ஜல நேர்த்தி ( மூக்கு கழுவுதல் ) Nose cleaning Method

 அனைவருக்கும் வணக்கம் 🙏


ஜல நேர்த்தி ( மூக்கு கழுவுதல் )


இதைபற்றி நிறைய சந்தேகம் அனைவரும் கேட்டதால் மீண்டும் இந்த பதிவு 👇


மருந்து மாத்திரை இல்லாமல்,  


எந்த பத்தியம் இல்லாமல்...


சாதாரண நீரை வைச்சு சளியை அகற்றலாம்.....


இதற்கு 30 ரூபாய் மூக்குகுவளை போதுமானது   


நம்பிக்கையா தொடர்ந்து செய்யனும்


கடைபிடிக்கும் முறைகள் 👇


குவளையில் முக்கால் பங்கு தண்ணீர், 2 கல் உப்பு போட்டு, நம் கண்ணீரின் அளவு சூடா நீர் வைச்சிக்கோங்க, உப்பு கரையனும்....


அடுத்து மூக்கு கழுவ ஆரம்பிக்கும்முன் செய்யவேண்டியது 👇


* செய்யும்போது மூக்கில் அடைப்பு இருக்க கூடாது,  இருந்தா காது, மண்டை க்கு நீர் ஏறிடும் ஒரு வித எரிச்சல் இருக்கும்,  உயிருக்கு ஆபத்து இருக்காது,  சிறிது நேரத்தில் சரியாகிடும்....


எப்படி மூக்கடைப்பை சரிசெய்துட்டு செய்யறது 👇


வேகமான மூச்சுபயிற்ச்சி செய்துட்டு மூக்கு கழுவ ஆரம்பிக்கனும், குழுவில் பலமுறை சொல்லியிருக்கேன்....


இல்லேனா குதிச்சாலும் மூக்கடைப்பு சரியாகும்....


மூக்கடைப்பு சரியானதும்👇


L வடிவத்தில் குனிந்து தலையை சாய்த்து, நாக்கை வெளியே நீட்டி வாய்வழி மூச்சைவிட்டு 10 முறை பழகவும்....


அதுக்கப்புறம் மூக்கு கழுவும் குவளையை வலது மூக்கில் வைத்து சாய்க்கவும்,  தண்ணீர் இடது மூக்குவழியா வரும், 


தண்ணி உள்ள போகும் போது மூக்குவழியா மூச்சுவிட கூடாது, வாய்வழியாதான் விடனும்..  


இரண்டு மூக்கிலும் நீர் விட்டு வெளியேற்றனும்.....



வாய்வழியாகவும்,  மூக்குவழியாகவும் சளி வெளியே வரும்,  அதனால் அதற்கான இடத்தில் நின்றுகொள்ளவும்......


செய்து முடித்ததும் பஸ்திரிகா பயிற்ச்சி கட்டாயம் செய்யனும்....மூக்கில் உள்ள அனைத்து நீரும் வெளியே வரனும்....



பயன்கள்


*முகம் நெற்றி மண்டை அனைத்து பகுதியில் உள்ள சளி வெளியேறிடும்


* மூச்சு சீரானா தூக்கம் நல்லா வரும்


*நல்லா தூங்கினா மனசு நல்லா இருக்கும்


* மனசு நல்லா இருந்தா கோபம் வராது


* கோபம் வரலனா, மனசு ஓருநிலைபட்டு நம்ம சமுதாயத்துக்கு ஏதாவது செய்யனும்னு தோனும்....


* உலகம் அமைதிபெறும்...நாமும் அதில் நிம்மதியா வாழலாம்.......

by Ajitha madam

No comments:

Post a Comment