எலும்புகள் கிடையாது பற்கள் கிடையாது ஆனாலும் சத்துள்ள உரம் கொடுக்கும் ஒரு உயிர், விவசாயிகளின் நண்பர் யார் ? வாழ்நாள் முழுவதும் மண்ணை உழுபவன் யார்? மண்புழு உரம் ஏன் ? Earth worm a special discussion on vrmicompost

 கேள்வி 1

எலும்புகள் கிடையாது பற்கள் கிடையாது ஆனாலும் சத்துள்ள உரம் கொடுக்கும் ஒரு உயிர், விவசாயிகளின் நண்பர் யார் ?


கேள்வி 2

வாழ்நாள் முழுவதும் மண்ணை உழுபவன் யார்? 


கேள்வி  3

மண்புழு உரம் ஏன் ?

Answers

1&2 கேள்விக்கான பதில் மண்புழு,மண்புழு மண்ணில் இருக்கும் கழிவுகளை உண்டு மக்க வைத்து மண்ணை கிளறி மண்ணை வளமானதாக மாற்றிவிடும் இராசயன உரங்களையும் களைக்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தி மண்ணை மலடாக்கி மண்புழுவே இல்லாமல் போன நிலங்களில் மண்புழுவை உருவாக்கவே மண்புழு உரம் ஆனால் வீட்டுத்தோட்டத்தை பொருத்தவரை தனியாக மண்புழு உரம் தேவையில்லை நாம் போடும் வீட்டுக்குப்பை இலை தழை கழிவுகள் மூலமாக ஒரு மண்புழு இருந்தால் கூட பல்கி பெருகிவிடும்...


மண்புழு 1&2 மண்புழு பேருக வேண்டும் என்றல் நிலத்தில் ஜீவாமிர்தம் தொடர்ந்து கொடுத்தாலே போதும் இயற்கையகவே மண்புழுக்கள் வந்துவிடுகிறது


1&2 , மண் புழு 

3.  மண் புழு உரம் மண்ணை வளபலடுத்தும் .என் அனுபவத்தில் மண்ணில் (மடக்கிய) மாட்டு சாணம் கலந்தால் மண் புழு பல்கி பெறுக வழிசெய்யும்...



* பதில் 1= மண்புழு

* பதில் 2 = நிலத்தில் வாழும் அனைத்து உயிர்களும் வாழ்நாள் முழுவதும் மண்ணை உழுது கொண்டு இருக்கின்றன. புழுக்கள், பூச்சிகள், எறும்பு, எலி, பெருச்சாளி போன்றவை

*பதில் 3= தாவரங்கள் எளிதாக கிரகிக்கும் வகையில் சத்துக்கள் மண்புழு உரத்தில் உண்டு...


1. மண்புழு

2. மண்புழு

3.நிலத்தின் அங்ககப் பொருள்களின் அளவு, நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. மண்ணின் நீர்ப் பிடிப்பு சக்தி, காற்றோட்டம், வடிகால் வசதியை அதிகரிக்கிறது. தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, நுண்ணுட்டச் சத்துக்களின் பயன்பாட்டை அதிகரிக்கிறது.


1.&2. மண்புழு 

3. மண்ணை  தளர்வாக்கி  அதன் எச்சில் மூலம் மண்ணை வளமாக்க


1&2. மண்புழு.                   3.  மக்கிய பொருட்களுடன், ஜீவாம்ருதம், தோட்டத்து மண் மற்றும்  சாணத்தை கலந்து வைத்தால் சிலதினங்களில் மண்புழுக்கள் தானாகவே உருவாகி உரத்தை தருகின்றது. இதில் பயிர் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளது. 


அனைவருக்கும் வணக்கம்


மண்புழுவுக்கு இணையாக மண்னை வளப்படுத்துவதில் பெரும்பங்கு ஆற்றும் இன்னும் சில

- கறையான்கள் (வீட்டு, மாடித் தோட்டத்துக்கு ஆகாது ! ஆபத்து !!!)

நல்ல நீர்வழி தடங்கள் அமைக்கின்றன


மரவட்டை - முதல்கட்ட செரிமானம், பெருங்குச்சி செத்தைகளை சமைக்கிரது. சல்பர் சத்து மிகுத்தது இதன் கழிவு


புள்ளைப்பூச்சி - மேல்மண்ணை காற்றோட்டமா ஆக்குது


பூரான் - 👆இதனோடு இணைந்த செயல்பாடு.

(மண்புழுவையே உணவாக்கி அதன் பெருக்கத்த்தை கட்டுக்குள் வைக்கிறது)


(மூஞ்சூருக்கு உணவு பூரான் ஆகும்)


மேலேயுள்ள கூட்டணிதான் மற்ற் மைக்ரொ நுண்ணுயிர் பெருக்கத்திற்கு வழி வகுக்கிறது.


மண்புழு உரம் - நல்லதொரு வியாபாரம். இறக்குமதி செய்யப்பட்ட மன்புழு தரும் கழிவு அது !!!!

கிட்டத்தட்ட ஜெர்சிமாட்டு சாணப் போல்.

"பரவயிலை ஆனால் பலனில்லை!" ரகம்.


வசதியும் ஆர்வமுமுள்ளவர்கள் இக்கழிவை ஏதாவது ஒரு லேப்பில் கொடுத்து சோதித்துக் கொள்ளவும்.


இறக்குமதி மண்புழு கழிவு

Interference competition

Resource competition

ஆகிரது என்பதை கவனியுங்கள் !

நன்றி


🪱மண்ணை ஆழமான துளையிட்டு காற்றோட்டம் உருவாக்கும் பணியை மண்புழு செய்கிறது .மக்காத இலை 🍃🌿தழைகளை மக்கசெய்து மண்வளத்தை அதிகிரிக்கிறது இயற்கை உரம் மட்டுமே பயன்படுத்தும் அனைவரின் தோட்டத்திலும் மண்புழு அதிக அளவில் இருக்கும். மாட்டுச்சாணம் வெல்லம் கலந்த கலவை மண்புழுவிற்கு பிடித்த உணவு.

கிணற்று உறை போல முக்கால் அடி அளவில் ஒரு உறை விற்கிரது.


இதில் நீங்கள் சொல்வது போல நாட்டு சாணத்துடன் வெல்லம் கலந்து போட்டு 

ஈரமாக வைத்தால் ஒரு சில நாளிலேயே மண்புழு அதிகரிக்கும்.


அது கட்டாந்தரையாக இருந்தால் கூட.


இந்த உறையை சுற்றி சட்டென புல் பூண்டு தானாகவெ வளர ஆரம்பிக்கும்.


விற்க்கும் மண்புழு உரம்  சரியில்லை என்றீர்கள்  அந்த மண்புழுவே பயன் அற்றதா அதாவது அந்த மண்புழு மூலம் நம் வீட்டில் தயாரிக்கும் மண்புழு உரமும் பயன்யற்றதா???

நம் மண்ணில் இயற்கையாக இருக்கும் மண்புழுக்களே சிறந்தது.  மண் புழு உரம் தயாரிக்க கடையில் விற்கப்படும் மண்புழுக்களை வாங்கக்கூடாது. அது காளி எனப்படும் ஒரு புழு என்று இயற்கை ஆர்வலர் திரு  பாலேக்கர் அவர்கள் கூறியுள்ளார். அவரின் கட்டுரையில் இதை பற்றி தெளிவாக கூறியுள்ளார்.


நம் மண்ணில் இயற்கையாக இருக்கும் மண்புழுக்களே சிறந்தது.  மண் புழு உரம் தயாரிக்க கடையில் விற்கப்படும் மண்புழுக்களை வாங்கக்கூடாது. அது காளி எனப்படும் ஒரு புழு என்று இயற்கை ஆர்வலர் திரு  பாலேக்கர் அவர்கள் கூறியுள்ளார். அவரின் கட்டுரையில் இதை பற்றி தெளிவாக கூறியுள்ளார்.


நம் நாட்டில் பல வருடங்களுக்கு வெறும் 3 மண்புழு குடும்பம் தான் இருந்தது.


கடந்த 15 வருடங்களில்ப் காஷ்மீர் கன்னியாகுமரி வரை 44 வகைகள் அடையாளப்படுத்தி உள்ளார்.


உர உற்பத்தி க்கு ஜப்பான், கனடா, யூ எஸ் லிருந்து தாய் புழு கொண்டு வருகிறார்கள்...


அது தேவையற்றது


எங்கள் நிலத்தில் கடந்த 11 வருடமாக எந்த ஒரு வேதி பொருட்களும் இடுவதில்லை.

ஐயா நீங்கள் கூறுவது போல மண்புழு, கரையான்,மரவெட்டை, பூரான்,எலி,எரும்பு,நத்தை என இன்னும் பல அனைத்தும் ஒவ்வொன்றாக கண்ணில் படுகின்றது.

இயற்கை வேளாண்மை செய்யும் போது எந்த ஒரு இடுபொருட்களும் (மண்புழு உரம்) கொடுக்கவில்லை என்றாலும் இயற்கை தனது உணவு சங்கிலியை உருவாக்கிக் கொள்கிறது...