பிரண்டை சோற்றுக் கற்றாழை கரைசல்

 பிரண்டை சோற்றுக் கற்றாழை கரைசல்

 

இயற்கை Vs செயற்கை

 

இயற்கை விவசாயத்தில் பூச்சி மற்றும் நோய்ககட்டுப்பாடு என்பது அனைவரும் எதிர்கொள்ளும் சவாலான விஷயம். இரசாயன விவசாயத்தில் இந்த சவாலினை சமாளிக்க முதல் தேர்வே பூச்சிக்கொல்லி எனும் நஞ்சே. ஆனால் இதனால் வரும் பின்விளைவுகள் என்பது நாம் எண்ணிப்பார்க்க இயலாத ஒன்று.  இயற்கை விவசாய முறையில் இவை அனைத்தும் சாத்தியமே. நாம் நமது வீட்டின் அருகிலேயே எளிதாக கிடைக்கும் பொருட்களைக் கொண்டே இதற்கு தீர்வு காண முடியும்.

 

பிரண்டை கசாயம்

 

பயிர்களில் சேதத்தை விளைவிக்கும் அசுவினி, இலைப்பேன் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் பிரண்டை கசாயம் மிக குறைந்த செலவில் தயாரிக்கும் முறையை மேட்டூரைச் சேர்ந்த ஈஷா இயற்கை விவசாயி திரு குணசேகரன் விவரிக்கிறார்.

 

தேவையான பொருட்களும் செயல்முறைகளும்

 

சிறு துண்டுகளாக்கப்பட்ட பிரண்டை - 3கிலோ 

சோற்றுக் கற்றாழை - 3கிலோ 

கோமியம் 10 லிட்டர் 

புகையிலை ½ கிலோ 

மஞ்சள் தூள் 25 கிராம் 

பெருங்காயம் 25 கிராம் 

 

துண்டுகளாக்கப்பட்ட பிரண்டை மற்றும் சோற்றுக் கற்றாழையை உரலில் இட்டு நன்கு இடித்து கொள்ள வேண்டும். துண்டுகளாக்கப்பட்ட புகையிலையையும் சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் மஞ்சள், பெருங்காயத்தூள் மற்றும் கோமியத்துடன் மூன்று நாட்கள் ஊறவைக்கவும். மூன்று நாட்கள் கழித்து கரைசல் தெளிக்க தயாராகிவிடும். தினமும் 5 முதல் 10 முறை கடிகார சுற்றில் குச்சியால் கலக்கி விடவேண்டும்.

 

பயன்படுத்தும் முறை

 

பாதிப்பு உள்ள பயிருக்கு ஒரு டேங்க்கிற்கு தலா 300 மில்லி வீதம் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். 

 

பயன்கள்

 

• அசுவினி இலைப்பேன் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தும். 

• வைரஸ் மற்றும் பூஞ்சை தாக்குதலை தீர்க்கும். 

• பூக்கள் பூக்கும் தன்மையை அதிகரிக்கும்.

வீட்டுத்தோட்டம் / மாடித்தோட்டதிற்கு தேவையான தரமான நாட்டு விதைகள் கிடைக்கும். Native vegetable seeds for sale

 வீட்டுத்தோட்டம் / மாடித்தோட்டதிற்கு தேவையான தரமான நாட்டு விதைகள் கிடைக்கும்.


தொடர்புக்கு 9345416066


செடி விதைகள்


1. நாட்டுத்தக்காளி

2. சிகப்பு தக்காளி

3. நீள மிளகாய்

4. குண்டு மிளகாய்

5. குடை மிளகாய்

6. குண்டு கத்திரி(ஊதா)

7. நீள கத்திரி

8. வரி கத்திரி

9. பச்சை கத்திரி

10. வெள்ளை கத்திரி

11. முள் கத்திரி

12. மணப்பாறை கத்திரி

13. செவந்தம்பட்டி கத்தரி

14. வெண்டை (பச்சை)

15. வெண்டை (வெள்ளை)

16. யாணைத் தந்த வெண்டை

17. சிகப்பு வெண்டை

18. மலை வெண்டை

19. நீள வெண்டை

20. செடி அவரை

21. செடி முருங்கை

22. யாழ்ப்பான முருங்கை

23. நாட்டு முருங்கை

24. முருங்கை பீன்ஸ்

25. கொத்தவரை

26. செடி பீன்ஸ் (White)

27. செடி பீன்ஸ் (Brown)

28. செடி பீன்ஸ் (French Bean)

29. சின்ன வெங்காயம்

30. பெரிய வெங்காயம்

31. பொரியல் தட்டை (காராமணி)

32. வெள்ளை முள்ளங்கி

33. சிவப்பு முள்ளங்கி

34. பீட்ரூட்

35. கேரட்

36. முட்டைகோஸ்

37. பூ கோஸ் (Cauliflower)

38. பச்சை கோஸ் (Broccoli)

39. டர்னீப்

40. நூல்கோல்

41. பப்பாளி

42. இனிப்பு சோளம் (ஊதா)

43. இனிப்பு சோளம் (மஞ்சள்)

44. மக்காச் சோளம் (சிவப்பு)

45. மக்காச் சோளம் (மஞ்சள்)


கொடி விதைகள்


46. பாகற்காய்

47. மிதி பாகல்

48. புடலை (நீளம்)

49. புடலை (குட்டை)

50. பீர்க்கன் (நீளம்)

51. பீர்க்கன் (குட்டை)

52. நீள சுரை

53. கும்ப சுரை

54. பரங்கி (பெரியது)

55. பரங்கி (சிறியது)

56. பரங்கி (நீளம்)

57. வெண்பூசணி

58. கொடி அவரை

59. பட்டை அவரை

60. கோழி அவரை

61. தமட்டை அவரை

62. யானைக்காது அவரை

63. கொடி பீன்ஸ்

64. வெள்ளை மொச்சை

65. சிகப்பு மொச்சை

66. கருப்பு மொச்சை

67. வரி மொச்சை

68. வெள்ளரி 

69. தர்பூசணி

70. முலாம்பழம்

71. பச்சை பட்டானி

72. நுரை பீர்க்கன்

73. கொடிக் காராமணி


கீரை விதைகள்


74. அரைக்கீரை (பெரியது)

75. அரைக்கீரை (சிறியது)

76. சிறு கீரை (பச்சை)

77. சிறு கீரை (சிவப்பு)

78. முளைக் கீரை (சிவப்பு)

79. முளைக் கீரை (பச்சை)

80. புளிச்ச கீரை (சிவப்பு)

81. புளிச்ச கீரை (பச்சை)

82. தண்டுக் கீரை (பச்சை)

83. தண்டுக் கீரை (சிவப்பு)

84. செங்கீரை (பச்சை)

85. செங்கீரை (சிவப்பு)

86. அகத்திக்கீரை (சிவப்பு)

87. அகத்திக்கீரை (வெள்ளை)

88. மனத்தக்காளிகீரை 

89. பாலக்கீரை

90. பருப்புக் கீரை

91. பசலைக் கீரை

92. வெந்தயக் கீரை

93. நாட்டு கொத்துமல்லி

94. சுக்கான் கீரை

95. சக்கரவர்த்தி கீரை

96. காசினி கீரை


மலர் விதைகள்


97. சாமந்தி பூ

98. தாமரை


மூலிகை விதைகள்


99. துளசி

100. சென்னா அவுரி

101. கஞ்சாங் கோரை

102. முடக்கத்தான்

103. அஸ்வகந்தா

104. நிலவேம்பு

105. அவுரி

106. மரிக்கொழுந்து

107. திருநீற்றுப் பச்சிலை

108. ஆவாரை

109. பூனைக்காலி

110. கரிசலாங்கண்ணி

தென்மாவட்ட உழவர்கள் கலந்துரையாடல் Conference of of TN south district farmers

 தென்மாவட்ட உழவர்கள் கலந்துரையாடல், 

சந்திப்பு மற்றும் ஒருங்கிணைப்பு:

**************

         இன்றைய சூழலில் யார் ஒருவரும் கணிக்க முடியாத நிலையில் பருவநிலை மாற்றமடைந்துள்ளது . இந்நிலை தொடந்து நீடித்தால் இப்புவியில் மனிதர்கள் வாழ்வு என்பது கேள்விக்குறி தான் என்பதை நம்மாழ்வார் ஐயா ஒவ்வொரு நாளும் சுட்டிக் காட்டினார்.


       இதன் விளைவாக ஒருபுறம் மேக வெடிப்பால் வெள்ளமும் , ஒருபுறம் மழையில்லாமல் வறட்சியும் தொடர்கிறது. நிலத்தடி நீர் குறைந்து கொண்டே செல்கிறது. 


      அதைத் தான் இந்தாண்டுமட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் பார்க்கிறோம். விதைக்கும் நேரத்தில் மழை பெய்யாது அறுக்கும் நேரத்தில் கொட்டி தீர்த்துவிடுகிறது. விதைத்த தானியங்கள் வீடு வந்து சேர்ப்பதே நெருக்கடி. அந்தளவுக்கு பன்னாட்டு வணிக முறையால் வேளாண்மையும், வாழ்வியலும் சிதைந்துள்ளது. 


          இந்நிலையை கருத்தில் கொண்டு செலவு குறைந்த நிலைத்த நீடித்த வேளாண்மை முறையை , இன்று நம்மாழ்வார் ஐயா வழி உழவர்கள் பின்பற்றி வெற்றிகரமாக வாழ்ந்து வருகிறார்கள்.அவர்களை ஒருங்கிணைத்து சுற்றுசூலுக்குகாக பேரியக்கம் காண வேண்டும் என்று நம்மாழ்வார் ஐயா விரும்பினார். 


           மேலும் இன்றைய கொரானா போன்ற பேரிடர் நெருக்கடியால் ஒவ்வொருவரின் வாழ்வும் நிலைத்தன்மையில்லாமல் வாழ்வாதரம் கேள்விக்குறியாக உள்ளது.


          பலர் நகரங்களிலிருந்து கிராமங்களை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். ஆனால் கிராமங்கள் நகரங்களால் சுரண்டப்பட்டு குடிக்க நீர்கூட இல்லை. இந்நிலையை மாற்ற நம்மாழ்வார் ஐயா உருவாக்கிய 21 அம்ச திட்டம் தான் “ வாழும் கிராமங்கள் “ கிராமங்களை வாழத் தகுந்ததாக மாற்ற ஆயிரம் இளைஞர்களை பயிற்றுநர்களாக மாற்ற வேண்டும் என்று ஐயா சொன்னார்.


      மேலும் நம்முடைய மரபு விதை, இயற்கை வாழ்வியல் முறைகள், வாழ்வியல் கல்வி, மரபு தொழில்கள், சூழலுக்கு உகந்த கட்டுமானம் போன்றவைகளை மீட்டு “ தற்சார்பு வாழ்வியலை “ அனைவரும் வாழ வழி செய்ய வேண்டும் என்பதை நம்மாழ்வார் ஐயா விரும்பினார்.


       மேலும் உழவர்களையும், நுகர்வோரையும் ஒற்றைத் தளத்தில் ஒருங்கிணைத்து "ஊர்தோறும் உழவர்களின் நேரடி சந்தை தொடங்க வேண்டும் என்பதையும் விரும்பினார்.


        இதுபோன்று நம்மாழ்வார் ஐயாவின் தொலைநோக்குப் பார்வை விசாலமானது. அதற்கான ஐயாவின் பயணமும், செயல்பாடுகளும் விரிவானது. இந்த விரிவான செயல்பாடுகள் குறித்தும், அதன் நிலை குறித்தும் நம்மோடு பகிர நம்மாழ்வார் ஐயாவோடு 2004ல் இளம் வயதில் சுனாமி மறுசீரமைப்புப் பணியில் தன்னை இணைத்துக் கொண்டு, இன்று வரை வேளாண்மை, மருத்துவம், இயற்கை வாழ்வியல் என பலபணிகள் நம்மாழ்வார் ஐயாவின் சிந்தனைகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்று வருபவர்களில் முக்கியமானவர் “ சாலை ஏங்கல்ஸ்ராஜா ( வானகம், நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவம்) அவர்கள்.


            இன்றைய நெருக்கடி நிலையை மாற்றவும், நம்மாழ்வார் ஐயா விரும்பிய சமூக மாற்றதை இன்னும் விரிவுபடுத்தவும், கூர்மைப் படுத்தவும், ஒத்த சிந்தைனையில் செயல்படும் இயற்கை செயல்பாட்டார்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதை ஏங்கல்ஸ்ராஜாவும் விரும்பி அதற்கான தொடர் செயல்பாடுகளை வானகத்திலிருந்து பல அமைப்புகளோடு முன்னெடுத்து வருகிறார்.

        

    அதன் தொடர்ச்சியாக சிவகாசியில்  தேன்கனி இயற்கை உழவர் கூட்டமைப்போடு இணைந்து தென்மாவட்ட உழவர்கள், வாழ்வியலாளர்களோடு கலந்துரையாடல்,  சந்திப்பு மற்றும் ஒருங்கிணைப்பை கூட்டாக ஏற்படுத்த உள்ளோம்.


சந்திப்பு நாள் :

 பிப்பரவரி 13, 2022 ஞாயிற்றுக் கிழமை


நேரம் : மாலை 4 மணி முதல் இரவு 7 வரை


இடம் : கீதா வாழ்வியல் பண்ணை,

சாத்தூர் சாலை, பாறைப்பட்டி மின்நிலைய அலுவலகம் அருகில், சிவகாசி. விருதுநகர் மாவட்டம்.


https://www.google.com/maps/place/9%C2%B026'14.2%22N+77%C2%B049'13.7%22E/@9.4358035,77.818119,496m/data=!3m1!1e3!4m5!3m4!1s0x0:0x7c46579b83248048!8m2!3d9.437267!4d77.820479 

  தொடர்புக்கு : 94435 75431, 90955 63792, 978764 8002


ஒத்த சிந்தைனையாளைர்களை வரவேற்கிறோம். அனைவரும் ஒன்றிணைந்து தற்சார்பு சமூகமாவோம்.

நன்றி…