பஞ்சம் தீர்க்கும் பஞ்சகாவியம் செய்முறை Panchakavya seya murai vilakkam

 அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள் 

(நன்றி திரு நம்மாழ்வார் ஐயா) 

பஞ்சம் தீர்க்கும் பஞ்சகாவியம் செய்முறை:- 

மாட்டுச் சாணம் ஒரு கிலோ,பசு கோமியம் ஒரு லிட்டர் ,பசும்பால் அரை லிட்டர்,பசு தயிர் அரை லிட்டர் பசுநெய் 150 மில்லி நான்கைந்து கனிந்த வாழைப் பழங்கள் கரும்பு சக்கரை 250 கிராம் கரும்புச்சாறு கால் லிட்டர் இவைகள் அனைத்தும் மூலப்பொருள்கள் ஆகும்

10 லிட்டர் கொள்ளளவு உள்ள மூடி உள்ள பிளாஸ்டிக் பக்கெட்டில் முதல்நாள் சாணியையும் நெய்யையும் நன்றாக கலந்து மூடி வைக்க வேண்டும் ஒரு முப்பது முறை இரண்டு நாட்களுக்கு கலக்கவேண்டும் அதற்குப் பிறகு மீதி அனைத்தையும் பொருள்களையும் அதனுடன் இணைத்து காலையில் 50 முறையும் மாலையில் 50 முறையும் கடிகார சுற்றில் கலக்கவேண்டும் அனைத்து பொருளையும் கலக்கும் நாளிலிருந்து ஏழு நாட்கள் கழித்து பஞ்சகவ்யத்தை உபயோகிக்கலாம் ஒரு லிட்டருக்கு முதல் முறை செடிகளுக்கு அடிக்கும் பொழுது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி கலக்கவேண்டும் அதற்குப் பிறகு 50 மில்லி போதும் 15 நாட்களுக்கு ஒரு முறை உபயோகிக்கலாம் பஞ்சகாவியம் தயாராகிய பின் தினமும் காலையோ அல்லது மாலையோ ஒரு முறை 30 தடவை கலக்கினால் போதும் (பின்குறிப்பு கலக்கும் குச்சியை நன்றாக கழுவி வைத்து உபயோகிக்க வேண்டும்)🙏

நாளைய கழிவு நீக்கங்கள் Clean your body part internally to live healthy

No comments:

Post a Comment