வெள்ள கீரை/வள்ளக்கீரை / வள்ளல் கீரை / வாட்டர் ஸ்பினச் Water Spinach Ipomoea aquatica health benefits

வணக்கம்,


 இந்த கீரை  யாருக்காவது கிடைத்தால் விடாதிர்கல். இந்த கீரை நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே உணவில் சேர்த்து வந்த ஒரு  வகை கீரை தான். இப்போது இந்த கீரையை பற்றி யாருக்கும் அந்த அளவு தெரியாத காரணத்தால். இந்த கீரையை உணவில் யாரும் அதிகமாக பயன்படுத்துவது கிடையாது...

இந்த கீரையின் பெயர் வெள்ள கீரை/வள்ளக்கீரை அல்லது வள்ளல் கீரை இதனை ஆங்கிலத்தில் வாட்டர் ஸ்பினச் என்று அழைக்கப்படுகிறது. 

இதில் அதிக அளவில் புரதம், நார்சத்து,கணிமங்கள், மற்றும் வைட்டமின்கள் ஆகியன உள்ளன.

இதன் மருத்துவ குணங்கள் என்று எடுத்துக்கொண்டால் -  இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கும், இது பெண்களுக்கு பால்சுரப்பை அதிகப்படுத்தும், இதன் கீரையை 1 மண்டலம் உணவில் சேர்த்து வர பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுத்தலை நீக்கும் மேலும் கருப்பையை பலப்படுத்தும், மற்றும் மாதவிடாயை சரி செய்யும், இந்த கீரையை ஆண்கள் உண்டுவர ஆண்மையை அதிகரிக்கும் என சித்த மருத்துவ குணப்பாட நூல் கூறுகிறது....  இவ்வளவு மருத்துவ பயன்கள் கொண்ட இந்த கீரையை இனி ஒவ்வொருவரும் உணவில் சேர்த்துக் பயன்பெருவோம். 

N.Karthick-D.pharm         

*நன்றி* 

 

விதைகள் பற்றிய ஒரு பதிவு.....

 விதைகள் பற்றிய ஒரு பதிவு.....


இன்றைய சூழ்நிலையில் நாட்டுவிதைகளை தேர்ந்தெடுத்து விதைப்பது, விதைத்து அதிலிருந்து விதை எடுத்து, மறுவருட விதைப்புக்கும், நண்பர்களுக்கு பகிர்வதும் மிக அவசியமான ஒவ்வொரு தமிழரின் கடமையாகும், வரும் காலங்களில் நாம் விளைவிக்கும் காய்கறிகளிலிருந்து விதை எடுக்க முடியுமா என்பது கேள்வி குறியே,......

உதாரணத்திற்கு விதையில்லா பப்பாளி.....அடுத்து கிராமங்களில் முதல் வருடம் விதைத்த பாசிபயறோ, உளுந்தோ எடுத்து வைத்து மறுவருடம் விதைத்தால் வருவதில்லை, புதியதுதான் வாங்கி விதைக்கிறோம் என்று சொல்றாங்க, நிலமை இப்படி இருக்க......நம்மால் முடிந்த சில விதைகளை காக்கலாம்.....எல்லாவற்றையும் ஒருவரால் செய்யமுடியாது, உதாரணத்திற்கு ஒருவர் ஒரு தக்காளி வகைகளை தேர்ந்தெடுக்கலாம்.......வளர்த்து விதை எடுத்து எல்லோருக்கும் கொடுக்கலாம், தக்காளி வகையா இவரிடம் கிடைக்கும் என்பதுபோல ......

நிறைய நண்பர்கள் மாடிதோட்டம், விவசாயம் செய்றாங்க, விதைபகிர்வு என்பது குறைவு, கத்தரிக்காயோ, தக்காளியோ அறுவடை படம் போடும்போது, விதை எப்படி தேர்ந்தெடுத்தீங்க,  அறுவடை முடிந்து விதை எப்படி சேகரிச்சீங்க என்று பதிவு போடலாம்......


குழுவில் நிறைய அதிர்ப்தியாளர்கள் இருக்காங்க, அதாவது ஒருசிலரே விதைகள் கொடுத்துக்கறாங்க, வாங்கிக்கறாங்க, நமக்கு யாரும் கொடுப்பதில்லை என்று, விதை வேனும்னு நினைக்கறவங்க, தகுந்த செயல்பாடுகளை( தோட்டம் ) பதிவு செய்யும்பட்சத்தில் விதை உங்களுக்கு நிச்சயமா கிடைக்கும்......

அப்படி கிடைக்கவேண்டும்னா குழுவில் உள்ள விதை பெற்ற நண்பர்கள் அவர்கள் தோட்டங்களில் உள்ள காய்கறி விதைகளை எப்படி எடுத்து பத்திரபடுத்தி கொடுக்க என்பதை தெரிந்துகொண்டு பதிவு செய்ங்க.....முடிந்தா தபாலில் அனுப்புங்க, நிறையபேருக்கு அனுப்ப சிரமமா இருக்கா மொத்தமா குழு அட்மின்களுக்கு தெரிவியுங்க, என்ன செய்யலாம்னு ஆலோசனை கேட்டு தேவையுள்ளவங்களுக்கு அனுப்பிடலாம், இல்லேனா சுற்றியுள்ளவர்களை நேரில் வந்து வாங்க சொல்லலாம்......


ஒவ்வொரு அறுவடை எடுக்கும் போது விதை எப்படி எடுக்க என்று சொன்னால் நிறைய நண்பர்கள் அதை தெரிந்துகொண்டு பயனடைய ஒரு வாய்ப்பு கிடைக்கும், 

ஏன் சொல்றேனா தக்காளி விதை ஒரு விதமா எடுக்கனும், வெண்டைக்காய் ஒருவிதமா எடுக்கனும், புளிச்சகீரை, கனகாம்பரம் பூ ஒரு விதமா எடுக்கனும்.....

ஆடியில் விதைத்து ஓரளவு செடிகள் பலன்கொடுக்க ஆரம்பித்திருக்கும், அடுத்து வரும் விவாதங்கள் விதை பற்றியதாக இருந்தால் சிறப்பாக இருக்கும்....🙏💐👍

மிளகாய் ரகங்கள் Some rare varieties of chilly


காரம் மிகுந்த புல்லட் மிளகாய். 



 தட்டையாக படர்ந்து விரிந்து வளரும் புல்லட் மிளகாய் செடி.

கிளைகள் மேல் நோக்கி வளராமல் தட்டையாக பக்கவாட்டில் பரந்து வளருவதால் அதிக பூக்கள் பூத்து காய்களும் அதிகம் கிடைக்கிறது. Flat canopy plant.

நீளமான கருப்பு மிளகாய்.  நல்ல மனம் அதிக காரம் மற்றும் அதிக காய்ப்பு. இத்துடன் கருப்பு ரகங்கள் மட்டும் 12.