Showing posts with label herbal toothpaste. Show all posts
Showing posts with label herbal toothpaste. Show all posts

பல் சம்மந்தமான பிரச்சனைகள் அனைத்தும் தீர எளிய மூலிகைபல்பொடி For all dental problems simple herbal toothpaste

 பல் சம்மந்தமான பிரச்சனைகள் அனைத்தும் தீர  எளிய  மூலிகைபல்பொடி



 தயாரிக்கும் முறை :-

🌿🍃🍀☘️🥗🌳☘️🍀🍃🌿


 பல்பொடி தயாரிக்க😁


 தேவையான பொருட்கள் :-


கிராம்பு பொடி                - 25 கிராம்

கடுக்காய்  பொடி           - 40

 கிராம்

ஆலம் பட்டை பொடி.    - 25

அக்ரகாரம் பொடி          -10 கிராம்

நாயுருவி வேர் பொடி  - 25 கிராம்

கல் உப்பு பொடி              - 10 கிராம்


இந்த பொருட்கள் அனைத்தும் நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் . இந்த மூலிகைகளை பற்றி 1 நிமிடம் பார்த்த பின்பு பல்பொடி தயாரிக்கும் முறை பற்றி பார்ப்போம்..


1 . கிராம்பு -


பற்றி அனைவருக்கும் தெரியும் ..பல்வலியை சரிசெய்து பற்களில் உள்ள கிருமிகளை அழிக்கும்.


2 . கடுக்காய் -


 அந்த காலத்தில் நம் முன்னோர்கள் கடுக்காய் பயன்படுத்தி தான் பெரிய பெரிய கட்டிடங்களை கட்டினார்கள் ..கடுக்காய் சேர்த்து கட்டப்பட்ட கட்டிடம் அவ்வளவு எளிதில் உடைபடாதாம்..கடுக்காய் வைத்து பல் துலக்க பல் வலிமை பெறும்.


3 . அக்ரகாரம் -


 அக்ரகாரம் வைத்து பல் துலக்க ஆடின பல் கூட ஆடாமல் நிற்கும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள் . மேலும் அக்ரகாரம் நம் உடலில் உள்ள நரம்பு களையும் வலுபடுத்த கூடியது ..அதுமட்டுமல்லாமல் பல் வலியையும் சரிசெய்ய கூடியது..


4. ஆலம்பட்டை


ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பது மூத்தோர் வாக்கு. ஆலமரப்பட்டை பற்களின் இறுகளை பலப்படுத்தும்.


5 . நாயுருவி வேர் -


 நாயுருவி பற்றி நாம் பல பதிவுகளில் பார்த்து உள்ளோம்.. நாயுருவி வேர் பற்களால் கடித்து பல் முழுவதும் பட்ட உடனே ஓரு சிறு கல்லை எடுத்து கடிக்க அந்த கல் உடைபடும் .. அந்த அளவுக்கு பற்களை உடனே வலுபடு்ததும் சக்தி இந்த நாயுருவிக்கு உண்டு.

முகவசீகரம் தன்மை அதிகரிக்கும்.


6. இந்துப்பு -


இந்துப்பு பற்றி தெரியாத நபர்களே கிடையாது . நம் முன்னோர்கள் உப்பை பயன்படுத்தி தான் பற்களை துலக்கினார்கள் ...


செய்முறை :-😀

ஆறு பொருட்களில் உப்பை மட்டும் தனியாக பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள் ... மற்ற மூலிகைகளை மேற்கூறிய அளவுகளில் கலந்து ஓரு கண்ணாடி பாட்டலில் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் ..காலை எழுந்தவுடன் இந்த பற்பொடியை சிறிது எடுத்து  பல் துலக்க ஆரம்பியுங்கள் ...

வாயில் தான் துவங்குது நம்ம ஆரோக்கியம்... தோழமைகளே...


ருதம்பரா யோகா கோவை🍁