நீண்ட நாட்களாக சிறிய உணவு காடு அமைக்க வேண்டும் என்பது விருப்பம். விடுமுறையில் ஊருக்கு செல்லும் போது கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு ஒரு சிறிய முயற்சியாக 10 சென்ட் நிலத்தில் கனவு தோட்டத்தை தொடங்கி இருக்கிறேன்..
இதில் எங்களுடைய பணி விதைப்பது மற்றும் அறுவடை இடையே தேவை இருப்பின் நீர் கொடுக்கின்றது மட்டுமே இருக்க வேண்டும் என்பது விருப்பம். சில நாட்கள் பிறகு விதைப்பதும் & நீர் கெடுப்பதும் முடிந்த அளவு குறைத்துக் கொள்ள வேண்டும்.
தோட்டத்தில் அதிகபட்ச இடுபொருட்கள் மூடாக்கு, சாம்பல் & புண்ணாக்கு கரைசலே.
முடிந்த அளவு எந்த பூச்சி விரட்டியும் உபயோகிக்க வேண்டாம் என்று இருக்கிறோம், அது இயற்கை முறையில் தயாரித்தால் கூட வேண்டாம். ஏன் என்றால் இது ஒரு உணவு காடாக உருவாக்க வேண்டும், நம்முடைய தலையீடு அதிகமாக இருக்க கூடாது. விதைகள் நன்பர்கள் பகிர்ந்தது, தற்போது. காட்டில் உள்ள செடிகள்.
மா, எலூமிச்சை, கொய்யா, நெல்லி 2 வகை, நாவல், அத்தி, வாழை 5 வகை, பப்பாளி, சப்போட்டா, சீத்தா, முருங்கை, தக்காளி, கத்தரிக்காய், வெண்டை, மிளகாய், சுண்டகாய், காரமணி, மக்காச்சோளம், மரவள்ளி, சக்கரவள்ளி, பிரண்டை, மணத்தக்காளி, எலுமிச்சைபுல், சித்திரத்தை, வெற்றிலை, திப்பிலி, கறிவேப்பிலை, செம்பருத்தி, செண்பகபூ, பன்னீர் ரோஜா, பூந்தி கொட்டை, ஆமணக்கு, கிளைசிரியா, தீவணபுல்,கற்பூரவள்ளி, சங்குப்பூ, இஞ்சி, பொன்னாங்கண்ணி, புளிச்சை கீரை, கரும்பு, நன்னாரி, கொத்தவரை, வல்லாரை, பசளைக்கீரை. இவற்றில் சில தானே முலைத்தவை..
கொடி வகைகள் பட்டம் தவறியதால் பீர்க்கங்காய், மூக்குத்தி அவரை தவிர மற்றவை காய்க்கவில்லை.
விதைகள் மற்றும் தங்களின் அனுபவங்களை பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி...🙏
முதல் முயற்சியில் ஓரளவுக்கு பாடங்களை இயற்கை கற்றுக் கொடுத்துள்ளது.
இன்னும் கற்ப்போம்...
இது ஆரம்பமே...🌴🌳💚
No comments:
Post a Comment