தென்மாவட்ட உழவர்கள் கலந்துரையாடல் Conference of of TN south district farmers

 தென்மாவட்ட உழவர்கள் கலந்துரையாடல், 

சந்திப்பு மற்றும் ஒருங்கிணைப்பு:

**************

         இன்றைய சூழலில் யார் ஒருவரும் கணிக்க முடியாத நிலையில் பருவநிலை மாற்றமடைந்துள்ளது . இந்நிலை தொடந்து நீடித்தால் இப்புவியில் மனிதர்கள் வாழ்வு என்பது கேள்விக்குறி தான் என்பதை நம்மாழ்வார் ஐயா ஒவ்வொரு நாளும் சுட்டிக் காட்டினார்.


       இதன் விளைவாக ஒருபுறம் மேக வெடிப்பால் வெள்ளமும் , ஒருபுறம் மழையில்லாமல் வறட்சியும் தொடர்கிறது. நிலத்தடி நீர் குறைந்து கொண்டே செல்கிறது. 


      அதைத் தான் இந்தாண்டுமட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் பார்க்கிறோம். விதைக்கும் நேரத்தில் மழை பெய்யாது அறுக்கும் நேரத்தில் கொட்டி தீர்த்துவிடுகிறது. விதைத்த தானியங்கள் வீடு வந்து சேர்ப்பதே நெருக்கடி. அந்தளவுக்கு பன்னாட்டு வணிக முறையால் வேளாண்மையும், வாழ்வியலும் சிதைந்துள்ளது. 


          இந்நிலையை கருத்தில் கொண்டு செலவு குறைந்த நிலைத்த நீடித்த வேளாண்மை முறையை , இன்று நம்மாழ்வார் ஐயா வழி உழவர்கள் பின்பற்றி வெற்றிகரமாக வாழ்ந்து வருகிறார்கள்.அவர்களை ஒருங்கிணைத்து சுற்றுசூலுக்குகாக பேரியக்கம் காண வேண்டும் என்று நம்மாழ்வார் ஐயா விரும்பினார். 


           மேலும் இன்றைய கொரானா போன்ற பேரிடர் நெருக்கடியால் ஒவ்வொருவரின் வாழ்வும் நிலைத்தன்மையில்லாமல் வாழ்வாதரம் கேள்விக்குறியாக உள்ளது.


          பலர் நகரங்களிலிருந்து கிராமங்களை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். ஆனால் கிராமங்கள் நகரங்களால் சுரண்டப்பட்டு குடிக்க நீர்கூட இல்லை. இந்நிலையை மாற்ற நம்மாழ்வார் ஐயா உருவாக்கிய 21 அம்ச திட்டம் தான் “ வாழும் கிராமங்கள் “ கிராமங்களை வாழத் தகுந்ததாக மாற்ற ஆயிரம் இளைஞர்களை பயிற்றுநர்களாக மாற்ற வேண்டும் என்று ஐயா சொன்னார்.


      மேலும் நம்முடைய மரபு விதை, இயற்கை வாழ்வியல் முறைகள், வாழ்வியல் கல்வி, மரபு தொழில்கள், சூழலுக்கு உகந்த கட்டுமானம் போன்றவைகளை மீட்டு “ தற்சார்பு வாழ்வியலை “ அனைவரும் வாழ வழி செய்ய வேண்டும் என்பதை நம்மாழ்வார் ஐயா விரும்பினார்.


       மேலும் உழவர்களையும், நுகர்வோரையும் ஒற்றைத் தளத்தில் ஒருங்கிணைத்து "ஊர்தோறும் உழவர்களின் நேரடி சந்தை தொடங்க வேண்டும் என்பதையும் விரும்பினார்.


        இதுபோன்று நம்மாழ்வார் ஐயாவின் தொலைநோக்குப் பார்வை விசாலமானது. அதற்கான ஐயாவின் பயணமும், செயல்பாடுகளும் விரிவானது. இந்த விரிவான செயல்பாடுகள் குறித்தும், அதன் நிலை குறித்தும் நம்மோடு பகிர நம்மாழ்வார் ஐயாவோடு 2004ல் இளம் வயதில் சுனாமி மறுசீரமைப்புப் பணியில் தன்னை இணைத்துக் கொண்டு, இன்று வரை வேளாண்மை, மருத்துவம், இயற்கை வாழ்வியல் என பலபணிகள் நம்மாழ்வார் ஐயாவின் சிந்தனைகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்று வருபவர்களில் முக்கியமானவர் “ சாலை ஏங்கல்ஸ்ராஜா ( வானகம், நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவம்) அவர்கள்.


            இன்றைய நெருக்கடி நிலையை மாற்றவும், நம்மாழ்வார் ஐயா விரும்பிய சமூக மாற்றதை இன்னும் விரிவுபடுத்தவும், கூர்மைப் படுத்தவும், ஒத்த சிந்தைனையில் செயல்படும் இயற்கை செயல்பாட்டார்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதை ஏங்கல்ஸ்ராஜாவும் விரும்பி அதற்கான தொடர் செயல்பாடுகளை வானகத்திலிருந்து பல அமைப்புகளோடு முன்னெடுத்து வருகிறார்.

        

    அதன் தொடர்ச்சியாக சிவகாசியில்  தேன்கனி இயற்கை உழவர் கூட்டமைப்போடு இணைந்து தென்மாவட்ட உழவர்கள், வாழ்வியலாளர்களோடு கலந்துரையாடல்,  சந்திப்பு மற்றும் ஒருங்கிணைப்பை கூட்டாக ஏற்படுத்த உள்ளோம்.


சந்திப்பு நாள் :

 பிப்பரவரி 13, 2022 ஞாயிற்றுக் கிழமை


நேரம் : மாலை 4 மணி முதல் இரவு 7 வரை


இடம் : கீதா வாழ்வியல் பண்ணை,

சாத்தூர் சாலை, பாறைப்பட்டி மின்நிலைய அலுவலகம் அருகில், சிவகாசி. விருதுநகர் மாவட்டம்.


https://www.google.com/maps/place/9%C2%B026'14.2%22N+77%C2%B049'13.7%22E/@9.4358035,77.818119,496m/data=!3m1!1e3!4m5!3m4!1s0x0:0x7c46579b83248048!8m2!3d9.437267!4d77.820479 

  தொடர்புக்கு : 94435 75431, 90955 63792, 978764 8002


ஒத்த சிந்தைனையாளைர்களை வரவேற்கிறோம். அனைவரும் ஒன்றிணைந்து தற்சார்பு சமூகமாவோம்.

நன்றி…


No comments:

Post a Comment