எழில் கொஞ்சும் பச்சை பசேல் மலைமீது மெல்ல இயற்கை எழிலை ரசித்து உணர்ந்து, வியந்த கண்களோடு, சில்லென்று தொடும் தென்றலோடு, காலணிகள் இல்லாமல் மண்வாசமும் உணர்ந்து.....ஏறுகிறேன் மலைமீது.....
மலை மீது ஏறும்போது என் மனம் மற்றும் உடம்பும் காற்றில் பறந்துசென்றது, மலையின் வழி எங்கும் மூலிகை மரங்களின் காற்று என்னை மேலும் தூய்மை ஆக்கியது.
அப்போது தான் உண்மையான ஆக்ஸிஜன் உணர்ந்தேன்.
இயற்க்கையை ரசித்து என்னை நிலை மறந்து தேவதையாக மாறி மலைவாசிகள் வாழக்கமுறைகளை ரசித்தேன்.
மேகங்கள் அனைத்தும் கருமேகம் ஆக மாரி இளம் தூறல் ஆரம்பித்து இருந்தது
பஞ்ச பூதங்களின் சக்தியை உணர முடிந்தது
பஞ்சபூதங்களின் சத்தி முழுமையான நான் அடைந்தேன்.
தூறலை கண்டதும் என் மனம் மயிலை போல ஆட நினைத்தது.
அப்போது மயில் ஆட குயில்பாட ஏக ஆனந்தம்
இருந்தாலும் என் கண்கள் ஏதோ தேடியது.
இருந்தாலும் என் கண்கள் ஏதோ தேடியது.
நாம் பெற்ற இன்பம் நம் தோழர்களை தேடியது.
மின்னல் ஒளியில் நான் கண்ட காச்சி ஆஹா
மழையில் நனைந்து அந்த வெளிச்சத்தில் வெதுவெதுப்பான இடம் செல் எண்ணியது.
மலையின் மீது வானவில் நான் தொட்டுவிடும் தொலைவில் இருப்பது போல் இருந்தது...
என் தோழர்கள் குளிருக்கு வெப்பம் முட்டி சுற்றி பாடல் பாடி மகில்சியில் நான் அங்கு வானவில் எங்களை வட்டம்மிட்டது ஆஹா ஆஹா
வானவில்லில் தூளி கட்டி ஆடி மகிழ என்னே இன்பம்
மனம் மட்டும் மா மகிழ்ச்சி கண்களுக்கு குளிர்சிகாதுக்கு இனிமை என்றும் நகரத்தில் இருந்த சத்தம் இல்லாமல் ஏகாந்த நிலை அடைந்தேன்
வானவில் வந்தால் மழை அடுத்து வராது என்று எனக்கு தெரியும். மின்னல் வந்ததை பார்க்க கூடிய அந்தி நேரம். எனவே என் பாதம் அங்கே திரும்பியது.
இந்த மகிழ்ச்சி என்னுள் எப்பொழுதும் நிலைத்திருக்க தான் வாழும் இடத்தை இயற்கை எழில் கொஞ்சும் இடமாக மாற்ற வேண்டும் என்று மனம் ஏங்குகிறது
ஆம் நாம் இருப்பது நகரமாக இருந்தாலும் இருக்கும் இடத்தில் மாடி தோட்டம் அமைக்க திட்டமிட்டேன்...
மாடி தோட்டமாக இருந்தாலும் இயற்கை முறைதான் பின்பற்ற மனம் என்னியது
அதன் முதல் படியாக மலை எங்கும் சுற்றி மலைவாழ் மக்களிடம் நாட்டு விதைகளை பெற சென்றேன்.. மேலும் நானும் பல மலை முகடுகளில் நாட்டு தாவர விதைகளை சேகரித்தேன்
இயற்கையின் பரிசாக விதைகளை தேடி எடுத்து, இனி எனது உணவில் நஞ்சு இருக்காது என்ற திருப்த்தியோடு மலையிலிருந்து இறங்குகிறேன்...
No comments:
Post a Comment