பிரண்டை சோற்றுக் கற்றாழை கரைசல்
இயற்கை Vs செயற்கை
இயற்கை விவசாயத்தில் பூச்சி மற்றும் நோய்ககட்டுப்பாடு என்பது அனைவரும் எதிர்கொள்ளும் சவாலான விஷயம். இரசாயன விவசாயத்தில் இந்த சவாலினை சமாளிக்க முதல் தேர்வே பூச்சிக்கொல்லி எனும் நஞ்சே. ஆனால் இதனால் வரும் பின்விளைவுகள் என்பது நாம் எண்ணிப்பார்க்க இயலாத ஒன்று. இயற்கை விவசாய முறையில் இவை அனைத்தும் சாத்தியமே. நாம் நமது வீட்டின் அருகிலேயே எளிதாக கிடைக்கும் பொருட்களைக் கொண்டே இதற்கு தீர்வு காண முடியும்.
பிரண்டை கசாயம்
பயிர்களில் சேதத்தை விளைவிக்கும் அசுவினி, இலைப்பேன் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் பிரண்டை கசாயம் மிக குறைந்த செலவில் தயாரிக்கும் முறையை மேட்டூரைச் சேர்ந்த ஈஷா இயற்கை விவசாயி திரு குணசேகரன் விவரிக்கிறார்.
தேவையான பொருட்களும் செயல்முறைகளும்
சிறு துண்டுகளாக்கப்பட்ட பிரண்டை - 3கிலோ
சோற்றுக் கற்றாழை - 3கிலோ
கோமியம் 10 லிட்டர்
புகையிலை ½ கிலோ
மஞ்சள் தூள் 25 கிராம்
பெருங்காயம் 25 கிராம்
துண்டுகளாக்கப்பட்ட பிரண்டை மற்றும் சோற்றுக் கற்றாழையை உரலில் இட்டு நன்கு இடித்து கொள்ள வேண்டும். துண்டுகளாக்கப்பட்ட புகையிலையையும் சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் மஞ்சள், பெருங்காயத்தூள் மற்றும் கோமியத்துடன் மூன்று நாட்கள் ஊறவைக்கவும். மூன்று நாட்கள் கழித்து கரைசல் தெளிக்க தயாராகிவிடும். தினமும் 5 முதல் 10 முறை கடிகார சுற்றில் குச்சியால் கலக்கி விடவேண்டும்.
பயன்படுத்தும் முறை
பாதிப்பு உள்ள பயிருக்கு ஒரு டேங்க்கிற்கு தலா 300 மில்லி வீதம் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
பயன்கள்
• அசுவினி இலைப்பேன் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தும்.
• வைரஸ் மற்றும் பூஞ்சை தாக்குதலை தீர்க்கும்.
• பூக்கள் பூக்கும் தன்மையை அதிகரிக்கும்.
No comments:
Post a Comment