தாளிசாதி சூரணம் | தாளிசபத்திரி (Taxus baccata)

 தாளிசாதி சூரணம் 


தாளிசபத்திரி (Taxus baccata) என்பது இந்த மருந்தின் முக்கிய உட்பொருள்.


அது காட்டு லவங்க மரம். தாளிசபத்திரி அதிகம் இருப்பதால் இந்த மாத்திரைக்கு தாளிசாதி சூரணம் என்று பெயர். இந்த மாத்திரையில் இருக்கும் முக்கிய உட்பொருள்கள்: சுக்கு, மிளகு, அரிசித் திப்பிலி, லவங்கப்பட்டை, ஏலரிசி, மூங்கில் உப்பு, இன்னும் பல.


அளவோடு உட்கொள்ளலாம்


இந்தச் சித்த மருந்து பொடியாகவும் மாத்திரையாகவும் கிடைக்கிறது. சாதாரணச் சளியாக இருந்தால் ஒன்று, தொண்டையில் சளி கட்டியிருந்தால் சப்பிச் சாப்பிடுவதற்கு வடகம் என மாறுபட்ட வகைகள் உண்டு. இந்த மருந்து செரிமானத்துக்கும் துணைபுரியும். எதிர்க்களித்தல், வாயுப் பிரச்சினைகள் போன்றவற்றுக்கும் இந்த மருந்து நிவாரணமளிக்கும்.


தலைவலிக்கு அடுத்தபடியாகப் பலரையும் அடிக்கடிப் பிடித்தாட்டும் பிரச்சினையாக சளி, இருமலே இருக்கிறது. இந்தச் சளிக்கு தாளிசாதி சூரணம் சிறந்த நிவாரணம் தரும். வேளைக்கு இரண்டு மாத்திரைகள் என்ற வீதத்தில் மூன்று நாட்கள்வரை உட்கொள்ளலாம். 'இம்காப்ஸ்' எனப்படும் இந்திய மருந்து உற்பத்திக் கூட்டமைப்பின் தயாரிப்பு இந்த மருந்து. சித்த-ஆயுர்வேத மருந்தகங்கள், 'இம்காப்ஸ்' கடைகளில் கிடைக்கும்.


எந்த மருந்தையும் நாமே இஷ்டத்துக்கு உட்கொள்வது தவறு. சித்த மருந்துகளும் அப்படியே. அதனால் அளவோடு தாளிசாதி சூரணத்தை உட்கொண்டு, வளமோடு சளியை விரட்டலாம்.

பல் சம்மந்தமான பிரச்சனைகள் அனைத்தும் தீர எளிய மூலிகைபல்பொடி For all dental problems simple herbal toothpaste

 பல் சம்மந்தமான பிரச்சனைகள் அனைத்தும் தீர  எளிய  மூலிகைபல்பொடி



 தயாரிக்கும் முறை :-

🌿🍃🍀☘️🥗🌳☘️🍀🍃🌿


 பல்பொடி தயாரிக்க😁


 தேவையான பொருட்கள் :-


கிராம்பு பொடி                - 25 கிராம்

கடுக்காய்  பொடி           - 40

 கிராம்

ஆலம் பட்டை பொடி.    - 25

அக்ரகாரம் பொடி          -10 கிராம்

நாயுருவி வேர் பொடி  - 25 கிராம்

கல் உப்பு பொடி              - 10 கிராம்


இந்த பொருட்கள் அனைத்தும் நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் . இந்த மூலிகைகளை பற்றி 1 நிமிடம் பார்த்த பின்பு பல்பொடி தயாரிக்கும் முறை பற்றி பார்ப்போம்..


1 . கிராம்பு -


பற்றி அனைவருக்கும் தெரியும் ..பல்வலியை சரிசெய்து பற்களில் உள்ள கிருமிகளை அழிக்கும்.


2 . கடுக்காய் -


 அந்த காலத்தில் நம் முன்னோர்கள் கடுக்காய் பயன்படுத்தி தான் பெரிய பெரிய கட்டிடங்களை கட்டினார்கள் ..கடுக்காய் சேர்த்து கட்டப்பட்ட கட்டிடம் அவ்வளவு எளிதில் உடைபடாதாம்..கடுக்காய் வைத்து பல் துலக்க பல் வலிமை பெறும்.


3 . அக்ரகாரம் -


 அக்ரகாரம் வைத்து பல் துலக்க ஆடின பல் கூட ஆடாமல் நிற்கும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள் . மேலும் அக்ரகாரம் நம் உடலில் உள்ள நரம்பு களையும் வலுபடுத்த கூடியது ..அதுமட்டுமல்லாமல் பல் வலியையும் சரிசெய்ய கூடியது..


4. ஆலம்பட்டை


ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பது மூத்தோர் வாக்கு. ஆலமரப்பட்டை பற்களின் இறுகளை பலப்படுத்தும்.


5 . நாயுருவி வேர் -


 நாயுருவி பற்றி நாம் பல பதிவுகளில் பார்த்து உள்ளோம்.. நாயுருவி வேர் பற்களால் கடித்து பல் முழுவதும் பட்ட உடனே ஓரு சிறு கல்லை எடுத்து கடிக்க அந்த கல் உடைபடும் .. அந்த அளவுக்கு பற்களை உடனே வலுபடு்ததும் சக்தி இந்த நாயுருவிக்கு உண்டு.

முகவசீகரம் தன்மை அதிகரிக்கும்.


6. இந்துப்பு -


இந்துப்பு பற்றி தெரியாத நபர்களே கிடையாது . நம் முன்னோர்கள் உப்பை பயன்படுத்தி தான் பற்களை துலக்கினார்கள் ...


செய்முறை :-😀

ஆறு பொருட்களில் உப்பை மட்டும் தனியாக பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள் ... மற்ற மூலிகைகளை மேற்கூறிய அளவுகளில் கலந்து ஓரு கண்ணாடி பாட்டலில் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் ..காலை எழுந்தவுடன் இந்த பற்பொடியை சிறிது எடுத்து  பல் துலக்க ஆரம்பியுங்கள் ...

வாயில் தான் துவங்குது நம்ம ஆரோக்கியம்... தோழமைகளே...


ருதம்பரா யோகா கோவை🍁

கோணிபுளியங்காய் / கொடுக்காபுளி/ சீனிப்புளியங்காய் 90's Kids favorite fruit

 கோணிபுளியங்காய்

🌿🙏🌸🌼🍁🥒🥗🍉🥭🌿


30 ஆண்டுகளுக்கு முன் இந்த சுவையை உணரா நபர்கள் இல்லை...துவர்ப்பு இனிப்பு புளிப்பு கலந்த அற்புத சுவை....😋😋😋

ஆப்பிளை விட அதிக விலை கொடுக்காபுளி எனப்படும் சீனிப்புளியங்காய்

கோவை பெரியகடை வீதியில் மூலிகைகடைக்கு செல்லும் வழியில் இதை பார்த்ததும் வாங்கும் ஆசையில் விலையை கேட்டேன் கிலோ 250 ரூபாய் எனக்கூறினர். கலிபோர்னியாவின்

ஆப்பில்170.ருபாய் தான் .


🍋கிராமங்களில் பரவிகிடக்கும் இந்த மரம் இன்று நகரங்களில் எட்டா கனியாக இருக்கிறது.


👌ஆயுர்வேதத்தில் கொடுக்கா புளியின் மருத்துவ குணங்கள் நன்கு அறியப்பட்டு பரிந்துரைக்கப் படுகிறது.


🍅செரிமானம் மேம்படுத்தவும், கீல்வாதம் மற்றும் சில கருப்பை நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இது புண்களை குணப்படுத்தும்.


🍁வாத நோய் மற்றும் மூட்டு வலிக்கு மருந்தாகக் கொடுக்கப்பட்டுள்ளது. 


🌸நீண்ட நாள் நோய்வாய் பட்டு சரியானதும் உடல் சூட்டில் பேதி ஆகாமல் இருக்க கொடுக்காபுளி தரப்படுகிறது. இது ஒரு சிறிய புளிப்பான பழம். 


🍒உடல் எடை குறைய மிகவும் அற்புதமான மருந்தாக ஆயுர்வேதம் மற்றும் நாட்டுப்புற மருத்துவம் பரிந்துரைக்கிறது. 


🌿குடல் அழற்சி, கல்லீரல் பெருங்குடல் தொடர்பான எந்த பிரச்சனைக்கும் இது நல்ல மருந்து.


இயற்கை வாழ்வியல் வழி பயணிப்போம்....


🍁பதஞ்சலிஈஸ்வரன்

ருதம்பராயோகாகோவை