மரங்கள் மண்ணின் வரங்கள்save trees

 🌿🌳இனிய வணக்கம்ங்க.. இன்றைய தினம் இஎஸ்ஐ மருத்துவமனை கல்லூரி முதல்வர் மற்றும்  கண்காணிப்பாளர், தலைமையில்  மருத்துவ மனை உள்பகுதியில்


 மூலிகை வனம்🌵🌿🌳


அமைக்க இடம் ஒதுக்கப் பட்டு நிகழ்வு துவக்கப்பட்டது

ருதம்பரா பவுண்டேசன் நிறுவனர் ஶ்ரீபதஞ்சலிஈஸ்வரன் நிகழ்வுகுறித்து கூறுகையில் பசுமையை அதிகரிக்கும் விதமாக மருத்துவ குணம் மிகுந்த மரங்களை மருத்துவமனை சுற்றிலும் ஆயிரம் மரக்கன்றுகளை நடும்பணி துவக்கி இருப்பது மகிழ்வை தருவதாகவும் நிகழ்வினை ருதம்பரா பவுண்டேசன் சார்பில் நிர்வாகிகள் கேபிள் மணி, டிரீம்டாட்ஸ் சுகுமார், மரம்பொன்னுசாமி,வள்ளிக்கும்மி  குழுவினர் இணைந்து ஒருங்கிணைத்தார்கள்


மரங்கள் மண்ணின் வரங்கள்🌿🙏

🌱🪴🌳🌲🌴🎋🌴🌲🌳🪴🌱

 




சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவை இஎஸ்ஐ மருத்துவ மனை ஆயுஷ் சார்பில் யோகா தினம் கொண்டாடப்பட்டது 21/06/2021

 🌿🙏🌸சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவை இஎஸ்ஐ மருத்துவ மனை ஆயுஷ் சார்பில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்வை டாக்டர் தமிழ்ச்செல்வன் அவர்கள் துவக்கி வைத்தார் மருத்துவ மனை கண்காணிப் பாளர் டாக்டர் ரவிக்குமார் அவர்கள் தலைமையேற்க நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கோவை ருதம்பரா பவுண்டேசன் நிறுவனர்


🌿🌼யோகா குருஜி ஶ்ரீ பதஞ்சலிஈஸ்வரன்

கலந்து கொண்டு யோகபயிற்சி, ஆற்றல் மிகுந்த சுவாச பயிற்சிகள், முத்திரை களின் நன்மைகள் குறித்தும் இன்றைய வாழ்வியல் சூழலில் நம்மை பாதுகாக்கும் ஆரோக்கியமான இயற்கை  உணவுமுறைகளை நிகழ்வில் கலந்து கொண்ட மருத்துவர்கள்,செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆயுஷ் யோகா மருத்துவர் நந்தினி மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தார் ஒருங்கிணைத்தார்கள்


( நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு அடுப்பில்லா சமையல் முறையில் செய்யப்பட்ட


🌿லெமன்புதினா ஜுஸ்

🥗வெஜ் சாலட்

🍵கவுனி அரிசி நெய்ப்புட்டு

👍எனர்ஜிட்ரைபுரூட்ஸ் லட்டு

ஆகிய சத்துமிகும்  உணவுவகைகளை செய்முறையுடன் ருதம்பரா பவுண்டேசன் சார்பில் வழங்கப்பட்டது.)


நன்றி🌿🌼🙏🌸🌳🪴🌷

எறும்பு தொல்லையா இந்த இயற்கை முறையை பயன்படுத்தி பாருங்கள் Get-rid off ants

 எறும்பு அதிகம் இருக்கும் பட்சத்தில் மஞ்சள் தூள் கரைசல் ஒன்று அல்லது இரண்டு நாள் விட்டு தொடர்ந்து தெளித்து வரவும்.


மூன்று தெளிப்பிற்கு ஒரு முறை வெற்றிலைச் சுண்ணாம்பு பட்டாணி அளவு கலந்து தெளிக்கவும்.


எறும்பு நீங்கிய நிலையில் 3/4 நாட்கள் இடைவெளியில் எல்லாச் செடிகளுக்கும் தெளித்து வரவும்.


இந்த கரைசல் பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும்.


வரும் முன் காப்பது சிறந்தது.