வயிறு சுத்தம் செய்திட மாத்திரை போடாமல் இயற்கை முறை Stomach cleaning without Tablet/hospital

 1.      4 கடுக்காய் விதை நீக்கி தோலை எடுத்து சுத்தம் செய்து 2 டம்ளர் நீரில் கொதிக்கவைத்து ஒரு டம்ளர் ஆனபின்பு ஆறவைத்து வெறும் வயிற்றில் காலையில் குடிக்க வேண்டும், கடுக்காய் கஷாயம் எடுக்கும் நாட்களில் காலை கஞ்சி உணவு நல்லது அசைவம் தவிர்ப்பதும் நல்லது. (ஆறு மாதங்களுக்கு ஒரு  முறை  போதும்)

2.        வெகு வெதுப்பான நீரில் (1-2லிட்டர்) ஒரு எலுமிச்சை பழச்சாறு கலந்து கல் உப்பு கலந்து விடிய காலை மெதுவாக குடிக்கலாம். உப்பு சிறிது கரித்தாற்போல் இருந்தால் நல்லது. பிறகு வீட்டிற்குள்ளேயே சில நிமிடம் நடந்தால் உடனே வந்துவிடும்

3. 1L 200 ml வெதுவெதுப்பான குடிக்கும் நீரில் (கண்ணீர் உப்பு அளவு )கல் உப்பு கலந்து மெதுவாக குடிக்கவும். அதிகாலை வெறும் வயிற்றில் உள்ள போதுதான் எடுக்க வேண்டும். பின்னர் தாடாசனா செய்யலாம். கழிவு 3,4முறை வெளியேறிய பின்னர் வெதுவெதுப்பான நீர் 1டம்ளர் குடிக்கவும். திரும்பவும்2, 3 முறை வெளியேறும்.  சிறுநீர் போன்று போகும் போது நிறுத்த நாட்டு சக்கரை கலந்த நீர் 1டம்ளர் குடிக்கவும். நின்று விடும். இதை செய்யும்  அன்று மிதமான கஞ்சி வகைகள் சிறந்தது. குளிர்ச்சியான வை தவிர்க்கவும். அசைவ உணவு தவிர்க்கவும்.

No comments:

Post a Comment