Showing posts with label நுனா காய். Show all posts
Showing posts with label நுனா காய். Show all posts

மஞ்ச நத்தி எனும் நுனா காய் சட்னி Morinda sp.

 மஞ்ச நத்தி எனும் நுனா காய் சட்னி  இன்று 😍😍



ஹைபீரிடு எனும் மாய உலகில் நாட்டு ரகங்களை சாப்பிடுவதே சவாலாக உள்ளது  அதனால்தான் இதுபோன்று என் தேடல் 



காயை பிஞ்சாக பறித்து சிரிது சிரிதாக நறுக்கி தண்ணீரில் போடனும் இல்லைனா கருத்திடும் 



பத்து பிஞ்சிகளுக்கு மேல் போட வேண்டாம் காய்முற்றியதாக இருந்தால் துவர்ப்பும் கசப்பும் அதிகமாகிடும்


அப்புரம்  விதைகள் நாம் சாப்பிடும் போது  தொந்தரவாக இருக்கும் 


 நல்லென்னை விட்டு வதக்கிய பிறகு 



தேங்காய் சட்னி செய்வது போல் செய்து கொள்ளலாம் புளி சேத்திக்க தேவையில்லை 


சரி இதன் மருத்துவ பயன் பார்போம்ங்க...


உடல் வெப்பத்தை தனிக்கும் கல்லீரல் மண்ணீரல் ஆகியவைகளை சுத்தபடுத்தும்


 சக்கரை அளவை கட்டுபடுத்தும் இரும்பு சக்தியை அதிகரிக்கும்ங்க வயிற்று புன் ஆற்றிடும்ங்க


மூட்டு வலி போக்கி புற்று நோய் வராமல் தடுக்கும் 


உடலில் நோய் எதிர்பு திறனை அதிகபடுத்தும் 


கொஞ்சம் துவர்பு கசப்பு சுவையுடன் தான் இருந்தது சாப்பிடலாம் 


உணவை ருசிபார்து பகிற்ந்தது  


K. M. A. Dhanapal மரங்களை நேசிப்பவன் 


இனைந்தே பயணிப்போம் மரங்களுடன்

மஞ்சணத்தி முழுத்தாவரமும் கார்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. நோயினால் தளர்ந்த உடலை ஆரோக்கியமாக்கும்; உடல் வெப்பத்தை அதிகரிக்கும்.


 இலை, காய், பழங்கள், வீக்கம் கட்டிகளைக் கரைக்கும். மாதவிலக்கை தூண்டும். உடல் வெப்பத்தை கட்டுப் படுத்தும். பட்டை கரப்பான், புண்கள், கழலை போன்றவற்றை குணமாக்கும். வேர், கழிச்சலுண்டாக்கும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம், கழிச்சல் ஆகியன தீர 5மஞ்சணத்தி இலைகளைப் பசுமையானதாகச் சேகரித்து நீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இவற்றை ஒன்றிரண்டாக நசுக்கி ½ லிட்டர் தண்ணிரீல் இட்டுக் காய்ச்சி குடிநீர் செய்து கொண்டு தினமும் காலை மாலை வேளைகளில் 20 மிலி வீதம் உள்ளுக்கு கொடுக்க வேண்டும்.


புண்கள், சிரங்குகள் குணமாக மஞ்சணத்தி இலையை அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூச வேண்டும்.


பல் சொத்தை குணமாக முதிர்ந்த மஞ்சணத்தி காய்களை சேகரித்து உப்பு நீரில் ஊற வைத்து வெயிலில் காய வைத்து சுட்டு கரியாக்கி சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த தூளால் பல் துலக்கி வரவேண்டும்.


பேதியாக 10 கிராம் மஞ்சணத்தி வேரை நசுக்கி ½ லிட்டர் நீரில் போட்டு ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.


குழந்தை மருத்துவத்தில் மஞ்சணத்தி: 5 மஞ்சணத்தி இலை, ஒரு கொத்து வேப்பங்கொழுந்து, 2 கிராம் சுக்கு, ஒரு தேக்கரண்டி ஓமம் எடுத்துக் கொண்டு முதலில் மஞ்சணத்தி இலை, வேப்பங் கொழுந்தை வதக்கி, இதனுடன் சுக்கு, மிளகு, ஓமத்தை நசுக்கி, 1/2 லிட்டர் தண்ணீர் விட்டு  ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 3 தேக்கரண்டி அளவு உள்ளுக்கு கொடுக்க அஜீரணத்தால் ஏற்படும் காய்ச்சல் குணமாகும்.


5 மஞ்சணத்தி இலை, ஒரு கொத்து வேப்பங்கொழுந்து இவற்றை வதக்கி, இதனுடன் ஒரு தேக்கரண்டி சீரகம் ஒரு தேக்கரண்டி ஓமம் ஒரு சிட்டிகை பொரித்த பெருங்காயம் சேர்த்து ½ லிட்டர் தண்ணீரில் இட்டு ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி காலை மாலை இரு வேளைகள் வேளைக்கு 2 தேக்கரண்டி அளவு உள்ளுக்கு கொடுக்க வயிற்று உப்புசம் குணமாகும்.

Common Names in Different Languages (Source: India Biodiversity )

  • English
    Morinda tree
  • Hindi
    औछ Auch,
    आल Aal
  • Kannada
    ಮಡ್ಡಿ Maddi
  • Konkani
    बारतोंडी Bartondi
  • Malayalam
    Manjapavitta,
    Kattapitalavam,
    Pavitta,
    മഞ്ഞപ്പാവട്ട Manjappaavatta,
    Manjanathi
  • Marathi
    बारतोंडी Bartondi
  • Oriya
    Pindra
  • Others
    Indian Mulberry,
    Morinda,
    Noni,
    Togari Wood Of Madras
  • Sanskrit
    अक्षिकिफल Akshikiphala,
    अच्युत Achyuta
  • Tamil
    மஞ்சணாறி Manchanari,
    நுணா Nuna
  • Telugu
    మడ్డి Maddi,
    తొగరు Togaru
  • Urdu
    Togar Mughalai