பாரம்பரிய மாப்பிள்ளை சம்பா அரிசி. Rice is good for health

 பாரம்பரிய மாப்பிள்ளை சம்பா அரிசி....

சர்க்கரை வியாதி உடல் பருமன் ஆகிய வியாதிகளுக்கு பழி விழுவது அரிசி மேல்  தான்...ஆனால் அது முற்றிலும் தவறு...பாலீஸ் பட்டை தீட்டிய நார்ச்சத்து இல்லாத அரிசி என்று தெளிவாக கூறி பழி போடலாம்...கோதுமையில் க்ளுடன் எனும் பசை உள்ளது..எளிதில் ஜீரணம் ஆகாது..க்ளூடன் அலர்ஜி உண்டாக்கும்...ஆனால் அரிசி எளிதில் ஜீரணம் ஆகும்..அரிசி கோதுமை இரண்டிலும் கார்போஹைட்ரேட் ஒரே அளவு தான்...பட்டை தீட்டாமல் பயன் படுத்துவதால் கோதுமை நல்ல பெயர் பெற்று விட்டது..

மைதாவும் பட்டை தீட்டிய அரிசியும் கிட்டதட்ட ஒன்று தான்...

மாப்பிள்ளை சம்பா சாப்பிட்ட மறு நாளே தோலில் மினுமினுப்பை பார்க்கலாம்....காரணம் அதன் சிகப்பு நிறமிகளும் அரிசின் மேல்புற தோலில் ஒட்டியுள்ள வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்..அரிசியில் லைசின் அமினோ அமிலம் முடி தோல் அழகுக்கு தேவையான ஒன்று...எனவே மொட்டையாக அரிசி என்று பழி போடாமல் பட்டை தீட்டிய அரிசி என்று குறிப்பிட்டு சொல்ல வேண்டும்..பட்டை தீட்டினால் கோதுமை வரகு சாமை எல்லாமே ஆபத்து தான்...இன்று சிறு தானியமும் பட்டை தீட்டப்பட்டு மார்கெட்டுக்கு வந்து விட்டது...