வேப்பம் பூ ரசம் Neem Flower Rasam

உடலின் நோய் எதிர்பாற்றலை அதிகரித்து
கிருமிகளை அழிக்கும்...

வேப்பம் பூ ரசம்🍵🍵🍵
🌿🌼🌿🌼🌿🌼🌿🌼🌿🌼

            ஒரு பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு உருகியதும் சிறிது பெருங்காயப்பொடி, கடுகு, வரமிளகாய், சிறிது வேப்பம் பூ காய்ந்தது இவை அனைத்தையும் சேர்த்து வதக்கி பின் புளிக்கரைசல் (சாதா புளிஅல்ல கொடம்புளி)  மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து நீர் விட்டு மிளகு, சீரகம், பூண்டு தட்டிப் போட்டு லேசாக ஒரு கொதி வந்தவுடன் கறிவேப்பிலை கொத்தமல்லி தூவி இறக்கி விட வேண்டும் இந்த *வேப்பம் பூ ரசம் அருந்தினால் வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும்.

 உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து சமன்செய்யும். பித்தத்தை சமன் செய்யக் கூடியது. ஈரலை பலப்படுத்த கூடியது. பசியை தூண்டக் கூடியது. செரிமான கோளாறுகளை போக்க கூடியதாக அமைகின்றது. ரத்தத்தில் உள்ள அதிக கொழுப்பை குறைக்க கூடியது. மாரடைப்பை தடுக்க கூடியது. மாதம் ஒரு முறையாவது வேப்பம்பூ ரசம் சாப்பிட வேண்டும் வேப்பம் பூ துவையல் செய்து சாப்பிடலாம்

           வேப்பம் பூ ஒரு டீ ஸ்பூன் கருஞ்சீரகம் கால் டீஸ்பூன் மஞ்சள் கால் டீஸ்பூன் இவற்றை ஒரு டம்ளர் நீர்விட்டு கசாய மாக்கி தினசரி 50 ml அளவுக்கு குடித்து வர கை கால் எரிச்சல் தீரும். நரம்புகளில் ஏற்படும் அலர்ஜி, தேய்வு சரியாகும். அதோடு உள் உறுப்புகளும் பாதுகாக்கப்படும்.வேம்பு ஒரு முத்தோஷ சமனி

☺️🌿🌿🌼🍵🌼🌿🌿😋

No comments:

Post a Comment