நரிபயறு சட்னி naripayiru chatny

 


நரிபயறு சட்னி......

எலும்பு, நரம்புகளுக்கு பலம் கொடுக்கும், நார்சத்து, புரதம், கால்சியம், இரும்புசத்து அதிகம் உள்ள பயிர், தற்போது அரிதாகி வரும் பாரம்பரிய பயிர்களில் இதுவும், இந்தப்பயிர் வளர குறைந்தளவு நீர் போதும், வறட்சியான நிலங்களிலும் செழித்து வளரும் தரைகொடிவகை....மானாவாரி நிலங்களில் பயிரிடலாம்......இந்த பயிர் விளைவித்து கொடுத்தவர் அகிலா குணாளன் 

ஒரு கை நரிப்பயறு, ஒரு சில் தேங்காய், மிளகாய் வத்தல்(தேவையைபொருத்து), பூண்டு 4 பல், தக்காளி 1, பெருங்காயம் ஒரு சிட்டிகை, உப்பு தேவைக்கு, நரிபயறை முதலில் வறுத்து எடுத்துட்டு, மற்ற அனைத்தையும் சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கி அரைக்கவும்,