கண் கழிவு நீக்கும் முறை Eye cleaning technique

 கண் கழிவு நீக்கும் முறை


கண் குவலை வைச்சு நாளைக்கு இரு முறை காலை மாலை கண்கழுவலாம்.....



பயன்கள்


*கண்களில் உள்ள தூசிகள் நீக்கும்

*அழுக்குகளை நீக்கும்

* வெப்பம் குறைக்கும்

*கண்ணுக்கு பிராண சக்தி கிடைக்கும்

* கண்பார்வை தெளிவாகும்


செய்யும் முறை


மருந்தில்லா தண்ணீர் எடுத்துக்கோங்க, கண்குவலையில் ஊற்றி லேசா குனிந்து தண்ணீரில் கண் வைச்சு முழித்து பின் கண்களை மூடவும்....


கண்குவலை கிடைக்காதவங்க இரவே திறந்தவெளியில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி துணி கட்டி வைச்சிடுங்க, காலையில் அந்த தண்ணீரை ஒரு அகலமான பாத்திரத்தில் ஊற்றி அதில் முகத்தை வைத்து கண்களை திறந்து பார்க்கவும், பாத்திரத்தில் முகம் வைக்கும்போது நாக்கு வெளியே இருக்கனும்....( இந்த பயிற்சி காலை ஒரு முறை போதும்)

நந்தியாவட்டை பூக்கள் இட்ட குளிரிந்த நீரும் கண் குவளையும்.... பயிற்சி இனிதே முடிந்தது...







1 கண் இடது வலது பார்க்கனும், இடது போகும்போது மூச்சை உள்ளே லேசா இழுத்து  வலது வரும் போது விடனும்..  

2 மேலே கீழே பார்ப்பது ( மேலே போகும்போது மூச்சை எடுத்து கீழே வரும்போது விடனும் )

3 வட்டம் போடுவது ( ஒருவட்டம் வரும்போது மூச்சை எடுத்து திரும்ப வந்த இடத்திற்கு போகும்போது மூச்சை விடனும் )

4. கண்களை இறுக மூடி திறப்பது ( மூடும்போது உள்ளே  இழுத்து திறக்கும் போது மூச்சை வெளியே வினும் )

5. பக்கவாட்டில் பார்ப்பது ( மூச்சை இழுத்து மறுபக்கம் வரும்போது விடனும் ) 

6. நெற்றிக்கண்ணில் விரல் வைத்து இரு கண்களும் மூக்கை பார்க்கனும் ( மூச்சை இழுத்து மறுபக்கம் வரும்போது விடனும் )

இந்த பயிற்சியை இன்று மாலை ஒரு முறை செய்ங்க, நாளை முதல் தொடர்ந்து தினமும் செய்ங்க....

No comments:

Post a Comment