ஒரு கைப்பிடி அல்லது 25 கிராம் காய்ந்த அதே சமயம் வறுக்காத நிலக்கடலை சிறிதளவு நீரில் ஒரு நாள் ஊற வைக்கவும்.
ஊறிய பின் அதன் நீருடன் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த நிலக்கடலையை அன்று அரிசி கழுவும் நீரில் ஊற்றி நொதிக்கவிடவும். தினமும் மொத்தம் 10 நாட்களுக்கு அரிசி கழுவும் நீரை நிலக்கடலை கரைசலில் ஊற்றிக் கொண்டு வரவும்.
பருப்பு கழுவும் நீர், பால் பாத்திரம் கழுவும் நீரையும் சேர்க்கலாம்.
பத்து நாட்கள் நொதித்த பின் கரைசலை ஐந்து மடங்கு அல்லது சற்று கூடுதலான நீரில் கரைத்து நிலத்தில்/மண்ணில்/தொட்டியில் ஊற்றவும்.
நிலக்கடலை ஊற வைத்து அரைப்பதாலும் நொதிக்க விடுவதாலும் கடலையில் உள்ள எண்ணை சத்தை குறைக்க உதவி செய்யும்.
திறன் மிகு நுண்ணுயிரி EM பல வகையில் தயார் செய்யலாம். அதில் ஒரு முறை அரிசி கழுவும் நீரையும் பாலையும் சேர்த்து செய்வது. இந்த முறையில் எந்தவித செலவில்லாமல் அரிசி மற்றும் பால் பாத்திரம் கழுவும் நீரை பயனுள்ள வகையில் பயன்படுத்துகிறோம்.
4 - 7 நாட்களில் செடிகளில் மாற்றத்தைக் காணலாம்.
பூக்கள் அதிகம் பிடித்து காய்கள் நன்கு பெருத்து வரும். தோராயமாக ஒன்னேகால் மடங்கிற்கு மேலாக பெரிதாக வளரும். பூச்செடிகளில் வரும் பூக்களும் அவ்வாறே வரும்.
மக்கு சத்து நிறைந்த மண்ணாக இருப்பின் இன்னும் மிக நல்ல பலனை தரும்.
15 நாள் இடைவெளியில் பயன்படுத்தவும்.
திருப்பூர் பிரியா தரும் கூடுதல் தகவல்:
நிலக்கடலையைத் தவிர பூச்சரித்த அல்லது பழைய தேவைப்படாத பருப்பு வகைகள் கைவசம் இருந்தாலும் மேற்சொன்ன சொன்ன முறையில் தயாரித்து பயன்படுத்தலாம். மற்ற பருப்பு வகைகளில் எண்ணைப் பதம் இருக்காது என்பது ஒரு கூடுதல் தகவல்.
Soak a handful or 25 grams of dried unpeeled peanuts in a little water for a day.
After soaking, grind it in a mixer with water.
Pour the ground peanuts over the rice washing water and let it ferment. Drain the rice wash water daily for a total of 10 days and bring to a boil.
Add lentil wash water and milk dishwashing water.
After ten days of fermentation, the solution is diluted five times or slightly more with water and poured into the ground / soil / pot.
Peanuts can be soaked, ground and fermented to help reduce the oil content of the peanuts.
Efficient microbial EM can be prepared in many ways. One of them is to wash the rice with water and milk. In this method we use rice and milk dishwashing water effectively at no cost.
You can see the change in the plants in 4 - 7 days.
The flowers are large and the pods are well inflated. Grows approximately one-fold larger. The same goes for the flowers that come in bloom.
If the soil is nutritious, it will still give very good results.
Use at 15-day intervals.
Additional Information from Tirupur Priya:
Apart from groundnuts, plastered or old unwanted pulses are available but can be prepared and used in the above manner. An additional information is that other legumes do not contain oil.