நாளைய கழிவு நீக்கங்கள் Clean your body part internally to live healthy

 அனைவருக்கும் வணக்கம் 🙏


நாளைய கழிவு நீக்கங்கள்


காது கழிவு


காதின் வழியே கெட்ட காற்று வெளியேறும், சூடு வெளியேறும்....மாதம் ஒரு முறை லேசான துண்டை முனையில் சுருட்டி லேசா அதில் உள்ள கழிவுகளை எடுக்கலாம்....


வெள்ளைபூண்டு தோல் உரித்து காதில் வைக்கனும் ( உள்ளே போய்விடாதபடி பெரிய பல் பூண்டு எடுத்துக்கோங்க ) 5 நிமிடம் வைத்தால் போதும், மாதம் ஒரு முறை செய்யனும்....( head set மாட்டுவதுபோல் இருக்கனும் )...உள்ளே போயிடாம பார்துக்கோங்க 🙏


பித்தநீர் கழிவு


காலையில் பல் விலக்கிவிட்டு இரண்டுவிரல் விட்டு உள்நாக்கு தொட்டு குமட்டவும், இரண்டுமுறை, பித்தம் இருந்தால் பச்சையாக, புளிப்பாக வெளியே வந்துடும், வரலனாலும் பரவாயில்லை, 


பயன்கள்

தலைவலி

வாந்தி

நெஞ்செரிச்சல்

ஜீரணமின்மை

வயிறுசம்மந்தமான நோய் நீக்கும்


தலைக்கழிவு


* முருங்கையிலை, மஞ்சள், நொச்சி இலை, வேப்பிலை, துளசி, தைல இலை, இப்படி எந்த இலை கிடைக்கிறதோ அதை வைத்து ஆவி கட்டவும் ...தலையில் இருக்கும் கெட்ட நீர் வெளியேறும் 


* மூச்சுபயிற்சி தினமும் செய்யவும் (30 நாள் )...link அனுப்புகிறேன்...இரண்டுநாள் அதை பார்த்து கற்றுக்கொண்டு நீங்களே உங்களுக்கு தோதான நேரத்தில் செய்யலாம்


நீர்தாரா


பெண்களுக்கானது, இதை மாதம் ஒரு முறை மாதவிலக்கு முடிந்ததும் செய்யலாம், எனிமா கேனிலேயே இதை செய்வதற்கான உபகரணம் சேர்த்து கிடைக்கும்....இதற்கான விளக்கமான link அனுப்புகிறேன்....அதில் மிக தெளிவான பதிவு இருக்கும்.... பார்துட்டு.. செய்யனும் என நினைக்கும் பெண்கள் சந்தேகம் இருந்தால் தனிபதிவில் கேளுங்க, சொல்கிறேன்...



பயன்கள்


* நீர்கட்டியை கரைத்து கழிவாக வெளியேற்றும்

* கர்பப்பை புண் ஆறும்

* கர்பப்பை கேன்சர் போன்ற நோய்கள் வருவதை தடுக்கலாம்



நீர்தாரா செய்யகூடாத நபர்கள்


1 கர்பப்பை பை எடுத்தவங்க செய்யகூடாது

2 மாசமா இருக்கறவங்க செய்யவேண்டாம்

3 திருமணமாகாத பெண்கள் செய்யவேண்டாம்

4 குழந்தைக்கு காத்திருப்பவர்கள் காலை மாலை செய்யலாம், இரவு வேண்டாம்



இந்த பதிவுகளோடு கழிவு நீக்கம் முடிந்தது 🙏🤝👍💐

No comments:

Post a Comment