108 நாள் பயிற்சி முடிந்தவரை சிறப்பாக முடிந்தது

 108 நாள் பயிற்சி முடிந்தவரை சிறப்பாக முடிந்தது 


மீன்டும் 108 நாள் தொடர்ந்தால் நம் வாழ்கை நடைமுறை பழக்கம் ஆகிடும் என நினைக்கிறேன் 


நான் பல்விளக்குவது மாறிடிச்சி  குளிப்பது மாறீடீச்சி 


சூரிய வெளிச்சம் உள்வாங்குதல் 


சாப்பிட்டா இப்போதெல்லாம் வெற்றிலை போடதோனூது இன்று மதியம் கூட வெற்றிலை போட்டேன் 


குளிப்பதில் மிக பெரிய மாற்றம் சோப்பு சேம்பு போட்டு குளீப்பாதே இல்லை 


பப்பாளி தயிர் என அவ்வப்போது எடுத்து கொள்கிறேன் 


அப்புரம் அதிகாலை தூக்கம் தெளிகிறது அலாரம் வச்சு எழுந்தது போய் இப்போ சாதரணமாகவே எழமுடிகிறது 


சாப்பிடுவதை மென்று சாப்பிடுகிறேன் கூடுமான வரை அரிசியை தவிர்த்து சிருதானியங்களை நாடிவிட்டேன் 


பேரிச்சை முந்தரி நேந்திரம் போன்றவைகள்சினாக்ஸ்சாக மாறிவிட்டது 


நைட்டு கொசுவத்தி இல்லை மின் விசிரி இல்லை தூக்கம் வருகிறது 


காலை மாலை இருவேளையும் மலம் கழிக்கிறேன் 


முளைகட்டிய தானியம் நிறை சாப்பிட சொல்லுது


கடுக்காய் தேனீர் சாப்பிடுகிறேன் மற்ற நேரங்களிலும் 


தெனை சாமை கஞ்சி இப்பலாம் பிடிக்கிது


பல் விளக்கும் போது மேல் கீல் உள் பூராவும் விரலால் தேய்து விடுகிறேன் 


பல்பொடி கடுக்காய் தண்ரிகாய் கொண்டு செய்தது 


இனி பேஸ்டு என்றஒன்றே தேவையில்லை 


அப்புரம் நல்லஎன்னை வாய்கொப்பலிப்பு இப்போ பலக்க மாகிடத்து 


கீலா நெல்லி இலைகளை எப்போதாவது பார்த்தால் சாப்பிடுவது கொஞ்சமா


மூக்கு கழுவதல் இரண்டூ முறை செய்தேன் 


மண் குளியல் சொல்ல வே தேவையில் மூஞ்சும் முடியும் நைசாக இருக்கூம் வாரத்தில் இரண்டூ முறையாவது  மண் குளியல் தான் 



சனிக்கிழமை தோரும் என்னை குளியல்தான் இதுவும்  வாழ்கையின் நடைமுறையாகியது 


நீராவி குளியல்நானே அவ்வப்போது செய்கிறேன் 


அப்புரம் நீர் சமயளில் என்னை கவர்நது பண்ணீர ரோசா தான் மனம் நிம்மதியாஇருக்கு தண்ணீர்குடித்த நாள் முளுவது ம் 


அப்புரம் வில்வம் இல்லை தண்ணோர் செம்ங்க


பழ உணவு இப்போது தினமும் நைட்டில் சாப்பிடசொல்லுது அதும் நேந்திரம் சிப்ஸ் படுக்கும் போது 


சாப்பிட்டு தூங்கினா அட அட செம்ம துக்கம்ங்க


கீர்பயிர்சில கேரட் கீர்நான் செம்ம நா சும்மா இருக்கும்போது போட்டுசாப்பிடுரேன்


நீர் காய்கரி சாலட் கொஞ்சம் எனக்கு சாப்பிடமுடில


சமைக்காத கீரை சொல்வா வேனும் மென்றே தின்னுட்டேன் 🥰🥰


இப்போது நெல் வயல் பக்கம்காலை நேரத்தீல் போனா நானே பிச்சி சாப்பிடுரேன் 


சிருதானிய கஞ்சி எனக்கு காலை நேரம்ணா செம்மையா இருக்கு நைட்டும்சாப்பிட்டேன் 


இனிமே காலை உணவாக எடூத்துக்க போரேன்


ஆகமொத்தம் உடல் மொழி நமக்கு புரிந்தால் 


ஆரோக்கியம் பற்றிய கவளையே இல்லை 


மீன்டும் தொடரனும் 108 நாள் பயிற்சி இதுவே என் ஆசை மகிழ்கிறேன்


நான் டாக்டரை நான் தேடி போகபோவதில் 


என் உடல் எனும் மருத்துவர் என்னுடன் இருக்கும் போது 


என்னை எந்த நோயும் தாக்காது வாய்மூக்கு வழி வந்த நோய்களை  ஆசன வாய் வழியாக அனுப்பி விடுவார் என் உடம்பு எனும் மருத்துவர் 




வொழ்க வளமுடன் நலமுடன் 


இனைந்தே பயணிப்போப் இயற்கை வாழ்வியலோடு

108 நாள் பயிற்சி அடிப்படை பயிற்சி.

 அனைவருக்கும் வணக்கம் 🙏


108 நாள் பயிற்சி அடிப்படை பயிற்சி...


அடுத்து நாம பார்க்கப்போறது,  108 நாளில் சொன்ன ஒவ்வொரு பயிற்சியையும் 21 நாள் செய்யப்போறோம்.....


அதில் முதலில் செய்யப்போவது,  தந்த சுத்தி......


தந்த சுத்திஎன்றால் என்ன னு நம் குழுவில் அனைவருக்கும் தெரியும் பல் விலக்கறது தான் தந்த சுத்தி......


என்னடா குழந்தையா இருக்கும்போதிருந்து பல் விலக்கிறோம்,  இவங்க என்ன புதுசா சொல்லப்போறாங்க....னு நீங்க நினைக்கிற mind voice கேக்குது......


இந்த பயிற்சியில், பல் சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்பது உறுதி......


சரி செய்யறோம் னு சொல்விட்டா,


* போட்டோ எடுத்து குழுவில் போடனும்


* தினமும் பதிவு செய்யனும்


எதுக்கு வம்பு னு நினைக்காதீங்க....


எதுவுமே ஒரு குழுவா இணைஞ்சு செய்யும்போது ஒரு ஊக்கம் கிடைக்கும்,  பலன் நிறைய இருக்கும்.....


எந்த ஒரு பயிற்சியும் தெரிஞ்சிக்கிட்டா போதாது,  செய்துபார்த்தா அதன் முழுபலன் கிடைக்கும்......



இருந்த இடத்திலேயே பயிற்சி, 


பணம் எதுவும் செலவில்லை 


உங்க பல் பலம்பெற, சக்திபெற பயிற்சி....


யாரோ உங்களுக்காக இவ்ளோ மெனக்கெடும்போது....


உங்க நலனுக்காக நீங்க ஏன் ஒரு நாளில் 10 நிமிடம் ஒதுக்க கூடாது.....


சுவர் இருந்தாதான் சித்திரம் வரைய முடியும்


இங்கே சுவர்....நம் உடல்.....


நம்கையில் கோடி ரூபாய் இருந்தாலும்....


ஆயிரம் சுற்றம் சூழ இருந்தாலும்....


உடல் ஒத்துழைக்க மறுத்தால் ஒன்னும் செய்யமுடியாது......


வாழ்நாளில் பல் மருத்துவமனைக்கு போனவங்களுக்கு தெரியும்.....பல்லின் முக்கியத்துவம்.....


இந்த பயிற்சியை எல்லோரும் இணைந்து செய்யலாம்....


தேவையான பொருட்கள்.....👇


* கல் உப்பு (தூள்)

* மஞ்சள் தூள் 

* மூலிகை பல்பொடி 

* நல்லெண்ணெய் 100 ml

* கரிசலாங்கன்னி இலை 

* கடுக்காய் பொடி



நன்றி 🙏 வாழ்த்துக்கள் 💐

பிரண்டை சோற்றுக் கற்றாழை கரைசல்

 பிரண்டை சோற்றுக் கற்றாழை கரைசல்

 

இயற்கை Vs செயற்கை

 

இயற்கை விவசாயத்தில் பூச்சி மற்றும் நோய்ககட்டுப்பாடு என்பது அனைவரும் எதிர்கொள்ளும் சவாலான விஷயம். இரசாயன விவசாயத்தில் இந்த சவாலினை சமாளிக்க முதல் தேர்வே பூச்சிக்கொல்லி எனும் நஞ்சே. ஆனால் இதனால் வரும் பின்விளைவுகள் என்பது நாம் எண்ணிப்பார்க்க இயலாத ஒன்று.  இயற்கை விவசாய முறையில் இவை அனைத்தும் சாத்தியமே. நாம் நமது வீட்டின் அருகிலேயே எளிதாக கிடைக்கும் பொருட்களைக் கொண்டே இதற்கு தீர்வு காண முடியும்.

 

பிரண்டை கசாயம்

 

பயிர்களில் சேதத்தை விளைவிக்கும் அசுவினி, இலைப்பேன் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் பிரண்டை கசாயம் மிக குறைந்த செலவில் தயாரிக்கும் முறையை மேட்டூரைச் சேர்ந்த ஈஷா இயற்கை விவசாயி திரு குணசேகரன் விவரிக்கிறார்.

 

தேவையான பொருட்களும் செயல்முறைகளும்

 

சிறு துண்டுகளாக்கப்பட்ட பிரண்டை - 3கிலோ 

சோற்றுக் கற்றாழை - 3கிலோ 

கோமியம் 10 லிட்டர் 

புகையிலை ½ கிலோ 

மஞ்சள் தூள் 25 கிராம் 

பெருங்காயம் 25 கிராம் 

 

துண்டுகளாக்கப்பட்ட பிரண்டை மற்றும் சோற்றுக் கற்றாழையை உரலில் இட்டு நன்கு இடித்து கொள்ள வேண்டும். துண்டுகளாக்கப்பட்ட புகையிலையையும் சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் மஞ்சள், பெருங்காயத்தூள் மற்றும் கோமியத்துடன் மூன்று நாட்கள் ஊறவைக்கவும். மூன்று நாட்கள் கழித்து கரைசல் தெளிக்க தயாராகிவிடும். தினமும் 5 முதல் 10 முறை கடிகார சுற்றில் குச்சியால் கலக்கி விடவேண்டும்.

 

பயன்படுத்தும் முறை

 

பாதிப்பு உள்ள பயிருக்கு ஒரு டேங்க்கிற்கு தலா 300 மில்லி வீதம் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். 

 

பயன்கள்

 

• அசுவினி இலைப்பேன் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தும். 

• வைரஸ் மற்றும் பூஞ்சை தாக்குதலை தீர்க்கும். 

• பூக்கள் பூக்கும் தன்மையை அதிகரிக்கும்.