உரமோ வளர்ச்சியூக்கியோ எதுவாக இருந்தாலும் குறைந்தது 15-20 நாட்கள் இடைவெளியில் தான் தரவேண்டும் Fertilizing techniques for plants gardening tips

 எத்தகைய உரமோ வளர்ச்சியூக்கியோ எதுவாக இருந்தாலும் குறைந்தது 15-20 நாட்கள் இடைவெளியில் தான் தரவேண்டும். 


ஒவ்வொரு இடுபொருளையும் முறை வைத்து மாற்றி மாற்றி தாருங்கள்.


கொடிவகைகளில் எளிதில் பூஞ்சாண தொற்று ஏற்படும். காலைவேளையில் 4/5 நாட்கள் இடைவெளியில் மஞ்சள்தூள் கரைசல் தொடர்ந்து தெளித்து வரவும்.


கொடி என்று வரும்போது வழக்கத்தைவிட இரண்டு மூன்று மடங்கு பெரிய பை அல்லது பிரிட்ஜ் அல்லது பெரிய தெர்மோகோல் பெட்டியை பயன்படுத்தவும்.


கொடி ரகங்களுக்கு இலைமக்கு அல்லது தொழுவுரம் 15/20 நாள் இடைவெளியில் சிறிய அளவில் தொடர்ந்து தருவது நல்ல பலனை கொடுக்கும்.


பெரிய தொட்டி வேர் வளர்ச்சிக்கு உதவும். வேர் வளர்ச்சியை சார்ந்து புதிய கொடி உருவாகி பூத்து காய்க்கும். மேலுரம் கொடி வளர்ச்சி, பூத்து காய்ப்பதற்கு துணைபுரியும்.


அளவிற்கு மீறிய இடுபொருள் குறைந்த கால இடைவெளியில் தருவது எந்த செடிக்கும் நல்லதல்ல.

கோவை ஆனைகட்டி சத்தர்சனில் அடுப்பில்லா சமையல் பயிற்சி முகாம் cooking without fire

 🌿🙏ஆத்ம வணக்கம்ங்க

பிப்ரவரி 12, 13, இரண்டு நாட்கள் நம்ம கோவை ஆனைகட்டி சத்தர்சனில்

அடுப்பில்லா சமையல் பயிற்சி முகாம்☀️🔥🌿

➖➖➖➖➖➖➖➖

🔹 நமது இல்லத்தில் ஆரோக்கியம் அளிக்கும் அடுப்பில்லா உணவுகளை தயாரிக்க...



🔸 இயற்கை அங்காடி, இயற்கை தயாரிப்பில் உணவகங்கள் அமைத்திட...


🟩 இயற்கை உணவு தயாரிப்பு ஆலோசகர் மற்றும் பயிற்சியாளராக...


🔆இந்த பயிற்சி ஒரு மாபெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


🔺எளிய மலையேற்றம் பயிற்சி, மண்குளியல், தியானம் நுட்பங்கள் கற்றுதரப்படும்


பயிற்சியில் கற்றுக் கொள்ளும் நூற்றுக்கும் மேற்பட்ட இயற்கை உணவு முறைகள்:

🌼ஜூஸ் வகைகள்

🫐கீர் வகைகள்

🥥மில்க் ஷேக்

🥗சாலட் வகைகள்

🍛இயற்கை இட்லி

🥛இயற்கை பால், தயிர்

🍚உப்புமா, கிச்சடி,

🫑பிரியாணி

🍓லட்டு வகைகள்

🥒துவையல், பச்சடி 

🍵பொங்கல், சட்னி

🍹பானகங்கள்

🌽நொறுக்கு தீனிகள்

🌿மூலிகை சாறுகள்

இன்னும் பல...


இயற்கை சூழலில் தங்குமிடம் உணவு மற்றும் பயிற்சியில் கலந்து கொள்பவர் களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.


நாள் : பிப்ரவரி 11 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் , 13 ஞாயிறு மாலை 5 மணி வரை இரண்டு நாள் பயிற்சி முகாம்.


இடம் : சத்தர்சன் ஆஸ்ரமம்

ஸ்டெர்லிங் ரிசார்ட் அருகில்,

வடகொட்டத்தரா, கேரளா. ஆனைகட்டி வழி.


முன்பதிவு விபரங்களுக்கு


ஸ்ரீ பதஞ்சலி ஈஸ்வரன்

ருதம்பரா பவுண்டேசன்

செல் 8610823072🥗🌼🪴

வயிறு சுத்தம் செய்திட மாத்திரை போடாமல் இயற்கை முறை Stomach cleaning without Tablet/hospital

 1.      4 கடுக்காய் விதை நீக்கி தோலை எடுத்து சுத்தம் செய்து 2 டம்ளர் நீரில் கொதிக்கவைத்து ஒரு டம்ளர் ஆனபின்பு ஆறவைத்து வெறும் வயிற்றில் காலையில் குடிக்க வேண்டும், கடுக்காய் கஷாயம் எடுக்கும் நாட்களில் காலை கஞ்சி உணவு நல்லது அசைவம் தவிர்ப்பதும் நல்லது. (ஆறு மாதங்களுக்கு ஒரு  முறை  போதும்)

2.        வெகு வெதுப்பான நீரில் (1-2லிட்டர்) ஒரு எலுமிச்சை பழச்சாறு கலந்து கல் உப்பு கலந்து விடிய காலை மெதுவாக குடிக்கலாம். உப்பு சிறிது கரித்தாற்போல் இருந்தால் நல்லது. பிறகு வீட்டிற்குள்ளேயே சில நிமிடம் நடந்தால் உடனே வந்துவிடும்

3. 1L 200 ml வெதுவெதுப்பான குடிக்கும் நீரில் (கண்ணீர் உப்பு அளவு )கல் உப்பு கலந்து மெதுவாக குடிக்கவும். அதிகாலை வெறும் வயிற்றில் உள்ள போதுதான் எடுக்க வேண்டும். பின்னர் தாடாசனா செய்யலாம். கழிவு 3,4முறை வெளியேறிய பின்னர் வெதுவெதுப்பான நீர் 1டம்ளர் குடிக்கவும். திரும்பவும்2, 3 முறை வெளியேறும்.  சிறுநீர் போன்று போகும் போது நிறுத்த நாட்டு சக்கரை கலந்த நீர் 1டம்ளர் குடிக்கவும். நின்று விடும். இதை செய்யும்  அன்று மிதமான கஞ்சி வகைகள் சிறந்தது. குளிர்ச்சியான வை தவிர்க்கவும். அசைவ உணவு தவிர்க்கவும்.