தேன் நெல்லிக்காய் Honey Gooseberry

 தேன் நெல்லிக்காய்

🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈



சித்தஶ்ரீபதஞ்சலி ஈஸ்வரன்

ருதம்பரா யோகாமையம்

செல் : 8610823072

🌼🌸☘🌷🌿🌷☘🌸🌼


என்றும் இளமைதரும்....

சங்ககாலம் தொட்டு ஆரோக்கிய பொக்கிஷமாம்

ஔவைக்கு அதியமான் அளித்த அமுதகனி....


தினமும் ஒரு நெல்லிக்காய் சேர்த்தால் நல்லது. ஆனா, பச்சையா சாப்பிட்டா, முழுசா ஒன்னை சாப்பிடறதே கஷ்டம். என்ன செய்யலாம்?🤔


கடையில தேன் நெல்லிக்காய்-ன்னு கிடைக்குது, விலை அதிகம். உண்மையான தேன்ல தான் ஊற வைக்கிறாங்களான்னா. சந்தேகம் தான். பெரும்பாலும், சர்க்கரைப்பாகுன்னு நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கிறார்கள்.


சூப்பரா இருக்கு, ஹெல்த்தும், ருசியும் ஒரு கிலோ நெல்லிக்காயை சுத்தமா கழுவி, இட்லி தட்டுகளில் துணி போட்டு, அதுல பரத்தி வைங்க. வேகவைக்கத் தேவையான தண்ணீருடன், இரண்டு கரண்டி பாலையும், இட்லி பானையில் ஊத்தி அடுப்புல ஏத்தணும். பால் கலந்த தண்ணி சூடானதும், நெல்லிக்காய் பரப்புன இட்லி தட்டுகளை வைத்து, பானையை மூடி அவிச்சு எடுங்க.அரைக்கிலோ வெல்லம் அல்லது கருப்பட்டியை தூளாக்கி (அரைக்கிலோ வெல்லம்னா சுமாரா ஒரு உருண்டை. இது இனிப்பு குறைவா சேர்க்கிறவங்களுக்கு. இனிப்பு அதிகம் வேணும்னா ஒரு கிலோ வெல்லம் போடலாம்.) தேவையான தண்ணீர் ஊற்றி கரைத்து, அழுக்கு போக வடிகட்டி அடுப்புல வைச்சு பாகு காச்சுங்க. ரொம்ப காச்சணும்னு இல்ல.


 பிசுபிசுன்னு வந்தவுடன் இறக்கிடலாம். இதுல வெந்த நெல்லிக்காயைப் போட்டு வச்சுடுங்க. ஐந்து நாள் கழித்து   சுத்தமான மலைத்தேனில் பத்துநாள் ஊறவைக்கவும். ஊற ஊற, தினமும் ஒன்னு எடுத்து சாப்பிடுங்க. நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இரும்புச்சத்து, இன்னும் பல சத்துக்கள் கிடைக்கும்.


லாக்டவுன்ல இந்த ரெசிபி செய்து உங்கள் ஆரோக்கியத்தையும் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துங்கள். நன்றி

No comments:

Post a Comment