ஆயுதங்கள் என்றும் அமைதியை தருவதில்லை!! there is no weapon which will make peace in the world

 என்ன  😭😭😭😭😭 கொடுமை 



வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டது 1945 ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதியாகும்.

அமெரிக்காவினால் ஜப்பானின் நாகசாகி நகரத்துக்கு அணுகுண்டுத் தாக்குதல் நடத்தி 7 நாட்களின் பின்னரே இந்தப் புகைப்படம் ஒரு அமெரிக்கப் படை வீரரினால் எடுக்கப்படுகிறது.

அமெரிக்கா அணுகுண்டுத் தாக்குதல் நடத்தியதன் பின்னர், ஜப்பானில் ஏற்பட்ட சேதங்களை ஆவணப்படுத்தும் பணி வழங்கப்பட்ட 

Joe 0'Donnell என்ற அமெரிக்க ராணுவ வீரரினால் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் குறித்து அவர் தனது நாட்குறிப்பில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

"10 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் தனது தோளில் ஒரு குழந்தையை கட்டிக் கொண்டு நிற்கிறான்.

இப்படி சிறுவர்கள் தம்பி,தங்கைகளை தோளில் சுமந்து கொண்டு விளையாடுவதை நாம் கண்டிருக்கிறோம்.

ஆனால் இந்தச் சிறுவன் விளையாடுவதற்காக தோளில் ஒரு குழந்தையை சுமந்து வரவில்லை. அவன் எதோ ஒன்றை பெரிதாக சிந்தித்துக் கொண்டு 

இருந்தான். அவனது காலில் செருப்பு கூட இருக்கவில்லை.

அந்தச் சிறுவன் தனது தோளில் இருந்த குழந்தையை திரும்பிப் பார்த்தான், அப்போதுதான்

அவனது தோளில் இருந்த குழந்தை இறந்து இருப்பதை நான் கவனித்தேன். அந்தக் குழந்தையின் கழுத்து சரிந்து இருந்தது.

இறந்த குழந்தையை சுமந்து கொண்டு அந்த சிறுவன் பிணங்களை எரிக்கும் இடத்திற்குச் சென்றான்.

அந்த இடத்தில் நின்றுகொண்டிருந்த சிறுவன் தனது உதடுகளை கடித்துக் கொண்டான். 

அப்போது, அவனது வாயினால் இரத்தம் வழிந்து கொண்டு இருந்தது.

பின்னர் அவனது தோளில் சுமந்துவந்த, அவனது தங்கையின் உடலை தகனம்  செய்வதற்கு

கொடுக்கிறான், கொஞ்ச நேரத்தில் அந்தப் பிஞ்சு 

உடல் தீயில் கருகி விடுகிறது.

அந்த தீச்சுவாலையை பார்த்த வண்ணமே அந்த சிறுவன் நடக்கத் தொடங்கினான்."

இந்த சம்பவம் நடந்து 72 வருடங்களின் பின்னர்

புனித பாப்பரசர் தனது புதுவருட வாழ்த்து அட்டையில் இந்த புகைப்படத்தை பிரசுரித்து

இப்படி ஒரு  குறிப்பையும் சேர்த்துவிடுகின்றார்.

"யுத்தத்தின் பிரதிபலன் இதுதான்"

நாம் அணு ஆயுதங்களை வைத்துக்கொள்வதை

சட்டமாக்குவதா ? அல்லது கடந்த காலங்களில்

படித்த பாடங்களை வைத்து மனிதகுலத்தின் 

விருத்திக்காக பாடுபடுவதா ?

இந்தச் சிறுவன் இரத்தம் வருமளவுக்கு தனது 

உதடுகளை கடிப்பதை நினைக்கும் பொழுது

அந்தப் பிஞ்சு உள்ளத்தின் வேதனையின் அளவை எம்மால் உணர முடியும்." 

ஆயுதங்கள் என்றும் அமைதியை தருவதில்லை!!

படித்ததில் வலித்தது.

No comments:

Post a Comment