கேழ்வரகு சூப்.....
குளிர்கால உணவுகளில் மிக முக்கியமான உணவு கேழ்வரகு.....கூழ், ரொட்டி, சூப் செய்யலாம்......இதிலுள்ள கால்சியம் சத்து எலும்புகளுக்கு பலம் கொடுக்கும், மூட்டுகள் பலமாகிறது, விட்டமின் B சத்து இதில் உள்ளது, குழந்தைகள் முதியவர்களுக்கு தொடர்ந்து கொடுக்கலாம், மாதவிடாய் காலங்களில் வரும் வலி பலகீனம் சரியாகும், மெனோபாஸ் நேரத்தில் பலம் கொடுக்கும், இரத்த ஓட்டம் சீராக்கி சமநிலையில் வைக்கும், .....சிறுதானிய உணவுகளை உண்போம் பலம் பெறுவோம்.....
ஒரு ஸ்பூன் கேழ்வரகு கொஞ்ச நேரம் ஊறவைச்சிட்டு ( குட்டி உரலில் இடிச்சு எடுக்கனும்), 4 சின்னவெங்காயம் , பூண்டு 4 பல் தட்டி வைச்சிக்கனும், ஒரு சிறிய தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் மிளகுதூள்.....
பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி, தட்டிவைத்த வெங்காயம் பூண்டு போட்டு வதக்கி, தக்காளி சேர்த்து, உப்பு மிளகு மஞ்சள் தூள் சேர்த்து , இடிச்சி வைச்ச கேழ்வரகு சேர்த்து வதக்கி தண்ணீர் ஊற்றி கொதித்து சிறிது நேரம் வெந்ததும் இறக்கி வைத்து குடிக்கலாம்....
No comments:
Post a Comment