படித்ததில் பிடித்த,யோசிக்க வைத்த பதிவு
1. சந்தையில் காய்கறிகளை விற்ற காசில் பாதி டெம்போ வாடகைக்கே சரியா போகுது தம்பி.
மாட்டுவண்டி எங்க தாத்தா ???
மாடு இல்லையே பா..!!
2. நிலத்தை ஒருமுறை உழுது போட டிராக்டருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 1000 தர வேண்டியிருக்கு மாப்ளே.
ஏர் வைத்து உழுது பார்க்கலாம் ல மாமா ?
மாடு இல்லையே பா..!!
3. DAP (Di ammonium phosphate), Urea, Phosphorous னு ஆயிரக்கணக்கில் செலவு ஆகிறது.
மாட்டு எரு, பஞ்சகவ்யம், அமிர்தகரைசல்னு பயன்படுத்தலாமே ?
மாடு இல்லையே பா..!!
4. நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு எரிவாயு செலவே மாதம் ரூ.700 ஆகிறது.
மாட்டு சாணத்தை வைத்து இயங்கும் Gobar gas plant என்ன ஆயிற்று ?
மாடு இல்லையே பா..!!
5. நஞ்சு னு தெரிந்தும் ஏதேதோ ரசாயனங்களை வீட்டிற்குள் தெளிக்கிறீர்களே -
மாட்டு சாணம் பயன்படுத்தலாமே ??
மாடு இல்லையே பா..!!
*********
உழவெனும் வாழ்வியலில் மாட்டின் பங்கினை உணர்ந்த ஆங்கிலேயர்கள், "மாடுகளை" ஒழிக்காமல் வருடம் முழுவதும் உழவு செய்யத்தக்க பருவ சூழல்களை கொண்ட இந்நிலப்பரப்பில் உழவை வைத்து வணிகம் செய்ய இயலாது என்று திட்டமிட்டு 19ம் நூற்றாண்டிலேயே இந்நிலப்பரப்பு முழுவதும் பசுவதை கூடங்கள் (cow slaughter houses) அமைத்து (சுதந்திரத்துக்கு பிறகும் இருந்தன, இன்றளவும் இருக்கின்றன; மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா 2வது இடம் as per 2019 data) - பின்னர் அதற்கான மாட்டிறைச்சி சந்தையும் சமகாலத்தில் மேற்கத்திய நாடுகளில் உருவாக்கப்பட்டன.
விவசாய புரட்சியில் மாட்டின் மீதான நமது தேவைகளை குறைக்க உரம், டிராக்டர் என அனைத்திற்கும் இந்த ஒன்றிய அரசால் மானியம் வழங்கப்பட்டது. மாடு என்னும் உயிரினம் பின்னர் பால் உற்பத்திக்காக மட்டுமே பயன்படுத்த பட்டது. அதுவும் கிடாரி (பெண்) கன்றுகள் மட்டுமே வளர்க்கப்பட்டது. காளை கன்றுகள் எல்லாம் அடி மாட்டிற்குத்தான். இனப் பெருக்கத்திற்கு எதை பயன்படுத்துவோம் என்ற சிந்தனை இன்றி காளைகளை விற்றதால் இன்று சினை ஊசியை வைத்து பெரும் லாபம் ஈட்ட காத்திருக்கிறது வணிக கும்பல்..
சினை ஊசி ஏன் போடனும் - இயற்கையாகவே இனப்பெருக்கம் செய்யலாமே ?
காளை மாடு இல்லையே பா..!!
*********
ஒரே ஒரு உயிரினத்தை தான் நம்மிடம் இருந்து பிரித்தார்கள் - மொத்த தற்சார்பும் Close.
அனைவரும் சிந்திக்கவே இந்த பதிவு.... விழிப்போம் உயர்வோம்....👍🏼