Showing posts with label சிறகு அவரை. Show all posts
Showing posts with label சிறகு அவரை. Show all posts

Winged Beans சிறகு அவரை

 Winged bean என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் இந்த காய்கறி தாவரம் கிழக்காசியாவில் பெரிதும் விரும்பி வளர்க்கப்படும் கொடி தாவரமாகும். இந்த தாவரத்தின் இலை அவரை போன்று இருப்பதால் இதை அவரை ரகமாக கருதி winged bean தமிழாக்கமாக சிறகு அவரை என்றும், இந்த காயிற்கு நான்கு பட்டை/பக்கங்கள் இருப்பதால் காரணப் பெயராக சதுர அவரை என்றும் குறிக்கப்படுகிறது.

Winged Beans


நாட்டு மருத்துவத்தில் செடியின் அனைத்து பாகங்களை குறிக்கும் விதமாக சமூலம் என்று வார்த்தையை பயன்படுத்துவர். இத்தாவரத்தின் அனைத்து பாகங்களும் வேரிலிருந்து செடியின் நுனி வரை அனைத்தும் மருத்துவ குணங்களை கொண்டிருப்பதால், கீழை நாடுகளில் அதிகமாக பயிரப்படுகிறது.


விதை மற்றும் கிழங்குகளைக் கொண்டு பயிர் பெருக்கம் செய்யலாம். கிழங்கையும் சமைக்கலாம்.


இது பல்லாண்டு தாவரமாகும். காய்ப்பு முடிந்ததும் கவாத்து செய்து செடியை பராமரித்து வந்தால் , உரிய நேரத்தில் காய்க்க ஆரம்பிக்கும். அப்படியே செடி பட்டு போனாலும், மண்ணில் உள்ள கிழங்கின் மூலமாக மழை வந்ததும் துளிர்ந்து வளரும்.


Cool climate crop என்று குறிக்கப்படும் தாவரம் ஒரு சம்பா ரக பயிராகும். ஆடிப் பட்டத்தில் விதைத்தால் நவம்பரில் காய்க்க ஆரம்பிக்கும்.

பட்டம் தப்பி பயிர் செய்தால் சம்பா பருவத்தில் காய்க்காமல் அடுத்த சம்பா பருவத்தில் தான் .காய்க்ரும்.

இதில் 5 ரகங்கள் உள்ளது.


பச்சை குட்டை

பச்சை நீளம்

ஊதா குட்டை

வரி குட்டை

நீண்ட நீள பச்சை ரகம்.