மிளகு கற்பம் Pepper formula

 மிளகு கற்பம்.      

மிளகு கற்பம் எடுத்துக்கொள்ள தகுதியானவர்கள் பேதி மருந்து எடுத்து உடல் சுத்தம் செய்து இருக்க வேண்டும். இரண்டு நாள் இடைவெளிக்கு பின் காலை 5.30 எழுந்து பல்துலக்கிய பின் 300 to 400 ml வெண்ணீர் வாய் வைத்து சப்பி குடிக்க வேண்டும். பின் காலை கடன்களை முடித்தபின் வெண்ணீர் குடித்த மணியில் இருந்து 45 நிமிடம் கழித்து முதல் நாள்  ஒரு மிளகு, சிறிது மலைதேன் அல்லது கலப்படம் இல்லாத பனை வெல்லம் சிறிது சேர்த்து மென்று உண்ண வேண்டும்.

ஒவ்வொரு நாளும் ஒரு  மிளகு கூட்டி உண்ணவேண்டும்.  24 வது நாள் 24 மிளகு 25வது நாள் 24 மிளகு உண்ணவேண்டும். பின் ஒரு ஒரு மிளகாக குறைத்து 48 வது நாள் ஒரு மிளகுடன் கற்பம் முடிக்கவேண்டும். மிளகு கற்பம் எடுத்துக்கொள்ளும் காலத்தில் புலால் உணவு உண்ண கூடாது. மேலும் ஊறுகாய், பொறித்த உணவுகள் , அவரைக்காய், கொத்தவரங்காய், கத்தரிக்காய் அளவு குறைத்து உண்ண வேண்டும். 

மோர் தேவையான அளவு குடிக்க வேண்டும். உடல் சூடு அதிகமாக உணர்பவர்கள் இளநீர், மாதுளை, தேவையான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.கீரை உணவு அதிகம் சாப்படவேண்டும.வல்லாரை கீரை எடுத்துகொள்வது பலனை கூட்டி தரும்.  தாய்மார்கள் ஓய்வு நாட்களிலும் மிளகு கற்பம் எடுத்துக்கொள்ளலாம். 

ஆண்கள் மது, புகை பான்பராக் பழக்கம் உள்ளவர்கள் அந்த பழக்கத்தை நிறுத்திய பின் அருகம்புல் சாறு ஒரு மண்டலம் எடுத்துக்கொள்ள வேண்டும். இதோடு மூன்று நாட்கள் கீழ்காய் நெல்லி சாறு, வில்வ சாறு , மணத்தக்காளி சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்புதான் மிளகு கற்பம் எடுத்துக்கொள்ள தகுதியானவர்கள் ஆவார்கள். இந்த முறையில் மிளகு கற்பம் எடுத்துக்கொள்பவரகள் முழு பலரையும் பெறலாம்.

மிளகு கற்பம்

திரு. தங்கபாண்டியன் ஐயாவின் பதிவு....

அனைவரும் இதை செய்யவேண்டும் என வேண்டி கேட்டுக்கொள்கிறேன், எளிமையான இன்றைய தேவைக்கு ஏற்ற மருந்து 👆

இயற்கை உணவுகள் healthy natural foods

 நாளை காலை உணவு


எலுமிச்சை 1/2 பழம், இஞ்சி 1/4 இன்ச், அரைச்சு வடிகட்டி தேன் அல்லது வெல்லம் கலந்து குடிக்கவும்


வாழைக்காய் பசும்பொரியல்


வாழைக்காய் தோல் நீக்கியது 1/4, சம அளவு தேங்காய் துருவல், ஒரு மணிநேரம் ஊறவைத்த பாசிபருப்பு ( தோல் நீக்கியது), மிளகுதூள், சீரகதூள் ஒரு சிட்டிகை, உப்பு ஒரு சிட்டிகை, கலந்து மல்லி இலை தூவி, எலுமிச்சை சில துளிகள் கலந்து 10 நிமிடம் ஆனதும் சாப்பிடவும்.....


மதியம்


அவல் உணவு


அவல் 100 கிராம் எடுத்து அலசி, சம அளவு தேங்காய் துருவல்,  வெல்லம், தோல் நீக்கிய வேர்கடலை சேர்த்து ....சாப்பிடவும்


மாலை


பேரீச்சை 2, அத்திப்பழம் 2, திராட்சை 10 ஒருமணிநேரம் ஊறவைத்து அரைத்து குடிக்கவும் ( ஒரு நபருக்கு )....


இரவு 7 மணிக்குள்


பழங்கள் ஒரே வகை பழம் ( பப்பாளி, மாதுளை, சப்போட்டா, மாம்பழம்) இப்படி ஏதாவது ஒன்று


முக்கிய குறிப்புகள்


* இயற்கை உணவு உண்ணும் போது,  தண்ணி நிறைய குடிங்க, உணவு சாப்பிடும்போது அல்ல, மற்ற நேரங்களில், தாகம் எடுக்காவிட்டாலும் குடிக்கனும்


* உணவு அளவு குறைவா இருக்கறமாதிரி தோனும், ஆனால் போதுமானது, 


* வாழைக்காய் சாப்பிட்டு அரைமணிநேரமாவது மற்ற உணவுக்கு இடைவெளி வேண்டும்...


* பசித்தால் பழங்கள் சாப்பிடுங்க, விதையுள்ள கறுப்பு திராட்சை சிறப்பு

வாழைக்காய் அப்படியே சாப்பிட்டால் வாய்வு ஏற்பட வாய்ப்பு இருக்குங்களா? Raw banana healthy vegetables

 வாய்வு ஏற்பட வாய்ப்பு  இல்லை, சாப்பிடலாம்..

பச்சையாக வாழைகாய் சாப்பிடுவதற்கு பிஞ்சு காயை எடுத்துக்கொள்ள வேண்டும், கிடைக்காத சமயம் விளைந்த காயை பயன்படுத்துங்கள். 

சிறு துண்டுகளாக வெட்டிய காயை நல்ல தேனில் ஊரவைத்து  , நல்ல பனை வல்லத்தில் பாகு காய்சி ஊரவைத்த வைத்து , மிளகு சீரகம் பொடி தூவி எலுமிச்சை சாறு சிறு துளிகள்  விட்டு  இதில் ஏதாவது ஒரு முறையை பின்பற்றி சாப்பிட்டு வரலாம். 

அல்லது தோலுடன்  வாழைக்காய்  , தோலுடன் எலுமிச்சை,  சிறு துண்டு இஞ்சி , 10 மிளகு சேர்த்து அரைத்து சாறு பிழிந்து பருகலாம். சிறு காய்கறிகள் இருந்தால் இரண்டு நபர்கள் , பெரிய காய் மூன்று நபர்கள் வாரம் இரண்டு நாட்கள் சாப்பிட்டு வரலாம். 

அதிலும் நாட்டு காய் கிடைத்தால் பலன் அதிகம்.கிடைக்காத பட்சத்தில் மற்றவற்றை பயன்படுத்தலாம். இப்பொழுதெல்லாம் வாழைக்கு ஊசி, மாத்திரை ,இரசாயன உரங்கள் , மருந்து தெளித்தல் போன்றவை அதிகமாக பயன்படுத்துவதால்  கல் உப்பு , மஞ்சள் தண்ணீர் கலவையில் நன்கு ஊரவைத்த கழுவி பயன்படுத்த வேண்டும்.