிர்தம், அமர்தகரைசல், மீன் அமிலம் இதில் ஏதேனும் ஒன்றை நீர் பாசனத்தில் கலந்து விடவும்.


பூச்சி விரட்டி 5-6 நாள் இடைவெளியில் தொடர்ந்து தெளிக்கவும்.

Ans 2:

எடுத்து வேற இடத்தில் நடுங்க, கொஞ்சமாவது சூரியஒளி வேண்டும்.....மரத்திற்கு கீழ் கீரைகள் பூச்செடிகள் வைங்க...