அனைவருக்கும் வணக்கம் 🙏
நாளை முதல் நாம் எல்லோரும் இணைந்து இந்த இயற்கை வாழ்வியல் பயணத்தை செய்யலாம்.....செய்யமுடியாதளவு இந்த வாழ்வியல் கடினமான விஷயங்கள் இல்லை,
ஒரு 50 வருடத்திற்கு முன் நம் முன்னோர் வாழ்ந்த வாழ்வியல் தான், அன்று மருத்துவர்கள் நம்மை தேடி வந்தார்கள், இன்று நாம் அவர்களை தேடி போகிறோம் ( வரவைக்கிறார்கள் ).....இந்த 30 நாள் பயணம் நிச்சயமா மாற்றம் கொடுக்கும்,
கழிவு நீக்கம்....
இதைபற்றி கொஞ்சம் பேசலாம்....தினமும் பல் விலக்கி, மலம் நீக்கி, குளித்தால் இன்று உடல் கழிவுகளை போயிடுச்சு என நினைக்கிறோம், ஆனால் முழுமை இல்லை என்கிறது இயற்கை வாழ்வியல்....
உடல் கழிவுகள்
கண் கழிவுகள்
மூக்கு கழிவு
வாய் கழிவு
சிறுநீர்
மலம்
வியர்வை
காதுகழிவு
மூச்சுகாற்று ( வெளிமூச்சு )
சளி
பித்தநீர்
தும்மல்
தலைகழிவு ( கெட்டநீர் )
இரைப்பை கழிவு
நீர்தாரா.... ( பெண்கள் )
இவையெல்லாம் கழிவு நீக்கங்கள், இதைபற்றி நாம் இந்த 5 நாட்களில் பார்க்கப்போகிறோம்......
ஏன் கழிவுநீக்கம்?
நம் முன்னோர்கள் வாழ்வில் கழிவுநீக்கம் அன்றாட வாழ்வியல், ஆனால் இன்று அதை நாம் நமக்கு தேவையானபடி மாற்றிவிட்டோம்,.....
கழிவுகளின் தேக்கம் பல நோய்களுக்கு காரணமாகிறது, கழிவு நீக்கம் சரியா இருந்தா இனிவரும் புதுபுது நோய்களுக்கு பயப்படாம எதிர்த்து நிற்கலாம், உடலும் குடலும் சுத்தமா இருந்தால் மனம் சுத்தமாகும், மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.....
முதலில் நாம் நாளை செய்யபோவது இரைப்பை சுத்தம்
கழிவுகளின் தேக்கமே நோய்
கழிவு நீக்கமே ஆரோக்கியம்