நல்ல தரமான சுவையான "ரோஜா குல்கந்து" வீட்டிலேயே தயார் செய்வது எப்படி. .?
🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹
குல்கந்து செய்முறை
🌸நல்ல, தரமான, சிவந்த நிறமுடைய நன்கு பூத்த பூக்களிலிருந்து இதழ்களை ஆய்ந்து கொள்ளவும்.
🌸 இதழ்களை நன்கு கழுவி, சுத்தம் செய்து, ஈரம் போக துடைத்து / நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும். சேகரித்த இதழ்களின் எடையைப் போல, மூன்று மடங்கு பனங்கற்கண்டை எடுத்துக் கொள்ளவும்.
🌸ரோஜா இதழ்களையும், பனங்கற்கண்டையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து இடித்துக் கொள்ளவும். ஜாம் போல வரும் வரை இடிக்கவும்.
🌸இதனை ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போடவும். இந்த ஜாம் அளவுக்கு மூன்றில் ஒரு பங்கு சுத்தமான தேனை விட்டு நன்றாக கிளறவும்.
🌸 இத்துடன் வெள்ளரி விதை, கசகசா சேர்க்கவும். குல்கந்து தயார். ஒவ்வொரு தடவையும் உபயோகிக்கு முன் நன்றாக கிளறவும்.
🌸ஆண்மையை பெருக்கும், உடல்வெப்பத்தை குறைக்கும், இதயத்தை வலுப்படுத்தும், பெண்கள் நோய்களை குணமாக்கும், உடல்வளர்ச்சியை மேம்படுத்தும் நறுமணமும் உடல் நலமும் தரும் குல்கந்து ரெடிங்க....
🍁ருதம்பரா யோகா கோவை.
No comments:
Post a Comment