தினம் ஒரு மூலிகை இன்று பாதாளமூலி மறுபெயர் சப்பாத்திகள்ளி
வட்ட வடிவ சதைப் பற்றான கொத்துக் கொத்தான மொழிகளை உடைய தண்டுகளையும் மஞ்சள் நிற மலர்களையும் புறப்பரப்பில் முள்ளுள்ள சிவப்பு நிற உண்ணக் கூடிய கனிகளையும் உடய கள்ளியினம்.
தண்டு வேர் பழம் ஆகியவை மருத்துவப் பயனுடையவை நஞ்சு நீக்குதல் வெப்பு அகற்றுதல் ஆகிய குணங்களை உடையது சதையை சிறு சிறு துண்டுகளாக்கி மிளகுத்தூள் சேர்த்து 5 முதல் 10 துண்டுகள் வரை சாப்பிட எட்டி வாளம் அலரி சேங்கொட்டை நாவி ஊமத்தை ஆகியவற்றின் நஞ்சு போகும் வெப்ப வயிற்று வலி அடிக்கடி மலம் கழித்தல் கிராணி சத்தத்துடன் போகும் உஷ்ணபேதி முதலியன தீரும் வேரை பொடி செய்து 10 கிராம் கொடுத்துவர பூரான் கடி வண்டுகடி நஞ்சுகள் முறியும் தேள்கடிக்கு கொடுத்து காயை வாட்டி கடி வாயில் வைக்க குடைச்சல் தீரும்
பழச்சாறில் செய்த மணப்பாகு சாப்பிட்டு வர கோடை கால வெப்பநோய் தீரும் முள் நீக்கி விளக்கெண்ணெயில் வாட்டி முடக்கு வாதத்திற்கு வைத்துக் கட்டலாம் ஒத்தடம் கொடுக்கலாம்.
இந்த வகை "காக்டஸ்" சிறிய அளவில் வீட்டுத் தோட்டத்தில் ஒரு மூலையில் வளர்க்க முடியுங்க.
உள்ளூர் டிராகன் புரூட்
நன்றி ASNசாமி
அங்கக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை மற்றும் மூலிகை பண்ணை ஆதனூர்...
Elaya Perumal: இதன் முற்கள் மிகவும் கடினமாகவும் அதிக வலி ஏற்படுத்த கூடியதும் கூட, எனவே இதை மாடித்தோட்டத்தில் வளர்க்கும் போது குழந்தைகள் அனுகாத இடம் பார்த்து வைக்கவும்... மேலும் இதை கையாளும் போது மிகுந்த கவனத்துடன் செயல்படவும்...
Thamizh Priya: நல்ல பதிவு முன்பு சாலை ஓரங்களில் அதிகளவில் காணப்பட்ட தானாக வளர்ந்த கள்ளிச்செடி மனித தவறுகளால் அழிந்து அரிதாகி வருகிறது இதுபோன்ற பதிவுகள் இதன் மருத்துவ குணம் தெரிந்து கொண்டு வீட்டுத்தோட்டத்தில் வளர்க்க தூண்டும் . இந்த செடியை வளர்ப்பது எளிது செடியிலிருந்து ஒரே ஒரு இதழ் பகுதியை ஒடித்து வந்து மண்ணில் ஊன்றி வைத்தாலே வளர்ந்து விடும் மண்ணில் ஈரப்பதம் மட்டும் குறைவாக இருக்க வேண்டும்.சிறு வயதில் வளர்த்துள்ளேன் அம்மா கள்ளிச்செடி வீட்டில் வளர்க்க கூடாது என்று பிடுங்கி எரிந்து விட்டார்கள்...