தேன் நெல்லி Honey Amla / Then nellikai / Honey gooseberry

 தேன் நெல்லி என்பது பெரிய நெல்லி பயன்படுத்தி செய்வார்கள்.

கிளாஸ் பாட்டிலில் ஒரு அடுக்கு இயற்கையாக தயாரித்த பொடித்த வெல்லம் அல்லது நாட்டு சக்கரை இட்டு கழுவி காய வைத்த நெல்லியை சிறிய ஈர் குச்சியை வைத்து துளைகள் போட்டு ஒரு அடுக்கு வைக்கவும். வில்லைகளாக்கியும் போடலாம். பின்பு அதன் மேல் வெல்லம். அடுக்குகள் மெல்லியதாக போடவேண்டும். இல்வாறு அடுக்கு அடுக்காக போட்ட பின்பு சூரியபுடம் போடவும்.

வெல்லத்திற்கு பதில் சுத்தமான தேனை முங்கும் அளவு ஊற்றி சூரிய புடம் போட்டு பயன்படுத்தலாம்.

குழந்தைகளுக்காக நெல்லிக்காய் லேகியம் செய்யலாம். பெரு நெல்லியை நன்றாக கழுவி துடைத்து ஆறிய பின் துறுவி வெல்லப்பாகுடன் கிளறி சுருண்டு வரும் போது  ஏலக்காய் கிராம்பு பட்டையை வெறும் வாணலியில்  வறுத்து பொடி செய்து சேர்க்கலாம்.  சுக்குப்பொடி சிறிது சேர்த்தால் காரம் புளிப்பு இனிப்பு துவர்ப்பு  எல்லாம் கலந்த சுவை கிடைக்கும்.  இதை மிட்டாய் மாதிரி சப்பி  சாப்பிடும் போது உமிழ் நீர் அதிகம் சுரந்து உடலுக்கு நன்மை பயக்கும்.  

நன்றி.

No comments:

Post a Comment