வணக்கம்,
இந்த கீரை யாருக்காவது கிடைத்தால் விடாதிர்கல். இந்த கீரை நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே உணவில் சேர்த்து வந்த ஒரு வகை கீரை தான். இப்போது இந்த கீரையை பற்றி யாருக்கும் அந்த அளவு தெரியாத காரணத்தால். இந்த கீரையை உணவில் யாரும் அதிகமாக பயன்படுத்துவது கிடையாது...
இந்த கீரையின் பெயர் வெள்ள கீரை/வள்ளக்கீரை அல்லது வள்ளல் கீரை இதனை ஆங்கிலத்தில் வாட்டர் ஸ்பினச் என்று அழைக்கப்படுகிறது.
இதில் அதிக அளவில் புரதம், நார்சத்து,கணிமங்கள், மற்றும் வைட்டமின்கள் ஆகியன உள்ளன.
இதன் மருத்துவ குணங்கள் என்று எடுத்துக்கொண்டால் - இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கும், இது பெண்களுக்கு பால்சுரப்பை அதிகப்படுத்தும், இதன் கீரையை 1 மண்டலம் உணவில் சேர்த்து வர பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுத்தலை நீக்கும் மேலும் கருப்பையை பலப்படுத்தும், மற்றும் மாதவிடாயை சரி செய்யும், இந்த கீரையை ஆண்கள் உண்டுவர ஆண்மையை அதிகரிக்கும் என சித்த மருத்துவ குணப்பாட நூல் கூறுகிறது.... இவ்வளவு மருத்துவ பயன்கள் கொண்ட இந்த கீரையை இனி ஒவ்வொருவரும் உணவில் சேர்த்துக் பயன்பெருவோம்.
N.Karthick-D.pharm
*நன்றி*